ஓவர் பேரண்ட்டிங் செய்கிறீர்களா..? அதனால் உண்டாகும் விளைவு பற்றி தெரியுமா..?
ஓவர் பேரண்ட்டிங் செய்கிறீர்களா..? அதனால் உண்டாகும் விளைவு பற்றி தெரியுமா..?
ஓவர் பேரண்ட்டிங்
குழந்தைகளின் வாழ்வில் அதிகப்படியான கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் குறுக்கீடு ஆகியவற்றை பெற்றோர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். இந்தக் கட்டுப்பாட்டில் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் யாரிடம் பேசுகிறார்கள் போன்றவற்றை கண்காணிப்பதும் அடங்கும்.
குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் திறமையான, உறுதியான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பெரியவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கிறார்கள். எனவே தங்கள் குழந்தைகள் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார்கள். இதன் காரணமாக சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உடல் அல்லது மன ரீதியாக ஒருபோதும் காயமடையாமல் எந்த நேரமும் அவர்களை பார்த்து கொள்கிறார்கள்.
இதனால், பல பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். சிறிது நேரம் கூட தனியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள்.
குழந்தைகளின் வாழ்வில் அதிகப்படியான கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் குறுக்கீடு ஆகியவற்றை பெற்றோர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். இந்தக் கட்டுப்பாட்டில் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் யாரிடம் பேசுகிறார்கள் போன்றவற்றை கண்காணிப்பதும் அடங்கும். இதை ஓவர் பேரண்ட்டிங் (Overprotective parenting) என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையாக சொல்வதென்றால் குழந்தைகளை வளர்ப்பதற்கு இது ஒரு ஆரோக்கியமான வழி அல்ல. இத்தகைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வை பாதுகாக்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஆனால் இப்பழக்கம் குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு கடும் தீங்கு விளைவிக்கலாம்.
ஓவர் பேரண்ட்டிங்கின் சில பொதுவான பக்க விளைவுகள்..
கற்று கொள்ளும் வாய்ப்பு இல்லை
ஒரு குழந்தை தவறு செய்வது மிகவும் பொதுவானது. இதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாவிட்டால், அவர்களால் வாழ்க்கையை கற்று கொள்ள முடியாது, திறமைகளை உருவாக்கி கொள்ள முடியாது. ஒரு குழந்தை தனது சொந்த முடிவை எடுக்க அனுமதிக்கப்படா விட்டால் வளர்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. இது போல வளர்க்கப்படும் குழந்தைகள் தடைகளை சமாளிக்ககும் திறன் கொண்டிருக்காமல் இருப்பார்கள் எனவே வெளியுலகை எதிர்கொள்ள தயங்குவார்கள்.
குறைந்த சுயமரியாதை
ஓவர் பேரண்ட்டிங் என்பது குழந்தைகளின் சுயமரியாதையை குறைக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அதிகாரமும் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால், குழந்தைகளால் எதையும் தனியாக செய்ய முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குவைத்தே இதற்கு காரணம். இது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் மனநல பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உறவை உருவாக்குகிறது.
ஓவர் பேரண்ட்டிங்கின் முடிவு குழந்தைகள் தாங்களாகவே முடிவெடுக்க கற்று கொள்வதில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையையும் பெரிதும் பாதிக்கிறது. இதனால் ஓவர் பேரண்ட்டிங்கை பின்பற்றும் பெற்றோர்களின் கீழ் வளரும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். எனவே அவர்கள் சிறு பிரச்சனைகளை கூட தீர்க்க அல்லது பிற்காலத்தில் தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க சிரமப்படுகிறார்கள்.
மன அழுத்தம்
அதிக தற்காப்பு குணம் கொண்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மன சோர்வு அல்லது மன அழுத்தத்தை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் தங்களை தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.