குழந்தைகளை கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், பண்பானவர்களாகவும் வளருவார்கள். அதே சமயம், பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பெயரில், எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் சில சமயம் விபரீத முடிவுகளை அவர்கள் எடுக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று, அண்மையில் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. 10 மற்றும் 15 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொண்ட தாய் ஒருவர், அண்மையில் மூத்த மகனை கடுமையாகத் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, கோபித்துக் கொண்டு அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இரண்டு நாட்கள் தேடியும், காணாமல் போன சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக அந்தச் சிறுவனின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் அந்தச் சிறுவன் இத்தகைய முடிவை எடுத்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடரும் தற்கொலைகள்
நொய்டா மட்டுமல்ல, நாடெங்கிலும் பெற்றோர் திட்டுவதால் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தெற்கு டெல்லி, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் இதுபோல இளம் சிறுவர், சிறுமியர்கள் அண்மைக்காலங்களில் தற்கொலை செய்துள்ளனர். பெரும்பாலும், ஆன்லைன் விளையாட்டை கண்டிப்பதால் இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
அச்சம் கொள்ளும் பெற்றோர்
குழந்தைகளின் தற்கொலை குறித்த செய்திகள் தொடர்பாக வாட்ஸ் அப் குழு ஒன்றில் விவாதம் நடைபெற்றது. அப்போது, “இந்தச் செய்தியை படித்த பிறகு, எனது மகனை கண்டிக்க எனக்கு அச்சமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார். பெரும்பாலான பெற்றோருக்கு இதே சிந்தனை தான் இருக்கிறது. இதனால், குழந்தைகளின் கடுமையான தவறுகளைக் கூட கண்டிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எல்லா குழந்தையும் விபரீத முடிவை எடுக்குமா..?
பெற்றோரால் கண்டிக்கப்படும் அனைத்துக் குழந்தைகளும் விபரீத முடிவுகளை எடுப்பதில்லை. சுயமரியாதையை அதிகம் எதிர்ப்பார்க்கும் குழந்தைகள், மன பதற்றம் அடையும் குழந்தைகள், ஏற்கனவே மனச்சோர்வு கொண்ட குழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத குழந்தைகள் போன்றோர் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழப்பம், அச்சம் போன்றவையும் காரணம்
உங்கள் குழந்தைகள் எதையும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக, மிகுந்த ஆவேசம் அடைபவர்களாக அல்லது மனம் உடைந்து அழுபவர்களாக இருப்பார்கள். சிலருக்கு மிகுதியான குழப்பம் அல்லது தோற்றுவிடுவோம் என்ற அச்சம் ஆகியவை இருக்கும். இதுபோன்ற சூழலில் உள்ள குழந்தைகளை பெற்றோர் திட்டும்போது, அவர்கள் அதை நினைத்து, நினைத்து வருத்தம் கொள்கின்றனர்.
பெற்றோர்களும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்
பெற்றோருக்கு உரிய கடமைகளை செய்வது சற்று சவால் மிகுந்த காரியம் தான். எல்லா சமயத்திலும் நமது செயல்கள் சரியானவை என்று கூறிவிட முடியாது. சில சமயங்களில் நாமே தேவையின்றி குழந்தைகளை கண்டிப்பவர்களாக இருப்போம். ஆகவே, குழந்தைகளின் பிரச்சினைகள் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டு, அவர்களுக்கு எதையும் நிதானமாக புரிய வைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting Tips, Teenage parenting