Parenting Tips | பெற்றோர்கள் கவனத்திற்கு… குழந்தைகளிடம் இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்!

குழந்தைகள் இருக்கும் இடத்தில் தவறான வார்த்தைகளை பேசவே கூடாது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் தவறான வார்த்தைகளை பேசவே கூடாது.

  • Share this:
தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாகவும், அறிவானவர்களாகவும் வளர்க்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், அதற்காக ஒரு சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் ஒரு சில விஷயங்களில் பலனைக் கொடுத்தாலும், தவறாக செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், குழந்தைகளின் மன நிலையை அறிந்து கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்தவும், சரியான திசையில் செலுத்தவும் பெற்றோர்கள் தங்களை அப்கிரேடு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களிடம் தென்படும் எதிர்மறை விஷயங்களை உங்களால் தடுக்க முடியாது. நீங்கள் எதில்எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மற்றவர்களுடன் ஒப்பிடுதல்:

படிப்பு அல்லது போட்டிகளில் மகன் அல்லது மகள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக சகோதர சகோதரிகளுடன் அல்லது அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுடன், அவர்களின் திறமையை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவார்கள். நீங்களும் பேசியிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நீங்கள் சொல்ல வரும் மையக்கருத்தை புரிந்து கொள்ளாமல் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒருவருடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் சுயமரியாதை, தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் தங்களின் செயல்பாடுகளை அவர்களுடன் ஒப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, நெகடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வார்கள். இதனை பெற்றோராகிய நீங்கள் சரியாக கையாள வேண்டும்.

உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்:

குழந்தைகளாக இருப்பவர்களுக்கு சூழ்நிலைகளைப் பற்றிய புரிதல் இருக்காது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களுக்கு தெரியாது. அவர்களின் ஒரே குறிக்கோள், தாங்கள் விரும்பும் ஒன்றை அப்போதே உங்களிடம் தெரிவித்துவிடுவார்கள். அந்தநேரத்தில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் திட்டக்கூடாது. குறைந்தபட்சம் குழந்தைகளை திட்டாமல் கடந்து செல்வது கூட நல்ல அணுகுமுறை. ஒருவேளை நல்லவையாக இருந்தால் உடனே செய்து கொடுங்கள். தேவையற்றதாக இருந்தால் சூசகமாக நிராகரியுங்கள். மேலும், அவர்கள் சொல்லும் விஷயங்களை காது கொடுத்து பொறுமையாக கேட்பதுகூட குழந்தைகளுக்கு மன நிறைவை கொடுக்கும்.

Must Read | மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge) தடுப்பது எப்படி? இதிலெல்லாம் கவனம் தேவை!

கெட்ட வார்த்தைகளுக்கு 'No':

குழந்தைகள் இருக்கும் இடத்தில் தவறான வார்த்தைகளை கண்டிப்பாக பேசக்கூடாது. பர்சனல் விஷயங்கள் அல்லது தனிப்பட்ட விஷயங்களை அவர்கள் முன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். ஒவ்வொரு விஷயங்களையும் கற்றுக்கொள்ளும் அவர்கள், நீங்கள் பேசும் வார்த்தைகளையும் பதிய வைத்துக்கொள்வார்கள். மேலும், கணவன் - மனைவி, தங்களுக்கு இடையே என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் அதனை குழந்தைகள் முன் காட்டாக்கூடாது. இது தேவையற்ற மன அழுத்தத்தை அவர்களுக்கு கொடுக்கும்.

பொய் கதைகள் கூடாது:

குழந்தைகள் இருக்கும்போது பொய்க்கதைகள் பேசக்கூடாது. உண்மைக்கு மாறான தகவல்களை பேசினால் அல்லது அவர்களிடம் கூறினால், அதே மாதிரியான சந்தர்பங்களில் நீங்கள் கூறியதை அப்ளை செய்து விடுவார்கள். இது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மேலும், ரகசியமான விஷயங்களையும் அவர்களை வைத்துக் கொண்டு பேச வேண்டாம். எதை எங்கு சொல்ல வேண்டும் அல்லது சொல்லக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியாது. இதனால், குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேலி, கிண்டல் வேண்டாம்:

குழந்தைகளை கேலி கிண்டல் செய்ய வேண்டாம். உங்கள் குழந்தைகளை நீங்களே மட்டுப்படுத்தும் செயல். மாறாக ஒவ்வொரு முறையும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். செய்ய வேண்டியதை கற்றுக்கொடுங்கள். அவர்கள் எடுக்கும் முடிவை கேள்விக்குள்ளாக்காமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழியை காட்டுங்கள். தவறான வார்த்தைகளை அவர்களிடம் உபயோகிக்க வேண்டாம்.
Published by:Archana R
First published: