• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்..!

குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்..!

பெற்றோர்களுக்கான டிப்ஸ்

பெற்றோர்களுக்கான டிப்ஸ்

பெற்றோரின் இந்த செயல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றாலும், நாள்தோறும் அவர்களுடன் செலவிடும் சிறிய அளவிலான நேரத்துக்கு இணையாகாது. சில மணி நேரங்கள் அவர்களுடன் விளையாடலாம்.

  • Share this:
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதைக் கூட வார இறுதிக்கு அல்லது தங்களுக்கு விடுமுறை கிடைக்கும் நாளைக்கு ஒத்திப்போடுகின்றனர். அந்த நாளில் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும், விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் உள்ளனர்.

பெற்றோரின் இந்த செயல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றாலும், நாள்தோறும் அவர்களுடன் செலவிடும் சிறிய அளவிலான நேரத்துக்கு இணையாகாது. சில மணி நேரங்கள் அவர்களுடன் விளையாடலாம். பேசலாம். இது உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையலான பரஸ்பர புரிதலையும் பெருக்கும். வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் அவர்களுடன் நேரத்தை செலவிட்டால், இந்த பரஸ்பர புரிதல் வந்துவிடாது. அந்தவகையில், குழந்தைகளை ஜாலியாக வைத்து, பரஸ்பர புரிதலை உருவாக்க நாள்தோறும் பெற்றோர் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

1. சாப்பாடு

ஒன்றாக சாப்பாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு நேரங்களில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுங்கள். அப்போது, அவர்களின் எதிர்பார்ப்பு, பிடிக்கும் உணவுகள் உள்ளிட்டவைகளை எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஒன்றாக சாப்பிடும்போது, அவர்களின் உடல் நலம் பற்றிய புரிதலும், அவர்கள் விரும்பி சாபிட்டும் உணவுகளையும் பெற்றோராகிய நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

2. உரையாடல்

சாப்பிடும்போது, அன்றைய பொழுதில் அவர்கள் செய்த விஷயங்கள் குறித்து கேளுங்கள். ஜாலியாக பேசும்போது அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். அப்போது, நீங்களும், அன்றைய பொழுதில் செய்த விஷயங்கள், கிடைத்த அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது, உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான உரையாடலை அதிகப்படுத்தும், கம்யூனிக்கேஷன் கேப் இருக்காது.



3. விளையாட்டு

காலை அவர்களுடன் சேர்ந்து உடற்பியற்சி செய்யலாம். மாலையில் உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் அல்லது இருவரும் அமர்ந்து கார்ட்டூன் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசியுங்கள். நீங்கள் அவர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது, குழந்தைகளுக்கு ஜாலியான அனுபவமாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு இப்போதுதான் பல் முளைக்குதா..? இந்த உணவுகளை கொடுக்க தொடங்குங்கள்...

4. படிப்பு

தூங்கச் செல்வதற்கு முன்பு இருவரும் சேர்ந்த கதை புத்தகங்களை எடுத்து படியுங்கள். நீங்கள் அவர்களுக்கு பிடித்தமான கதைகளை சொல்லுங்கள். நாள்தோறும் நீங்கள் சொல்லும் இந்தக் கதைகள், அவர்களுக்கு படிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்குள் எழும். மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால், வீட்டுப் பாடங்களை முடிக்க உதவி செய்யுங்கள்.



5. மரியாதையாக நடத்தல்

குழந்தைகளாக இருந்தாலும், அவர்களை வீட்டில் மரியாதையாக நடத்த வேண்டும். வெளியில் மற்றவர்கள் முன்பு மரியாதையாக நடத்துவதைக் காட்டிலும், வீட்டில் அவர்களை மரியாதையாக நடத்தும்போது தன்னம்பிக்கை மற்றும் மனித மாண்புகளை கற்றுக்கொள்வார்கள். இந்த பழக்கத்தை உங்கள் குழந்தைகள் பிறருக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.

6. வீட்டு வேலைகள்

அவர்களின் வயதுக்கு ஏற்ப வீட்டு வேலைகளை அவர்களுக்கு கொடுங்கள். அதேநேரத்தில் நீங்களும் அவர்களுடன் இணைந்து அந்த வேலையை செய்யுங்கள். இருவரும் இணைந்து வேலை செய்யும்போது, அவர்களுக்கு வேலை செய்வதிலும் பிரியம் இருக்கும். நாளடைவில், அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு அவர்களுக்குள் வந்துவிடும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: