Home /News /lifestyle /

கோவிட் தடுப்பூசி போட்ட அம்மாக்களிடமிருந்து தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு ஆன்டிபாடிகளை தர முடியுமா..? ஆய்வில் தெரிந்த உண்மை

கோவிட் தடுப்பூசி போட்ட அம்மாக்களிடமிருந்து தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு ஆன்டிபாடிகளை தர முடியுமா..? ஆய்வில் தெரிந்த உண்மை

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள தங்கள் தாய்மார்களிடமிருந்து COVID-19-க்கு  எதிரான ஆன்டிபாடிகளை பெற முடியும்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள தங்கள் தாய்மார்களிடமிருந்து COVID-19-க்கு  எதிரான ஆன்டிபாடிகளை பெற முடியும்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள தங்கள் தாய்மார்களிடமிருந்து COVID-19-க்கு  எதிரான ஆன்டிபாடிகளை பெற முடியும்

கொரோனாவின் ஓமைக்ரான் வேரியன்ட் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், நம் நாட்டில் இன்னும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்வதற்கான பணிகள் துவங்கவில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டு கொண்டிருப்பதால் புதிதாக பிறக்கும் குழ்நதைகள் தொற்றிலிருந்து எவ்வளவு பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் Obstetrics & Gynecology journal இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள தங்கள் தாய்மார்களிடமிருந்து COVID-19-க்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற முடியும், இது குழந்தைகளுக்கு வைரஸுக்கு எதிராக குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இந்த புதிய ஆய்வில் கோவிட்-19க் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் SARS CoV-2 ஆன்டிபாடிகளை தாய்ப்பாலின் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றலாம் என்பது தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் மல மாதிரிகளில் SARS-CoV-2 ஆன்டிபாடிகளை முதல் முதலாக இந்த ஆராய்ச்சி கண்டறிந்து உள்ளது என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் விக்னேஷ் நாராயணசுவாமி கூறி இருக்கிறார். இவர் மூத்த ஆய்வாசிரியர் கேத்லீன் அர்காரோவின் தாய்பால் ஆராய்ச்சி ஆய்வகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் துறையின் சுற்றுச்சூழல் நச்சுயியல் பேராசிரியராகவும் இருக்கிறார்.



இந்த ஆய்வு தொடர்பாக மேலும் பேசிய இவர், ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் பெண்கள் புதிதாக பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்குமா என்பதை அறிய விரும்புகிறார்கள். இந்நிலையில் எங்கள் ஆய்வு தாய்ப்பாலின் மூலம் ஆன்டிபாடிகள் குழந்தைகளுக்கு மாற்றப்படுகின்றன என்பதை காட்டுகிறது. இந்த உறுதியான ஆதாம் தடுப்பூசியைப் பெற்ற பிறகும் பெண்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதற்கான உந்துதலாக இருக்கும் என்றார்.

செக்ஸ், பீரியட்ஸ் பற்றி கேட்கும் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும்..?

நாராயணசுவாமி மற்றொரு முக்கியமான எடுத்துக்காட்டையும் குறிப்பிட்டு உள்ளார். குழந்தைகளில் வயதைப் பொருட்படுத்தாமல் - 1.5 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரை ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டதாக கூறி இருக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கான பரிசோதனையில் பங்கேற்ற பாலூட்டும் பெண்கள் ஜனவரி - ஏப்ரல் 2021-க்கு இடையில் அவர்கள் COVID தடுப்பூசியை பெற்றனர். இவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன், முதல் டோஸுக்குப் பிறகு 2 முதல்3 வாரங்கள் மற்றும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 3 வாரங்கள் வரை தாய்ப் பால் மாதிரிகளை வழங்கினர்.



தவிர முதல் டோஸுக்கு 19 நாட்களுக்கு பிறகு மற்றும் இரண்டாவது டோஸுக்கு பின் 21 நாட்களுக்குப் பிறகும் அவர்கள் ரத்த மாதிரிகளையும் கொடுத்தனர். தொடர்ந்து தாய்மார்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு 21 நாட்களுக்கு பின் குழந்தைகளின் மல மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தாய்ப்பாலின் தொற்றுநோய்க்கு முந்தைய மாதிரிகள், உலர்ந்த ரத்தப் புள்ளிகள் (dried blood spots) மற்றும் குழந்தை மலம் ஆகியவை ஆய்வுக்கான விஷயங்களாக பயன்படுத்தப்பட்டன.

ஆய்வில் RBD எதிர்ப்பு IgG மற்றும் RBD எதிர்ப்பு IgA ஆன்டிபாடிகள் முறையே 33% மற்றும் 30% குழந்தை மல மாதிரிகளில் கண்டறியப்பட்டன. அதே போல தடுப்பூசியால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண்களுடைய குழந்தைகளின் மலத்தில் அதிக ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான பெண்களின் தாய்ப்பாலில் (87%) mRNA கோவிட்-19 தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடுவதற்கான ஹியூமரல் மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு பதில்கள் (cellular immune response) இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breastfeeding, Vaccine

அடுத்த செய்தி