Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி குறித்து எப்போது, எப்படி கற்பிக்கலாம்

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி குறித்து எப்போது, எப்படி கற்பிக்கலாம்

Parenting

Parenting

Parenting Tips | குழந்தைகள் வழிதவறிச் சென்று விடாமல் தடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சரியான வயதில் செக்ஸ் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதிலும் வயதுக்கு ஏற்ப, சரியான முறையில் கற்பிப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த இந்திய கலாச்சாரங்களுக்கு மத்தியில் இன்றைக்கும் கூட செக்ஸ் கல்வி குறித்து பேசுவது மிகவும் அபத்தமான விஷயம் என்றே கருதப்படுகிறது. பெரியவர்கள் பலர் கூட செக்ஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் சூழலில், குழந்தைகளிடம் இதுதொடர்பான விழிப்புணர்வு முற்றிலும் இல்லாமலே போய்விட்டது.

விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் டிவியில் வரும் சில விளம்பரங்களை பார்த்து குழந்தைகளின் மனதில் குழப்பங்கள், சந்தேகங்கள் தோன்றி விடுகின்றன. பெற்றோர் மற்றும் பள்ளிகள் சார்பில் குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால், நம்மில் எழுகின்ற முக்கியமான கேள்வி இதுதான். இதைப்போய் குழந்தையிடம் எப்படி பேசுவது, எந்த சமயத்தில் எப்படி கற்பிப்பது என்ற தயக்கம் எல்லோரிடமும் இருக்கும். இது எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்வதாக இந்த செய்தியில் சில தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வயது அடிப்படையில் பாலியல் அறிவு

குழந்தைகள் வழிதவறிச் சென்று விடாமல் தடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சரியான வயதில் செக்ஸ் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதிலும் வயதுக்கு ஏற்ப, சரியான முறையில் கற்பிப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக குழந்தைகளின் 4 வயது அல்லது 5 வயது முதலே இதனை தொடங்கி விடலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.



முதல் கட்டமாக சின்னஞ்சிறு வயதில் தங்களுடைய பிறப்புறுப்பு குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பிறப்புறுப்பின் பெயர் உட்பட அது குறித்த முழு தகவல்களும் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். இறுதியாக ’குட் டச்’ மற்றும் ’பேட் டச்’ குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Also Read : தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்- செக்லிஸ்ட் இங்கே!

குழந்தைகளுக்கு 8 வயது ஆகும்போது டிவி மற்றும் இன்டர்நெட் மூலமாக எண்ணற்ற விஷயங்களை புரிந்து கொள்ள தொடங்குகின்றனர். இந்த டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவது பெற்றோரின் கடமையாகும். நான் எப்படி பிறந்தேன் என்பது தான் குழந்தைகள் பெரும்பாலும் கேட்கும் முதல் கேள்வி ஆகும். ஆனால், பெற்றோர் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்க்க முயற்சிக்கின்றனர். தாயின் கருவறையில் 9 மாதங்கள் வளர்ந்து குழந்தை பிறக்கிறது என்பதை நீங்கள் எடுத்துக் கூறவேண்டும்.



 

குழந்தைகளுடன் ஆலோசனை

குழந்தைகளுக்கு 10 வயதாகும் போது நீங்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். செய்தித்தாள்களில் வரும் பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை வீட்டில் காலையில் டீ அருந்தும் போது அல்லது உணவு அருந்தும் சமயங்களில் விவாதிக்க வேண்டும். ஆகவே, அவற்றைக் கேட்டு தெரிந்து கொண்ட சின்னஞ்சிறு குழந்தைகளும் அதுகுறித்து விழிப்போடு இருக்கும்.

Also Read : கதை சொல்லி முறை குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

குழந்தைகளுக்கு 15 வயது ஆகும் போது அவர்களின் அறிவு வளர்ச்சி மிகுதியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சொந்தமாக புரிந்துகொள்ள தொடங்குவார்கள். இந்த வயதில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் நன்றாக இருக்கும். இத்தகைய சமயத்தில் எச்ஐவி மற்றும் ஏடிடி போன்ற பாலியல் ரீதியிலான நோய்கள் குறித்து குழந்தைகளுக்கு நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Children, Lifestyle, Parenting, Sex education

அடுத்த செய்தி