8 வயது பெண் குழந்தையிடம் கர்ப்ப பரிசோதனை செய்யும் கருவியைப் பற்றி பேசலாமா..?

மாதிரி படம்

ஒரு பெற்றோராக இந்த பாலியல் சார்ந்து பேசக்கூடாத விஷயங்களை குழந்தைகளிடம் பேசுவதற்கு தயக்கமாக இருக்கலாம்.இது போன்ற விஷயங்களை குழந்தைகள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பானது.

  • Share this:
கேள்வி :  டிவி பார்த்துவிட்டு என் 8 வயது மகள் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியை (pregnancy kit) பற்றி கேள்வி எழுப்புகிறாள்.. அப்படி என்றால் என்ன என கேட்கிறாள்.. இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை...

பதில் : இதற்கு ஏன் பயப்படுகிறீர்கள்..இயல்பாகவே அதன் பயன்பாட்டை கூறலாமே...அவளிடம் கர்பம் பரிசோதிக்கும் கருவி என்பது பெண்களின் வயிற்றில் குழந்தை இருக்கிறதா.. இல்லையா என கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி என எளிமையாகவே சொல்லலாம்.

மேலும் ஆழமான விளக்கத்தை தரவேண்டும் எனில் இவ்வாறு சொல்லலாம்...அவர்களுடைய ஆண்டுத் தேர்வை ஒப்பிட்டு கூறுங்கள். அதாவது அவர்களுடைய பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு செல்ல வேண்டும் எனில் அவர்களுடைய கற்றல் அறிவை தெரிந்துகொள்ள ஆண்டுத் தேர்வு நடத்துவது போல்தான் பெண்கள் கர்பம் தரிக்கிறார்கள் எனில் அவர்களுக்குள் நடக்கும் ரசாயண மாற்றங்களைக் கண்டறிய இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கருவியானது வயிற்றுக்குள் குழந்தை உருவாகியிருக்கிறதா இல்லையா என்பதை சொல்லிவிடும் என்று கூறுங்கள்.ஒரு பெற்றோராக இந்த பாலியல் சார்ந்து பேசக்கூடாத விஷயங்களை குழந்தைகளிடம் பேசுவதற்கு தயக்கமாக இருக்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...இது போன்ற விஷயங்களை குழந்தைகள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பானது.

ஆறு வயதைக் கடக்கும் உங்கள் பிள்ளை பாலியல் சார்ந்த கேள்விகளை கேட்கிறார்களா..? இந்த வயதில் பாலியல் கல்வி சரியா..?

உங்கள் மூலம் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் பாசிடிவாகவும் ,ஹெல்தியான முறையிலும் சரியான உதாரணங்களுடன் கற்றுத்தர முடியும். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தாலும் உங்களிடம் வெளிப்படையாக பேசக்கூடும். அவர்களும் உங்களிடம் பாலியல் சார்ந்த சந்தேகங்களைப் பேச சௌகரியமாக உணர்வார்கள். இல்லையெனில் தவறான புரிதலை மற்றவர்கள் சொல்லக் கேட்டோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தெரிந்துகொள்வார்கள்.அதேபோல் பாலியல் தொடர்பான உரையாடல்களை தொடங்கும் முன் அவர்களுக்கு அதுபற்றிய புரிதல் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு சில கேள்விகளை கேளுங்கள்..உதாரணத்திற்கு நீ அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்..? நீ சொல்லு இது எப்படி நடக்கிறது..? அப்படி செய்வதால் என்ன நடக்கும்..? அல்லது உனக்கு இதைப்பற்றி எந்த அளவு தகவல்கள் தெரியும் அதை சொல்லு பார்க்கலாம்..இப்படியான கேள்விகளை முன் வைத்தால் அவர்களுடைய புரிதலை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதனால் நீங்கள் பாலியல் தொடர்பான கலந்துரையாடலை நிகழ்த்த உதவியாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இடையில் வெளிப்படையான உரையாடலை உருவாக்குங்கள். இதனால் எதிர்காலத்திலும் அவர்கள் எந்த சந்தேகத்தையும் வெளிப்படையாக உங்களிடம் பேசுவார்கள். குழந்தை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published: