• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு யெஸ் சொல்லும் பெற்றோரா நீங்கள்? அப்ப இதை படிங்க..

குழந்தைகளுக்கு யெஸ் சொல்லும் பெற்றோரா நீங்கள்? அப்ப இதை படிங்க..

காட்சி படம்

காட்சி படம்

பெற்றோர்கள் எதற்கு 'ஆம்' சொல்ல வேண்டும், எதற்கு நோ சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

  • Share this:
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க நினைக்கும்போது பெற்றோராகிய நாம், அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்கிறோம். அவர்களுக்கு ஒரு பொருள் அல்லது எடுக்கும் முடிவுகள் தேவையற்றது என நமக்கு தெரியும்போது, அதனை தீர்மானமாக நிராகரித்துவிடுகிறோம். உதாரணமாக, தொலைக்காட்சியைப் நீண்ட நேரம் பார்க்கும்போது அல்லது பள்ளிக்கு செல்ல மறுக்கும்போது கண்டிப்புடன் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறது. அந்த இடத்தில் அவர்களின் முடிவுக்கு இணங்கி ‘ஆம்’ சொல்ல முடியாது.

உளவியலாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பெற்றோர் அடிக்கடி ‘நோ’ சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தால், அது அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். தாங்கள் எடுக்கும் முடிவு சரியா? என்று அவர்களுக்கு சந்தேகம் எழத் தொடங்கும். இத்தகைய சூழலில் பெற்றோர் தாங்கள் No சொல்வதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ‘ஆம்’ சொல்வது மட்டுமே சரியா? நோ எப்போது சொல்ல வேண்டும்? இதில் இரண்டிலும் இருக்கும் சாதக, பாதகங்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.

‘ஆம்’ சொல்லும் பெற்றோர் என்பவர்கள் யார்?

குழந்தைகள் தாங்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிப்பவர்கள் அனைவரும் ‘‘ஆம்’ சொல்லும் பெற்றோர்கள். சுவர்களில் வண்ணம் தீட்டவும், காலை நேர உணவுக்குப் பதிலாக சாக்லெட் சாப்பிட அனுமதிப்பதையும் இந்த பெற்றோர்கள் செய்வார்கள். அதேநேரத்தில் அனைத்து விஷயங்களிலும் யெஸ் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. தேவையில்லாத இடங்களில் நோ சொல்வதில் தவறில்லை. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான எல்லைகளைப் பேண வேண்டும்.



ஆய்வு ஒன்றில், ஒரு வயது குழந்தை நாளொன்றுக்கு 400 முறை No என்ற வார்த்தையை பெற்றோரிடம் இருந்து கேட்பதாக கூறுகிறது. இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கும்போது, குழந்தைகள் மனதில் தேவையில்லை, வேண்டாம் என்ற சிந்தனை மேலோங்குவதாகவும், முடிவுகளை எடுக்கத் தயங்குவதாகவும் கூறும் ஆய்வு, உலகை தங்களின் பார்வையில் இருந்து ஆராய்ந்து புரிந்துகொள்ள இந்த வார்த்தை தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

யெஸ் சொல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை எனத் தெரிவிக்கும் ஆய்வு, அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேரடியாக NO சொல்வதற்கு பதிலாக, நேர்மறையான வேறொரு வார்த்தைகளை பயன்படுத்தி, மறைமுகமாக நிராகரிக்கின்றனர் எனவும் கூறுகிறது. இது அவர்களின் வளர்ச்சியையும், சிந்திக்கும் ஆற்றலையும் மட்டுப்படுத்துவதில்லை.



"ஆம்" சொல்லும் பெற்றோரின் நன்மைகள் :

குழந்தைகளின் முடிவுக்கு யெஸ் சொல்லி வளர்ப்பதன் மூலம் நேர்மறையானவர்களாகவும், எதிர்காலத்தில் வெற்றிகரமானவர்களாகவும் வளர்கின்றனர். பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருப்பதாக தெரிவிக்கும் ஆய்வு, பிணைப்பை வலுவானதாக வைத்திருப்பதாக கூறுகிறது. யெஸ் சொல்லி வளர்க்கும் பெற்றோர்களின் குழந்தைகள், பெற்றோரிடம் மறைக்க வேண்டிய சூழல் இருப்பதில்லை, எந்த விஷயத்தையும் நேர்மறையாக அணுகும் பாங்கு வளர்கிறது. தோல்வியைக் கண்டு அவர்கள் துவண்டுபோவதில்லை. உலகத்தை சிறந்த வழியில் புரிந்து கொண்டு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். குழந்தைகளிடம் கோபம் குறைவாக உள்ளது.

'ஆம்' சொல்லும் பெற்றோரின் தீமைகள் :

எதற்கு 'ஆம்' சொல்ல வேண்டும், எதற்கு நோ சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 'ஆம்' மற்றும் நோவுக்கு இடையில் இருக்கும் மெல்லிய கோட்டை சரியாக கடைபிடிக்க வேண்டும். பெற்றோராகிய நீங்கள் எல்லா விஷயத்துக்கும் யெஸ் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேவையான இடங்களில் அவர்களின் கோரிக்கையை சரியான கோணத்தில் நிராகரிக்கலாம். எது சரி, எது தவறு என்பது நீங்கள் சொல்லும் யெஸ் மற்றும் நோ என்பதை வைத்தே அவர்கள் அளவிடுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் அனுமதி மூலம் அவர்கள் தடம் மாறிச்செல்லவும் வாய்ப்புள்ளது என்பதை மனதில் நிறுத்தி, அவர்களை வழிநடத்துங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: