குழந்தைகளுக்கு சிப்பர் பாட்டில்களில் பால் கொடுத்தால் ஆபத்து : தொகுப்பாளினி நிஷா கூறும் தகவல்..!

சிப்பர் பாட்டில்

சில குழந்தைகள் தூங்கும்போது வாயை திறந்துகொண்டு தூங்குவதற்கு இந்த சிப்பர் பாட்டிகள்தான் காரணமாம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஒன்று முதல் இரண்டு மாதக் குழந்தைகளுக்கு சிப்பர் பாட்டில் , பால் புட்டிகளில் பால் அல்லது நீர் ஆகாரம் கொடுப்பது வழக்கம். ஏனெனில் குழந்தைகளுக்கு பெரியவர்களைப்போல் டம்ளரில் வாய் வைத்து குடிக்கத் தெரியாது என்பதே காரணம். ஆனால் சில மருத்துவர்கள் குழந்தைகளுக்கு இப்படி சிப்பர் பாட்டில் ,பால் புட்டிகளில் பால் கொடுப்பதே தவறு என்னும் கருத்தை முன்வைக்கின்றனர்.

  அதை ஒட்டிய பல கட்டுரைகளும் இருக்கின்றன. இருப்பினும் அதைப்பற்றி போதுமான விழிப்புணர்வு முழுமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. இதே கருத்தைத்தான் தொகுப்பாளினி நிஷாவும் சிப்பர் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது தவறு என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இவருக்கு 2 வயது குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  அந்த வீடியோவில் நிஷா குழந்தைகளுக்கான டெண்டல் கேர் திறப்புவிழாவிற்கு சென்றதாகவும் அங்கு திரையிடப்பட்ட சில தகவல்கள் அடங்கிய வீடியோவை பார்த்து இதை தெரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.  வீடியோ பதிவில், சில குழந்தைகள் தூங்கும்போது வாயை திறந்துகொண்டு தூங்குவதற்கு இந்த சிப்பர் பாட்டிகள்தான் காரணமாம். அதாவது இதை எப்போதும் வாயில் வைத்தபடி உறிஞ்சிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் தாடை மற்றும் வாய்ப்பகுதி, நாக்கின் சீரான அமைப்பு மாறுபடுமாம். இதனால் மூச்சுக்குழாய் குறுகி தூங்கும்போது மூச்சுவிட சிரமப்படுகிறார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடுகின்றனர்.

  அப்படி வாய் வழியாக மூச்சிவிடும்போது வெளிக்காற்று நேரடியாக வாய் வழியாக போகும். இதனால் காற்றில் இருக்கும் துசி, பாக்டீரியாக்கள் உள்ளே சென்று குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அதோடு வாய் வழியாக மூச்சுவிடும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். குழந்தைகளின் தூக்கம் தடைபடும். இதனால் அடிக்கடி எழுந்து அழ ஆரம்பிப்பார்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by Nisha Ganesh (@prettysunshine28)


  மூக்கில் உள்ளிழுக்கும் காற்றை சுத்தம் செய்யும் அமைப்பு உள்ளது. இதனால் நாம் மூக்கு வழியாக மூச்சுவிடும்போது பாதிப்பு இருக்காது. எனவே குழந்தைகளுக்கு இந்த சிப்பர் பாட்டில்களில் பால் கொடுப்பதை தவிர்த்து 1 வயது முடிந்தது முதலே டம்ளர்களில் பால் குடிக்க பழக்கப்படுத்துங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

  இறுதியாக தன் குழந்தைக்கு 2 வயதானாலும் இன்னும் தாய்ப்பால் கொடுத்து வருவதாகவும் எனவே எனக்கு இந்த பாதிப்பு இல்லை. நீங்களும் தாய்ப்பால்தான் கொடுக்கிறீர்கள் எனில் கவலை இல்லை என்று கூறுகிறார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: