குழந்தைகளை அடிக்கடி குளிக்க வைக்க தேவையில்லை : இதுதான் காரணம் என விளக்கும் மருத்துவர்கள்..!

குழந்தை பாதுகாப்பு

பாக்டீரியா போன்ற தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சியடையும் என விளக்கம் அளித்துள்ளனர்.

  • Share this:
குழந்தைகளை நாள்தோறும் குளிக்க வைத்து, சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில், சுகாதாரமாக இருப்பதன் அவசியத்தையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஒரு சில குடும்பங்களில் காலையில், ஒரு சிலர் மாலையிலும் குழந்தைகளை குளிப்பாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

காலையில் குளிக்கும் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இரவு நேரத்தில் குளிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கும் கிடைக்கும். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்பமும் குழந்தைகளை குளிப்பாட்டுவதில் ஒவ்வொரு சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், என்றாவது குழந்தைகளை அதிகம் குளிக்க வைப்பது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

குழந்தைகளை அதிகமாக குளிக்க வைக்கிறீர்களா?

குழந்தைகள் அழுக்காக இருப்பதுகூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், சில பெற்றோர்கள் கொஞ்சம் அழுக்கு இருந்தால் கூட குழந்தைகளை குளிக்க வைத்துவிடுவார்கள். ஆய்வு ஒன்றில், குழந்தைகள் கொஞ்சம் அழுக்காக இருந்தால், அவர்களை குளிக்க வைக்கத் தேவையில்லை என கூறியுள்ளது.

அமெரிக்கன் அகாடமி ஆப் டெர்மடாலஜி (American Academy of Dermatology) பரிந்துரைப்பது என்னவென்றால், 6 முதல் 11வயது இருக்கும் குழந்தைகள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதும் என கூறியுள்ளது. பச்சிளம் குழந்தைகளையும் தண்ணீர் கொண்டு அதிகம் சுத்தம் செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அழுக்காகும் என நினைத்து குழந்தைகள் விளையாடவோ, நடக்கவோ பயந்தால், அவர்களுக்கு குளிப்பாட்டிவிடலாம் எனவும் அந்த அகாடமி கூறியுள்ளது.



ஏன் குறைவாக குளிக்க வைக்க வேண்டும்?

வளர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதனால், வியர்வை, அழுக்குகள் குறைவாக இருக்கும். பாக்டீரியா போன்ற தொற்றுகளும் அவர்களிடம் சேராது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு அதிக அழுக்கு சேருவதும் நன்மை என கூறியுள்ள மருத்துவர்கள், அப்போது பாக்டீரியா போன்ற தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சியடையும் என விளக்கம் அளித்துள்ளனர். சேறு மற்றும் சகதிகளில் விளையாட அவர்களை அனுமதிக்கலாம், அதேநேரத்தில் அதில் இருந்து வெளியே வந்தவுடன் நன்றாக குளிக்க வைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



குழந்தைகள் தினமும் எப்போது குளிக்க வேண்டும்?

குழந்தைகள் பருவ வயதை (அதாவது 12 வயது முதல்) அடைந்தவுடன் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகம் விளையாடுவது, வெளியில் சென்று திரும்புவது என அவர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்பதால், உடலில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகளை இப்படி படுக்க வைக்காதீர்கள்..! ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள்

கை அக்குள்கள், இடுக்குகள் உள்ளிட்ட இடங்களில் பாக்டீரியாக்கள் குவியும். இதனால், தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் சுகாதாரத்தை பேண வேண்டும். சுகாதாரத்தின் அவசியத்தையும், நாள்தோறும் தவறாமல் குளித்தல், பல்துலக்குதல், மலம் கழித்தல் தொடர்பான எளிய விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.



குழந்தைகளை பாதுகாப்பாக குளிக்க வைப்பது எப்படி?

விளையாட்டுத்தனமாக குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், குளிக்கும்போது அவர்களின் பாதுகாப்பு குறித்து சில முன்னெச்சரிக்கை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதாவது, 7 வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் உங்கள் கண்காணிப்பில் குளிக்க வேண்டும் அல்லது நீங்கள் குளிக்க வைக்க வேண்டும்.

குளிர்ச்சியான தண்ணீரை குளிக்க விரும்பாத குழந்தைகள் இருந்தால், அவர்களை வெதுவெதுப்பான நிரீல் குளிக்க வைக்கலாம். குழந்தைகளின் தோல் மென்மையாக இருக்கும் என்பதால், அதிக சூடான தண்ணீரில் குளிக்க வைக்கக்கூடாது. வாசனை அடங்கிய சோப்புகள் மற்றும் லோஷன்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் குளிக்க அனுமதிக்கக்கூடாது. அதிகபட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published: