ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

யோகா

யோகா

தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், கருத்தரித்தலில் இருக்கும் சிக்கல்கள் பல சரியாகின்றன. கர்ப்பம் மிக எளிதானதாகவும், பிரசவம் இயற்கையாகவும் நிகழ்கிறது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. கர்ப்பம் மற்றும் பிரசவம் இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவற்றைச் சிக்கலானதாகவும், அச்சப்படும் ஒன்றாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

  இந்த நேரத்தில் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா? என்ற சந்தேகம் பல பெண்களுக்கு உள்ளது. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தாய்க்கு நன்மை பயக்கும் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், கருத்தரித்தலில் இருக்கும் சிக்கல்கள் பல சரியாகின்றன. கர்ப்பம் மிக எளிதானதாகவும், பிரசவம் இயற்கையாகவும் நிகழ்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் மருத்துவருடன் ஆலோசனை நடத்திய பின்னர் நீங்கள் யோகா செய்யலாம்.

  கர்ப்பகாலத்தில் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

  1. உங்களை அமைதியாக்க உதவுகிறது

  யோகா உங்களை அமைதிப்படுத்த உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் ஹார்மோன்கன் மாற்றங்கள் நிகழும். பெண்கள் பெரும்பாலும் பதட்டம் , மன அழுத்தம், கோபம் மற்றும் மனநிலை மாற்றம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சுவாசத்தை மையமாகக் கொண்ட பிரமாரி பிராணயாமா உள்ளிட்ட ஆசனங்கள் செய்யலாம். தியானப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தி, மன உளைச்சல் மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது.

  இத்தகைய சூழல் வளரும் குழந்தையின் உயிருக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.2012ம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், கர்ப்ப காலத்தில் யோகா செய்யும் பெண்களுக்கு மன அழுத்தத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

  2. இயல்பாக வைத்திருக்க உதவுகிறது

  தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். யோகா செய்யவதால் மன அழுத்தம் குறைந்து மற்றவர்களுடன் இயல்பாக இருக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் யோகா செய்வது பாதுகாப்பானது, நீங்கள் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் இது உதவுகிறது. மருத்துவ இதழில் 2012ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்பகாலத்தில் யோகா பயிற்சி செய்வது குழந்தையின் எடையை மேம்படுத்தவும், குறைப்பிரசவத்தின் அபாயத்தை குறைக்கவும் உதவும் என்று கூறியது. மேலும் யோகா செய்வதால் இது கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் அபாயமும் குறைகிறது.

  குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் போனால் என்ன காரணம்..? இதோ பதில்...

  3. பிரசவ கால சிக்கலை தீர்க்க

  கர்ப்ப காலத்தில் ஒரு பெண் முதுகுவலி, குமட்டல், தூக்கமின்மை, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் சமாளிக்க மகப்பேறுக்கு முற்பட்ட யோகா உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் யோகா செய்யும் போது, தாயின் உடலின் தசைகள் இயக்கப்பட்டு, இரத்த ஓட்டம் கணிசமாக மேம்படும். சுவாச பயிற்சிகள் குழந்தைக்கும், தாய்க்கும் ஆக்ஸிஜனை வழங்க உதவுகின்றன. தாடாசனம், உட்கட்டாசனம், மர்ஜரி ஆசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் உள்பட கர்ப்பகால யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். யோகப் பயிற்சிகள் செய்து வரும் பெண்களின் உடல் பேறு காலத்துக்குப் பிறகு விரைவில் பழைய நிலையை அடைகிறது.

  4. பிரசவத்திற்கு தாயை தயார்படுத்துகிறது

  பிரசவத்தை எதிர்கொள்வது தாய்மார்களுக்கு பயமாக இருக்கும், குறிப்பாக முதல் முறையாக பிரசவிக்கும் பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் பல்வேறு யோகா ஆசனங்கள் ஒரு தாயை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரசவத்திற்கு தயார் செய்ய உதவுகிறது. யோகா பயிற்சி இடுப்புகளை இலகுவாக்கி கால்களை வலுப்படுத்த உதவுகிறது, இதனால் பிரசவத்தின்போது வெவ்வேறு நிலைகளில் இருப்பதை எளிதாக்குகிறது. எனவே பிரசவத்தின்போது வலி குறையும். எனவேகர்ப்பகாலத்தில் யோகா பயிற்சி செய்வது பிரசவத்தின் போது மிகவும் பயனளிக்கும்.

  5. கர்ப்பகால வலிகளை எளிதாக்குகிறது

  கர்ப்பிணிப் பெண்ணின் உடலின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்பெற மகப்பேறுக்கு முந்தைய யோகா உதவுகிறது, இதனால் குழந்தை வளர்ந்து கருப்பையில் விரிவடையும் போது கீழ் முதுகு மற்றும் கால்களில் ஏற்படும் வலியைப் போக்க யோகா உதவுகிறது. யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Pregnancy, Yoga