• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

குழந்தைகள் சர்க்கரை சாப்பிட்டாலே நீரிழிவு வராது. ஆனால் அவர்கள் சாப்பிடும் அதிக சர்க்கரை காலப்போக்கில் பெரிய ரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

  • Share this:
உலகம் முழுவதும் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் வாழ்க்கை முறை தொடர்புடைய இந்த நோய் உலக மக்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் இது கவலைக்குரியது விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு கூட நீரிழிவு இருப்பதை கண்டறிந்துள்ளது தான். இதனிடையே நீரிழிவு நோய் பற்றிய கட்டுக்கதைகளும் ஏராளமாக உள்ளன.பொதுவாகவே குழந்தைகள் சாக்லேட்கள், மிட்டாய்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

அவற்றை தேடி தேடி தின்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். குழந்தைகள் இனிப்பு சாப்பிடுவதை நீங்கள் எவ்வளவு கன்ட்ரோல் செய்ய நினைத்தாலும் அது சற்று கடினமான ஒன்று தான். இந்த நிலையில் நீரிழிவு நோய் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சர்க்கரையை சாப்பிடுவதால், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்பது. நீரிழிவு பற்றியும் சர்க்கரை நுகர்வு பற்றியும் ணெண்ங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே..

* சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது: டைப் 1 நீரிழிவு நோயை பொறுத்தவரை சர்க்கரை நுகர்வுடன் தொடர்புடையது அல்ல என்ற விஷயம் பலருக்கு தெரிவதில்லை. டைப் 1 நீரிழிவு நோய் ஒரு தன்னுடல் தாக்க நோயாகவே குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் உடல் இன்சுலின் சுரக்கும் திறனை இழக்கிறது. டைப் 1 நீரிழிவு ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை மற்றும் இது வருவதை தடுக்கவும் வழி இல்லை. அதே சமயம் டைப் 2 நீரிழிவு சர்க்கரையை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. குழந்தைகளை பொறுத்தவரை ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது (சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது இல்லாத), குறிப்பாக அவர்கள் எடையை அதிகரிக்க செய்யும் உணவு பழக்கம் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.

* நீரிழிவு வகைகள்: நம்மில் பெரும்பாலோர் டைப் 1, டைப் 2 நீரிழிவு னாய் வகைகளை பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கும் கூட டைப் 2 நீரிழிவு ஏற்படலாம், அதுவும் 2 வகைகளுக்கு மேல் இருக்கலாம் என்பது தெரியாது. நீரிழிவு நோயின் 4 புதிய வகைகள்:

1. மெச்சூரிட்டி ஆன்செட் டயாபட்டீஸ் ஆஃப் யங், 2. ஸ்டீராய்டு இன்க்ளூடட் டயாபட்டீஸ், 3. சிஸ்டிக்-ஃபைப்ரோஸிஸ் ரிலேட்டட் டயாபட்டீஸ், 4. டைப் 1.5 டயாபட்டீஸ்.



* பரம்பரையாக வருமா.? : பல பெற்றோர்கள் தங்களிடமிருந்து நீரிழிவு குழந்தைகளுக்கு செல்லுமா என்பது குறித்த கவலையில் இருக்கும் போது, , மரபியல் ஒரு காரணமாக இருக்க முடியும் ஆனால் அது நீரிழிவு நோயின் வகையைப் பொறுத்தது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். இருப்பினும், ஒரு குழந்தைக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை தீர்மானிப்பதில் உணவு மற்றும் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே வீட்டில் இருக்கும் அனைவரும் ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்றி சாப்பிடும் நிலையில் பெற்றோருக்கு டைப் 2 நீரிழிவு இருக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கும் இது வரலாம்.

12 முதல் 18 வயது குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம்.. மருத்துவர்கள் தகவல்

* குழந்தைகளுக்கு சர்க்கரை எவ்வளவு கெட்டது? : குழந்தைகள் சர்க்கரை சாப்பிட்டாலே நீரிழிவு வராது. ஆனால் அவர்கள் சாப்பிடும் அதிக சர்க்கரை காலப்போக்கில் பெரிய ரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் குழந்தை அதிகமாக சர்க்கரையை உண்பது அவர்களின் உணர்ச்சி மற்றும் ஆக்டிவிட்டியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் சர்க்கரையை குழந்தைகள் எடுத்து கொள்வது குறித்த அச்சம் வேண்டாம். ஏனென்றால் இவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை சர்க்கரையின் ஆதாரங்கள் ஆகும்.



 

டைப் 2 நீரிழிவு உள்ள குழந்தைகள் தவிர்க்க வேண்டியவை:

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உடல் எடை உள்ளிட்டவை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் தர உதவும்.

* ஜூஸ், சோடா, இதர இனிப்பு பானங்கள்

* சிப்ஸ், குக்கீகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்கள்

* வொயிட் பிரெட், அரிசி, பாஸ்தா

* வறுத்த உணவுகள், கொழுப்புள்ள சிவப்பு இறைச்சி, முழு கொழுப்புள்ள பால் பொருட்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: