Home /News /lifestyle /

வெயிலில் அடிக்கடி செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தடவலாமா? ... நிபுணர்கள் கருத்து இதோ!

வெயிலில் அடிக்கடி செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தடவலாமா? ... நிபுணர்கள் கருத்து இதோ!

மாதிரி படம்

மாதிரி படம்

Baby Care |நிபுணர்களின் கருத்துபடி பெற்றோர்கள் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு உள்ள குழந்தைகளுக்கு கூட சன்ஸ்கீரினை உபயோக்கிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுக்காக்க சன்ஸ்கிரீன் கிரீம் அல்லது லோஷன்களை தடவிக்கொள்வது மிகவும் முக்கியமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி (ஏஏடி) நடத்திய ஆய்வின் படி, சரும வகைகளில் மாறுபாடு பார்க்காமல், அனைத்து வகை சருமத்தினரும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் லோஷனை பூசிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    இளம் பெண்கள், நடுத்தர வயது பெண்மணிகள் ஆகியோரைக் கடந்து தற்போது ஆண்களும் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இளம் பருவத்தினர், முதியவர்களை விட அதிக நேரம் விளையாடுவது, வெளியில் சுற்றுவது, சைக்கிள் ஓட்டுவது என பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் வெயிலுடன் தான் கழிக்கின்றனர்.

    இதனால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் குழந்தைகளின் மென்மையான சருமத்தை கடுமையாக பாதிப்பது உண்டு. குறிப்பாக சூரிய ஒளியின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு சொறி, வியர்க்குரு, கொப்புளங்கள், வேனல் கட்டி போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

    இப்படி பெரியவர்களை விட சூரிய வெப்பத்தால் அதிக பாதிப்புகளை நேரடியாக குழந்தைகள் எதிர்கொள்வதால், குழந்தைகளும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டுமா? எந்த வயதில் பயன்படுத்த வேண்டும்?, குழந்தையின் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சரியான சன்ஸ்கிரீனை எவ்வாறு தேர்வு செய்வது? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

    பெற்றோர்களின் கவலைகளுக்கு தெளிவான விளக்கம் தரும் வகையில் தோல் மருத்துவ நிபுணரான குர்வீன் வாராய்ச் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Read More : குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?


    அதில், நிபுணர்களின் கருத்துபடி பெற்றோர்கள் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு உள்ள குழந்தைகளுக்கு கூட சன்ஸ்கீரினை உபயோக்கிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    கவனிக்க வேண்டியவை:

    உங்கள் குழந்தையின் சன்ஸ்கிரீனில் இந்த அத்தியாவசிய விஷயங்களை கவனிக்கும் வேண்டும் என்றும் சிலவற்றை பரிந்துரைத்துள்ளார். அதில்,

    *புற ஊதாக்கதிர்களிடம் மட்டுமின்றி பிற வகையான பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் அதிக பலன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    * SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

    * குழந்தைகளுக்கான சன்ஸ்கீரின் தோல் வழியாக நீரை புகவிடாததாக இருக்க வேண்டும்.




    எதை தவிர்க்க வேண்டும்?

    உங்கள் குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியம் என்றாலும், பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

    * உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது அரிப்பு தோலழற்சி உள்ள குழந்தைகளுக்கு, ரசாயன சன்ஸ்கிரீன்களை தடவுவதை தவிர்க்கவும். மாறாக, துத்தநாக ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு கொண்ட உடல் அல்லது கனிம சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்தவும்.

    * குழந்தைகளின் சுவாசத்தில் கலப்பதைத் தவிர்க்க ஏரோசல் சன்ஸ்கிரீன் ஸ்ப்ரேகளைத் தவிர்க்கவும்.

    *ஆறு மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    மேற்கூறிய அறிவுரைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தடவுவது பற்றி முடிவெடுக்கலாம் என்றாலும், குழந்தைக்கான சரியான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Baby Care, Health, Kids Care

    அடுத்த செய்தி