• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • என் வாழ்நாளுக்கான புகைப்படம் இது : வோக் இதழுக்காக நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!

என் வாழ்நாளுக்கான புகைப்படம் இது : வோக் இதழுக்காக நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி

கர்பமடைந்த செய்தி யாருக்கும் தெரியாது. விராட் மட்டும்தான் என்னுடன் இருந்தார். அந்த சமயத்தில் ஊரடங்கு எங்களுக்குக் கிடைத்த வரமாக தெரிந்தது.

 • Share this:
  2020-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் விராட் கோலி பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா கர்பமான செய்திதான் என ட்விட்டர் அறிவித்தது. அந்த அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் குழந்தை பிறக்கும் செய்தி மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

  விரைவில் அம்மாவாகப்போகும் அனுஷ்கா ஷர்மா உலகப் பிரபலமடைந்த வோக் பத்திரிக்கைக்கு நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அதாவது 2021 ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகப்போகும் வோக் இந்தியா பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்கான நேர்காணலை அனுஷ்கா அளித்திருக்கிறார்.

  அந்த நேர்காணலில் அனுஷ்கா தன்னுடைய கர்ப்பகால நாட்கள் குறித்து பேசியுள்ளார். பிறக்கப்போகும் குழந்தை மீது அனுஷ்காவும், விராட் கோலியும் கொண்டிருக்கும் அன்பு குறித்தும், உறவினர்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கணவர் விராட் அவரை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்கிறார் என்பன போன்ற பல விஷயங்களை அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.  அந்த நேர்காணலுக்கான மேகஸின் அட்டைப்படத்திற்காக அவர் கொடுத்த புகைப்படம் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. அனுஷ்கா அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நிறைமாத வயிறு தெரியும்படி கிரீமி நிறம் பிராலெட் மற்றும் லூஸான பாட்டம் பேண்ட் அணிந்திருக்கிறார். அதன் மேலே நீளமான கோட் அணிந்துள்ளார். இவை எல்லாவற்றையும் விட வசீகரிக்கும் முகம் ஒட்டுமொத்த அழகையும் அலங்கரிக்கிறது.

  அந்த புகைப்படத்திற்கான கேப்ஷனாக இது என் வாழ்நாளுக்காக நானே எடுத்துக்கொண்டது. வோக் இதழுடன் மகிழ்ச்சியான தருணம் என்று எழுதியுள்ளார். அதோடு அந்த அட்டை படத்திலும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.   
  View this post on Instagram

   

  A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


  வோக் அனுஷ்காவின் நேர்காணலிலிருந்து சில தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளது. அதில் அனுஷ்கா “ நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்ததால் நான் கர்பமடைந்த செய்தி யாருக்கும் தெரியாது. அப்போது கணவர் விராட் மட்டும்தான் என்னுடன் இருந்தார். அந்த சமயத்தில் ஊரடங்கு எங்களுக்குக் கிடைத்த வரமாக தெரிந்தது. ஏனெனில் விராட் என்னுடனே` என்னை கவனித்துகொண்டார். இந்த விஷயத்தை ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடிந்தது. நாங்கள் மருத்துவரை காண்பதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்றோம். நாங்கள் செல்லும்போது அந்த தெருவில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நாங்கள் எங்கு செல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதெல்லாம் ரகசியமாகவே காக்கப்பட்டது. எங்களுக்கும் மீடியா நெருக்கடிகள் இல்லாமல் சுதந்திரமாக இருக்கமுடிந்தது என்று கூறியுள்ளார்.

  ”குழந்தை பிறந்த தழும்புகள் எனக்கும் இருக்கிறது “ - பாடி ஷேமிங் குறித்து நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி நெத்தியடி

  மேலும் கர்ப காலத்தின் ஆரம்ப நாட்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் “ லாக்டவுன் என்பதால் புல்புல் படத்திற்கான புரமோஷன் ஸூம் கால் வாயிலாக நடைபெற்றது. அப்போது எனக்கு திடீரென குமட்டலான உணர்வு, வாந்தி வருவதுபோல் இருந்தது. உடனே நான் வீடியோ காலை அணைத்துவிட்டு என்னுடைய சகோதரர் அதாவது துணை தயாரிப்பாளருக்கு மெசேஜ் செய்துவிட்டேன். ஏனெனில் அந்த புரமோஷனில் அவரும் கலந்துகொண்டிருந்தார். ஒருவேளை இந்த நிகழ்வு ஒரு ஸ்டுடியோவிலோ அல்லது மேடைகளிலோ நிகழ்ந்திருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நிலைமை மோசமாகியிருக்கும் “ எனக் கூறியுள்ளார்.

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: