தாய்ப்பால் நிறம் மாறுவது ஏன்? காரணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

தாய்ப்பால் நிறம் மாறுவது ஏன்? காரணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

மாதிரி படம்

தாய்ப்பாலின் நிறம் பொதுவாக மஞ்சள், வெள்ளை, கிரீம் கலர், பழுப்பு அல்லது நீல நிறத்தில் மாறும். முதல் குழந்தை பெற்றால் இந்த நிற மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று நீங்கள் சிறிது நேரம் பீதியடையக்கூடும்.

  • Share this:
குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரமாகும். தாய்ப்பால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தாய்ப்பாலின் நிறம் பொதுவாக மஞ்சள், வெள்ளை, கிரீம் கலர், பழுப்பு அல்லது நீல நிறத்தில் மாறும். ஆனால் சில நேரங்களில் நாள் முழுவதும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது நிறம் மாறுகிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நீங்கள் முதல் குழந்தை பெற்றால் இந்த நிற மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று நீங்கள் சிறிது நேரம் பீதியடையக்கூடும். அது ஏன் நிகழ்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.,

தாய்ப்பாலின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் :

தாய்ப்பாலின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு பொதுவான காரணம் உணவு மற்றும் பானம் உட்கொள்ளல் தான். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் தாய்ப்பாலுக்கு பச்சை, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கலாம். வளர்ந்து வரும் குழந்தையின் தேவைக்கு ஏற்றவாறு வெவ்வேறு கட்டங்களிலும் நிறம் மாறுகிறது.



ஒவ்வொரு கட்டத்திலும் மாறலாம் :

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் தாய்ப்பாலின் நிறம் மாறுகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றெடுத்த ஒரு வாரம் அல்லது சில நாட்களில் நிகழ்கின்றன. தாய்ப்பாலின் நிறத்தில் ஏற்படும் சாதாரண மாற்றம் பின்வருமாறு:

கொலஸ்ட்ரம்

கொலஸ்ட்ரம் என்பது குழந்தை பிறந்த பிறகு வரும் முதல் பால் என்று குறிப்பிடப்படுகிறது. சீம்பால் என்றும் அழைப்பார்கள். பிரசவத்திற்குப் பிறகு ஆரம்ப 5 நாட்களில் உடல் குறைந்த அளவிலான கொலஸ்ட்ரமை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த பால் அதிக சத்தான மற்றும் ஆன்டிபாடிகள் நிறைந்துள்ளது. கொலஸ்ட்ரம், பொதுவாக, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் அது தெளிவான தண்ணீராகவும் இருக்கலாம். முதல் கொலஸ்ட்ரம் பாலில் அதிக அளவு பீட்டா கரோட்டின் பாலிற்கு அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தை தருகிறது.

வெவ்வேறு நிலைகளில் பாலின் நிறத்தில் மாற்றங்கள் :

இடைநிலை பால்

ஒரு வாரத்திற்குப் பிறகு, வளர்ந்து வரும் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடல் அதிக அளவு உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது குழைந்த பிறப்பிற்கு இடையில் உற்பத்தி செய்யப்படும் இடைநிலை பால் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டம் கர்ப்பத்திற்குப் பிறகு 2 வாரங்களுக்கு நீடிக்கும் மற்றும் இந்த பால் பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.



முதிர்ந்த பால்

2 வாரங்களுக்கு பிறகு, உங்கள் உடல் முதிர்ந்த பால் கட்டத்தை அடைகிறது. இந்த நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலின் நிறங்கள் கொழுப்பு உள்ளடக்கத்தை பொறுத்தது. இது இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று மெல்லியதாகவும், குறைந்த கொழுப்புச் சத்துள்ளதாகவும் இருக்கும். இது தெளிவான அல்லது நீல நிறத்தில் தோன்றுகிறது. இரண்டாவது வகையில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது மற்றும் பால் க்ரீமியராக மாறும், இது ஹிண்ட் மில்க் என்று அழைக்கப்படுகிறது. ஹிண்ட் மில்க் தடிமனாகவும், வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

நிற மாற்றங்களுக்கான பிற காரணங்கள்

வெவ்வேறு நிலைகளில் தோன்றும் மாற்றங்களைத் தவிர, நீங்கள் எந்த வகையான உணவுகள், மூலிகைகள் அல்லது பானங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து பாலின் நிறமும் மாறுகிறது. இந்த மாற்றமானது உங்கள் குழந்தைகளின் சிறுநீரில் தெரியும்.

பச்சை பால்: கீரை, ப்ரோக்கோலி மற்றும் மூலிகைகள் போன்ற நிறைய பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் பால் சற்று பச்சை நிறமாக மாறும்.

இளஞ்சிவப்பு, ஆரஞ்சு அல்லது சிவப்பு: சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமான பழங்கள் உங்கள் தாய்ப்பாலுக்கு இந்த நிறத்தை கொடுக்கலாம். அதிக பீட்ரூட், கேரட் இதற்கு முக்கியமாக காரணமாகின்றன.

பழுப்பு: உங்கள் தாய்ப்பால் பழுப்பு, அல்லது அடர் ஆரஞ்சு நிறமாகத் தோன்றினால், அது உங்கள் பால் குழாய்களில் உள்ளே இருந்து ரத்தம் கசிவதால் ஏற்படலாம்

கருப்பு பால்: கருப்பு பால் அடிப்படையில் ஆண்டிபயாடிக் மினோசின் காரணமாகும், இது சருமத்தை கருமையாக்கும். குழந்தைக்கு பாலூட்டும் போது இந்த ஆண்டிபயாடிக் பரிந்துரைக்கப்படுவதில்லை.



நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும்..?

பெரும்பாலும் உங்கள் தாய்ப்பாலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது நீங்கள் உண்ணும் உணவுகள் காரணமாகும். நீங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. இருப்பினும், பால் கருப்பு நிறத்தில் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இது தவிர, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பால் வந்தாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மார்பகம் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பாலை உற்பத்தி செய்தால், அது மார்பக தொற்று காரணமாகவும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

 
Published by:Sivaranjani E
First published: