ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளுக்கு பாலியல் குறித்து தெரிந்துகொள்ள சரியான வயது எது..?

குழந்தைகளுக்கு பாலியல் குறித்து தெரிந்துகொள்ள சரியான வயது எது..?

பாலியல் உறவு

பாலியல் உறவு

பாலியல் குறித்து முறையாக கற்றுக் கொள்ளாமல் அரையும், குறையுமாக தெரிந்து கொள்வதால் வெகு விரைவில் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குழந்தைகளிடம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பாலியல் உறவுகளை எவ்வளவு பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண், பெண் சேர்க்கையின்றி இனப்பெருக்கம் ஏது! ஆணும், பெண்ணும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இணைந்து பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமாகவே மனிதர்களின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. ஆணும், பெண்ணும் பேரின்பம் அடைவதற்கான வழிமுறையாக இது இருக்கிறது. ஆனால், இந்திய கலாச்சாரத்தில் பாலியல் கல்வி குறித்த தயக்கம், குழப்பம், கட்டுப்பாடு போன்ற பல்வேறு தடைகள் இருக்கின்றன.

சாதாரணமாக டிவி நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்கள் போன்றவற்றில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள், காட்சிகள் வந்தால் பெரும்பாலும் நாம் முகத்தை திருப்பி வைத்துக் கொள்கிறோம். குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான அடிப்படைகளை கற்றுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பெற்றோரிடமும் குழப்பம் நிலவுகிறது.

குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படலாம்

பாலியல் குறித்து முறைப்படி கற்றுக் கொடுக்காவிட்டால் குழந்தைகள் அதனை பிறரிடம் இருந்து கற்றுக் கொள்ள எத்தனிக்கும். பல்வேறு மாறுபட்ட தகவல்கள், குழப்பங்கள், தவறான தகவல்கள் குழந்தைகளை சென்றடையும். குறிப்பாக, நண்பர்கள் அல்லது தோழிகள் மூலமாக பார்ன் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அவர்கள் பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

பாலியல் குறித்து முறையாக கற்றுக் கொள்ளாமல் அரையும், குறையுமாக தெரிந்து கொள்வதால் வெகு விரைவில் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குழந்தைகளிடம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பாலியல் உறவுகளை எவ்வளவு பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாக தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியில் பரவக்கூடிய நோய்கள் ஆகியவை குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.

Also Read : இன்ட்ரோவர்டாக (introvert) வளரும் உங்கள் குழந்தையை சரி செய்ய 5 வழிகள்.!

வளரும் இளம் பருவத்தில் கற்றுக் கொடுக்கலாம்

ஆக, தேவையற்ற சிக்கல்களை குழந்தைகள் எதிர் கொள்ளக் கூடாது என்றால், சரியான வயதில் அவர்களுக்கு பாலியல் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு சரியான வயது எது என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழும். பொதுவாக 7 முதல் 12 வயது வரையில் குழந்தைகள் பருவமடையும் வயதாக இருக்கிறது. இந்த வயதில் குழந்தைகளின் சொந்த உடல், அந்தரங்க உறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். குறிப்பாக, அந்தரங்க உறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்வது மற்றும் அடிப்படை பாலியல் உணர்வுகள் போன்றவை குறித்து கற்பிக்கலாம்.

ஆனால், இந்த தருணத்தில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் கற்றுக் கொடுத்து அவர்கள் மனதை குழப்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது. கொஞ்சம், கொஞ்சமாக வாய்ப்பு கிடைக்கும் நல்ல தருணங்களில் ஒன்று, இரண்டு செய்திகளாக கற்றுக் கொடுக்க தொடங்க வேண்டும்.

குறிப்பாக, பாதுகாப்பற்ற உடலுறவுகளின் மூலமாக தொற்றக்கூடிய நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips, Sex