முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

சிலர் தங்கள் குந்தைகளை சாப்பிட வைக்க சாக்லேட்கள் அல்லது இனிப்புகளை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் ஆரோக்கிய உணவுகளை விட இவை தான் சிறந்தவை போல என்ற தவறான எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே இது போன்ற பழக்கத்தை பெற்றோர்கள் செய்தால் அதை கைவிட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வளரும் குழந்தைகளுக்கு ஆற்றல் மிகவும் அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அதற்கு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுத்தாக வேண்டும். ஆனால் இந்த காலத்து குழந்தைகளோ சிறு வயது முதலே ஜங்க் ஃபுட்ஸ்களை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதற்கான பெற்றோர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைவது இல்லை. மற்ற எல்லாவற்றிலும் சொல்பேச்சு கேட்டு நடக்கும் குழந்தைகள் கூட உணவு விஷயத்தில் பெற்றோர்களிடம் சண்டையிடுவது, அழுது அடம்பிடிப்பது என்று சாப்பாட்டு நேரத்தை ரணகளமாக்கி விடுவார்கள். உங்கள் குழந்தைகளும் இப்படி தான் என்றால் உங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

உடலுக்கு வலு மற்றும் ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை உங்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி என்று நீங்கள் குழம்பி போயிருந்தால், அதற்கு உதவும் சில நுணுக்கங்களை இங்கே உங்களுக்கு டிப்ஸாக தருகிறோம்.

ஊட்டச்சத்தை மேம்படுத்த ஆரோக்கிய உணவு பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கான டிப்ஸ் :

* ஆரோக்கியமான காலை உணவோடு குழந்தையின் நாளை தொடங்குங்கள். அவர்களின் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த கூடிய உணவுகளை அவர்களின் டயட்டில் சேர்க்கலாம். காலையிலேயே காரமான மற்றும் ஆயிலில் செய்த உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விட்டு ஃபிரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பயறுகள் அடங்கிய ஆரோக்கிய டயட்டிற்கு அவர்களை பழக்குங்கள். தினசரி சாப்பிட்டு வந்த ஆரோக்கியம் குறைவான அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை வார இறுதியில் மட்டுமே கொடுங்கள்.

9 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன..?

* சிலர் தங்கள் குந்தைகளை சாப்பிட வைக்க சாக்லேட்கள் அல்லது இனிப்புகளை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் ஆரோக்கிய உணவுகளை விட இவை தான் சிறந்தவை போல என்ற தவறான எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே இது போன்ற பழக்கத்தை பெற்றோர்கள் செய்தால் அதை கைவிட வேண்டும்.

* உணவு நேரத்தை அவர்களுக்கு வேடிக்கையாக மாற்றுவதன் மூலம் அவர்களின் மனநிலையை மாற்ற பெற்றோர் முயற்சிக்கலாம். ஏனென்றால் உணவு நேரம் என்பது சாப்பிடுவதற்கான நேரம் மட்டுமே, மாறாக அவர்களை திட்டுவதற்கான நேரம் அல்ல. உணவு நேரம் என்பதை நினைத்தாலே அவர்கள் உற்சாகம் அடைய வேண்டும். எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட அவர்கள் நினைக்க வேண்டும். இந்த சூழல் ஏற்பட்டால் ஆரோக்கிய உணவுகளின் மகத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்து சிறிது சிறிதாக அவர்களின் உணவுப்பழக்கத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.

கர்ப்ப காலத்தின் 4-வது ட்ரைமெஸ்டர் பற்றி தெரியுமா..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

* தினசரி போதுமான தண்ணீர் குடிப்பது மிகுந்த ஆரோக்கியம் என்பதால் கோலாக்கள், சோடாக்கள் அல்லது பிற இனிப்பு பானங்களுக்கு பதில் சீரான இடைவெளியில் அவர்களை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துவது நல்லது. அதே போல வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுப்பது அவர்கள் எவ்வளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை கண்காணிக்க உதவும்.

* டிரான்ஸ் ஃபேட் கொண்ட உணவுகள் கொடுப்பதை கட்டுப்படுத்தி பழங்கள், பீனட் பட்டர், செலரி, நட்ஸ், சீஸ் போன்ற ஆரோக்கிய உணவுகளை அவர்களது டயட்டில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அதிக ஆயில் கொண்ட உணவுகளை மெதுமெதுவாக அவர்களது டயட்டில் இருந்து நீக்குங்கள்.

* உணவுகள் மற்றும் அதற்கு சம்பந்தமான பொருட்களை வாங்க செல்லும் போது ஷாப்பிங்கிற்கு அவர்கைளயும் உடன் அழைத்து செல்லலாம். அதே போல சமையல் செய்யும் போது சிறு சிறு வேளைகளில் அவர்கைளயும் ஈடுபடுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி அவர்களுக்கு எளிதாக கற்பிக்கலாம். ஒருவேளை அவர்கள் பல உணவுகளை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை தடுக்காதீர்கள்.

* பல உணவுகளின் சுவையை சரியாக அனுபவிக்காமலேயே குழந்தைகள் அவற்றை வெறுக்க கூடும். இதற்கு முக்கிய காரணம் சாப்பாட்டில் கவனம் இல்லாதது. எக்காரணம் கொண்டும் சாப்பிடும் போது டிவி அல்லது மொபைலை பார்க்க அனுமதிக்காதீர்கள். இது உணவில் கவனம் செலுத்த மற்றும் அதன் சுவையை அனுபவிக்க குழந்தையை ஊக்குவிக்கவும்.

First published:

Tags: Kids Food, Parenting Tips