ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகள் இடது கை பழக்கம் உடையவர்களாக இருந்தால் இவ்வளவு நன்மைகளா?

குழந்தைகள் இடது கை பழக்கம் உடையவர்களாக இருந்தால் இவ்வளவு நன்மைகளா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வலது கைகளால் ஒரு பொருளைக் கொடுத்து வாங்குவது சரியானது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பொதுவாக நமது வீடுகளில் குழந்தைகள் இடதுகை பழக்கம் உடையவர்களாக இருந்தால் அவர்களைக் கண்டித்து வலது கையை பயன்படுத்த சொல்வார்கள். இடதுகை பழக்கமானது பெரிய குற்றம்போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். அதாவது கலாச்சாரம், நாகரிகம் எனும் பெயர்களால் வலது கைகளால் ஒரு பொருளைக் கொடுத்து வாங்குவது சரியானது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  பெரும்பாலான இடது கைப்பழக்கம் உடையவர்கள் பெற்றோர்களின் கட்டாயத்தின் பெயரில் வலது கையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்களால் அதனை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் திணறுவர். வலது கைப் பழக்கத்தைப் போல இடது கைப் பழக்கமும் இயல்பானது தான்.

  Also Read: Pooja Hedge: ஆக்ஸிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்!

  இடது கைப் பழக்கம் உடையவர்கள் யாரும் வலிந்து இடது கையைப் பயன்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு அணிச்சை செயல் போன்றது. அது மரபணு சார்ந்தது. குழந்தை கருவில் இருக்கும் போதே அது முடிவு செய்யப்பட்டு விடுமாம். இடது கைப் பழக்கம் உடையவர்களுக்கு வலது பக்க மூளையும், வலது கைப் பழக்கம் உடையவர்களுக்கு இடது பக்க மூளையும் வேலை செய்யுமாம். இதனால் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி வலது கையைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் அவர்களின் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  உலக புகழ் பெற் கலைஞர் சார்லி சாப்ளின், பில்கேட்ஸ், யுவராஜ் சிங், கங்குலி போன்ற எண்ணற்ற சாதனையாளர்கள் இடது கைப் பழக்கம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கைப் பழக்கம் உடையவர்களுக்கு தனித்துவமான திறமைகள் உள்ளது. வலது கைப் பழக்கம் உடையவர்களைவிட  இடது கைப் பழக்கம் உடையவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். இதன் காரணமாக அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும்.

  Also Read: கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து நடிகர் கார்த்தியின் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரின் விளக்கம்

  இடதுகை பழக்கம் உடையவர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்களாம். உலக அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கணைகளும் இடது கைப்பழக்கம் உடையவர்களாம். இடது கைப்பழக்கம் உடையவர்கள் சவால்களையும், கஷ்டங்களையும் எளிதில் சமாளிப்பார்களாம். பிரச்சனைகளையும், சவால்களையும் வேறு கோணத்தில் யோசித்து தீர்வு காணக்கூடியவர்களாம்.

  இடது கைப்பழக்கம் உடையவர்கள் கலைத்துறையில் புதியதை உருவாக்குவதில் சிறப்புத் திறமை பெற்றவர்கள். மேலும் இடது கைப் பழக்கம் உடையவர்களால் வேகமாக எழுதவும், டைப் செய்யவும் முடியுமாம்.

  இடது கைப்பழக்கமே அவர்களுக்கு இந்த உலகில் பெரும் சவால் தான். இந்த உலகில் பெரும்பான்மையான மக்கள் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருப்பதால் இந்த உலகம் அவர்களுக்கு ஏற்ற படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கதவின் கைபிடியில் இருந்து கார் இயக்குவது போன்ற பெரும்பாலான விஷயங்கள் வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு ஏற்றபடி தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இனிமேலாவது பெற்றோர்கள் இடது, வலது பேதம் பார்க்காமல் அந்தக் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர பெற்றோர்கள் வளர அனுமதிக்க வேண்டும்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Child, Child Care, Parenting