குழந்தைகள் வளரவளர ஆடைகள் சின்னதாகிட்டே போகுதா..? பழைய துணிகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..!

குழந்தைகளின் ஆடை | Baby Cloths

பழைய ஆடைகளை சில பெற்றோர் குழந்தைகளின் நினைவாக அதை பத்திரப்படுத்தி வைப்பார்கள். அப்படி ஒரு சில ஆடைகளை மட்டும்தான் வைக்க முடியுமே தவிர எல்லா ஆடைகளையும் வைத்திருக்க முடியாது.

 • Share this:
  பொதுவாக மனிதன் வளர வளர அவனுடைய ஆடையும் பரிணாம வளர்ச்சி அடையும். குறிப்பாக குழந்தை பருவம் என்பது வேகமான வளர்ச்சி என்பதால் ஆசை ஆசையாக வாங்கிய ஆடைகள் உடனே சின்னதாகிவிடும். அந்த ஆடைகளை சில பெற்றோர் குழந்தைகளின் நினைவாக அதை பத்திரப்படுத்தி வைப்பார்கள்.

  அப்படி ஒரு சில ஆடைகளை மட்டும்தான் வைக்க முடியுமே தவிர எல்லா ஆடைகளையும் வைத்திருக்க முடியாது. அதேசமயம் தூக்கி எறியவும் மனம் வராது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் செல்ல குழந்தையின் ஆடைகளை எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

  குழந்தைகளின் ஆடைகளில் பெரும்பாலும் பச்சிளம் குழந்தையாக இருந்தபோது பயன்படுத்திய டவல், சாக்ஸ், ஜாக்கெட்ஸ், பேண்ட், ஜம்ப்சூட், டி.சர்ட், தொப்பி இப்படி பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஆடைகளில் இப்படி சூப்பரான விஷயங்களை செய்யலாம்.  வீட்டில் குழந்தைகளின் டி.ஷர்ட் நிறைய இருந்தால் இப்படி அதில் ஒரு போர்வை போல் தைத்து அவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அதை குழந்தையின் பெட் கவராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  குழந்தைகளின் ஆடைகளை தூக்கி போட மனம் இல்லை எனில் இப்படி வீட்டை அலங்கரிக்கவும், ஸ்டோரேஜ் பொருட்களாகவும் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த வீடியோவில் குழந்தைகளின் 1 வயதுக்குள் பயன்படுத்திய அடைகளை அதன் பிறகு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கூறுகின்றனர். இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இப்படி மேலே குறிப்பிட்ட யோசனைகளையும், உங்களின் சில கற்பனைத் திறன்களையும் பயன்படுத்தி ஆடைகளை மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்து பாருங்கள். ஆசை ஆசையாக வாங்கிய ஆடைகளை வீணாக அப்படியே மூட்டை கட்டி இருப்பதைக் காட்டிலும் இப்படி குழந்தைகளுக்கே மீண்டும் பயன்படுத்தலாம்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: