ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் குழந்தைகளின் எடை அதிகரிக்கும் அபாயம்! எப்படி தடுப்பது?

குளிர்காலத்தில் குழந்தைகளின் எடை அதிகரிக்கும் அபாயம்! எப்படி தடுப்பது?

 குழந்தை பருவத்தில் உடல் பருமன்

குழந்தை பருவத்தில் உடல் பருமன்

பெற்றோர்களை பார்த்து தான் குழந்தைகள் கற்று கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை நீங்கள் முதலில் அவர்களுக்கு முன் பின்பற்றி எடுத்துக்காட்டாக இருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பருவத்தில் உடல் பருமன் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது பெரியவர்களுக்கே பேராபத்தை ஏற்படுத்தும் நிலையில் குழந்தைகளில் உடனடி மற்றும் எதிர்கால ஆரோக்கிய அபாயங்கள் ஏற்பட வழிவகுக்கிறது.

உடல் பருமன் என்பது நீரிழிவு அபாயங்களை ஏற்படுத்துவதை தவிர, குழந்தைகளில் உயர் ரத்த அழுத்தம் குறைந்த தன்னம்பிக்கை, பாடி டிஸ்மார்ஃபியா மற்றும் க்ளினிக்கல் டிப்ரஷன் உள்ளிட்ட பல நிலைமைகள் ஏற்பட வழிவகுக்கிறது. மரபியல், லைஃப் ஸ்டைல், நடத்தை, சமூக காரணிகள் மற்றும் சில மருந்துகள் உட்பட பல காரணிகள் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றன.

அதேபோல குளிர்காலத்தில் குறைந்த உடல் செயல்பாடு, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது, ஜங்க் ஃபுட்ஸ்களை அதிகம் சாப்பிடுவது மற்றும் குறைவான நேரமே சுறுசுறுப்பாக இருப்பது உள்ளிட்டவற்றால் குழந்தைகள் வெயிட் போடுவது இயற்கையே. எனினும் உடல்பருமன் என்பதை தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. குளிர்காலத்தில் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பை தடுக்க உதவும் டிப்ஸ்களை பிரபல குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுக்ரித் குமார் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- கூடுதல் எடையை எதிர்த்து போராட சிறந்த வழி உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது. மனதை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நிம்மதியாக தூங்க, மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. குழந்தைகளை நீண்ட நேரம் டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்க்க அனுமதிக்காதீர்கள். காலை எழுந்தவுடன் ஒரு அரை மணி நேரம் வாக்கிங் போக ஊக்குவிக்கவும்.
- ஆரோக்கியமான எடைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதை விடுத்தது ஜங்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், குக்கீஸ், கிராக்கர்ஸ், சுகரி ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் சூடான சூப்ஸ், பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட வைக்க வேண்டும்.
- குளிர்காலத்தில் கீரை வகைகளுடன் கூடிய சூப்ஸ்களை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கொய்யா, நார்ச்சத்து மிக்க கேரட் உள்ளிட்டவற்றை அவர்கள் அதிகம் சாப்பிட பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
- பெற்றோர்களை பார்த்து தான் குழந்தைகள் கற்று கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை நீங்கள் முதலில் அவர்களுக்கு முன் பின்பற்றி எடுத்துக்காட்டாக இருங்கள். ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதில் இருந்து ஒன்றாக உடற்பயிற்சி செய்வது வரை உங்களது குழந்தைகளுக்கு ரோலை மாடலாக இருந்து அவர்களையும் அதை செய்ய ஊக்குவியுங்கள்.
- குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லா சூழலை ஏற்படுத்த பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். அதிகம் சாப்பிடுவது மனரீதியான பாதிப்புகளை தூண்டக்கூடும். எனவே ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களின் தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள்.
- குழந்தைகளை வெளியூர் பயணங்களுக்கு அழைத்து செல்கிறீர்கள் என்றால் போகவிருக்கும் இடத்தின் கிளைமேட்டிற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிடுங்கள். போதுமான கை சுகாதாரத்தை அவர்களுக்கு பராமரித்து, உரிய தடுப்பூசிகளை எடுத்து கொண்டுள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்துங்கள். அவர்களின் உடலை பாதுகாக்க மற்றும் எடை அதிகரிப்பை தடுக்க லேயர் உடைகளை அணிவிக்கவும்.
- பெயின் கில்லர்ஸ், ஸ்டெராய்ட்ஸ், பீட்டா-ப்ளாக்கர்ஸ் போன்ற சில மருந்துகள் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.
- வழக்கமான அடைப்படையில் குழந்தைகளை மருத்துவரிடம் கூட்டி செல்வது மற்றும் வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் BMI-ஐ சரிபார்ப்பது அவசியம்.
First published:

Tags: Child Care, Diet tips, Obesity