Black Fungus : கருப்பு பூஞ்சை தொற்று குழந்தைகளுக்கு எளிதாக பரவுமா..? பெற்றோர்களே உஷார்..!

கருப்பு பூஞ்சை

பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று விளக்கமளித்துள்ளார். இதனால் தான் குழந்தைகளுக்கு எந்தவொரு நோய் தொற்றுக்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.

  • Share this:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில், அது ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து இன்னும் நிறைய மக்கள் மீளவில்லை. அதற்குள் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உள்ளிட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்களால் மூன்றாவது அலை நம்மை நெருங்கும் வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே செல்வதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனை அடுத்து தங்கள் மற்றும் தங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை பாத்துக்க தேவையான வழிகளை தேடி வருகிறர்கள்.

கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை நம்மால் புறக்கணித்து செல்ல முடியாது. சுகாதார நிபுணர்கள் இவற்றை பற்றியெல்லாம் விவாதித்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான வழிகளைக் கூட பரிந்துரைத்தாலும், பெற்றோர்கள் மத்தியில் இன்னும் கவலை நீடிக்கிறது. இதற்கு காரணம் கோவிட் வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைத்து மிகவும் பலவீனப்படுத்துகிறது, இதனால் வேறு சில தொற்றுகள் மற்றும் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பது தான்.

மும்பையின் வடகிழக்கு புறநகர் பகுதியான முலுண்ட் பகுதியில் அமைந்திருக்கும் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் குழந்தை மருத்துவரான டாக்டர் ஜெசல் ஷெத் பேசுகையில், 'கரும்பூஞ்சை தொற்று' என்பது கடுமையான கோவிட் நோயாளிகளில் சமீபத்தில் காணப்பட்ட ஒரு அரிய வகையான பூஞ்சை தொற்று. இந்த தொற்றானது பெரும்பாலும் ரத்த நாளங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹைஃபாக்களால் வகைப்படுத்தப்படுகிறது.நீரிழிவு நோயாளிகள் அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தானது இந்த கரும்பூஞ்சை தொற்று என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய டாக்டர் ஜெசல் ஷெத், பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று விளக்கமளித்துள்ளார். இதனால் தான் குழந்தைகளுக்கு எந்தவொரு நோய் தொற்றுக்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

Children Health | காய்கறிக்கு 'நோ' சொல்லும் குழந்தைகள்… சாப்பிட வைக்க ஐடியா இதோ!

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் :

ஒருவேளை எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தைக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டிருந்தால், மேற்கொண்டு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க சில அறிகுறிகள் ஏற்பட்டால் அதை புறக்கணிக்காமல் பெற்றோர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவலி மற்றும் நெற்றியில் வீக்கம், முகத்தின் ஒரு பக்கத்தில் வீக்கம், மூக்கை சுற்றி கருப்பாக ஓடு போன்று உருவாவது, மங்கலான பார்வை அல்லது பார்வையிழப்பு, மார்பு வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாச சிக்கல்கள் உள்ளிட்ட அறிகுறிகள் குழந்தைகளிடம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் குழந்தை வயதிற்கு ஏற்ற உயரத்தை அடையவில்லையா..? இந்த உணவுகளில் குறை வைக்காதீர்கள்..!

இது மாதிரியான தொற்றுகளில் இருந்தது பாதுகாப்பாக இருக்க கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதற்கு முன், அடிக்கடி கைகளை கழுவும் மற்றும் சுத்தப்படுத்தும் பழக்கத்தை குழந்தைகளிடையே பெற்றோர்கள் ஊக்குவிக்க மருத்துவர் வலியுறுத்தி உள்ளார். தவிர வீட்டிற்குள் விசிட்டர்கள் வராமல் இருக்குமாறு பார்த்து கொள்வதும் அவசியம். மேலும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், வெளியே விளையாட செல்லாதவாறு பார்த்து கொள்வதும் முக்கியம்.வேறு குழந்தைகளுடன் உங்கள் வீட்டு குழந்தைகள் சேர்ந்து விளையாடும் நேரத்தில் இருவருமே மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதற்கான சிகிச்சையில் மருத்துவ நிலையின் அடிப்படையில் அறுவை சிகிச்சையுடன் ஆன்ட்டி ஃபங்கல் மருந்துகளும் (antifungal medicines) அடங்கும். மேற்கண்ட அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் புறக்கணிக்காதீர்கள் மற்றும் சந்தேகம் இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் பெற்றோர்கள் எடுக்கும் நடவடிக்கை மிக முக்கியமானது என்று டாக்டர் ஷெத் குறிப்பிட்டுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: