தினமும் இரவு குழந்தைக்கு டயப்பர் போட்டுத்தான் தூங்க வைக்கிறீர்களா..? நீங்கள்தான் இதை தெரிந்துகொள்ள வேண்டும்..!

தினமும் இரவு குழந்தைக்கு டயப்பர் போட்டுத்தான் தூங்க வைக்கிறீர்களா..? நீங்கள்தான் இதை தெரிந்துகொள்ள வேண்டும்..!

மாதிரி படம்

டயப்பர்களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் துணி டயப்பர்களுக்குப் பதிலாக டிஸ்போசபில்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது நமது தாய் தந்தை காலத்தில் இருந்தது போல அல்லாமல் சற்று மாறியுள்ளது. இப்போதைய பெற்றோர்கள் வேலைப்பளு காரணமாக அவர்களால் குழந்தை வளர்ப்பில் அதிகம் கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும் அதற்கேற்றாற் போல, குழந்தை பராமரிப்பு பொருட்களும் தாய்மார்களின் வேலையை பாதியாக குறைத்து விடுகின்றன. அதில் ஒன்று தான் இந்த டையப்பர்கள். இந்த காலத்தில் டயப்பர் அணியாத குழந்தையை பார்ப்பதே கொஞ்சம் கஷ்டம் தான். இரவு நேரங்களில், குழந்தையை வெளியே கூட்டிச்செல்லும் சமயங்களில், ஏன் பகல் நேரங்களில் வீட்டில் இருக்கும் போது கூட குழந்தைகளுக்கு டயப்பர்களை போட்டுவிடுகின்றனர்.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுவார்கள் என்பதால், டயப்பர்களை எந்நேரமும் குழந்தைகளுக்கு அணிவித்து விடுகின்றனர். மேலும், குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வடிவங்களிலும், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளிலும் இந்த ரெடிமேட் டயப்பர்கள் கிடைக்கின்றன. நேரம் மற்றும் வேலை தடைகள் காரணமாக, விரைவான மற்றும் எளிதான வழியாக ரெடிமேட் டயப்பர்களை நம்பியிருக்கும் பல பெற்றோர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் இது சரியான அணுகுமுறைதானா என்பதை நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குழந்தைக்கு பெற்றோர் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் மனைவியும் பணிபுரிந்து வரும் சூழல் இருக்கும்பட்சத்தில், இரவு நேரங்களில் உங்கள் குழந்தை ஈரம் செய்யும் ஆடைகளை மாற்ற நீங்கள் நள்ளிரவில் எழுந்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு நேரமோ சக்தியோ இருக்காது என்பதால், நீங்கள் உங்கள் பிள்ளைக்கு டயப்பர்களைப் போட்டு இரவு முழுவதும் தூங்கவைக்கிறீர்கள்.இதனால் இரவு நேரங்களில் எழுந்திரிக்க வேண்டும் என்ற தொல்லை இருக்காது. இருப்பினும், உங்கள் குழந்தைகளின் நிலையை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில், டயப்பர்களை வைத்திருந்தாலும், இரவு முழுவதும் குழந்தை வெளியிடும் கழிவுகள் அவர்களின் சருமத்துடன் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

 

அதுமட்டுமல்லாது, உபயோகப்படுத்திவிட்டு பிறகு தூக்கி எறியும் டயப்பர்கள் சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. தி இந்து பிசினஸ் லைனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில், டயப்பர் சந்தை மதிப்பு 1,400 கோடி ரூபாயாக உள்ளது என்றும் இந்த பெரிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிறக்கும் 26 மில்லியன் குழந்தைகளுடன் சாதகமான புள்ளிவிவரங்கள் ஆதரிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

டயப்பர்களைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பின்வருமாறு:

1. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் டயப்பர்கள்:

ஒரு வீட்டில் புதிதாக குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களின் வீட்டு கழிவுகளில் 50% உபயோகிக்கப்பட்ட டயப்பர்கள் இடம்பெறுகின்றன. டயப்பர்களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் துணி டயப்பர்களுக்குப் பதிலாக டிஸ்போசபில்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு டயப்பர் சிதைவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது மட்க்கிப்போக பல தலைமுறைகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சராசரியாக, ஒரு டயப்பர் சிதைவதற்கு 250 முதல் 300 ஆண்டுகள் வரை ஆகும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் இருக்கும் அறையில் இந்த பொருட்களில் கவனமாக இருங்கள் - மருத்துவர்களின் ஆலோசனை

இதுவே டயப்பர்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதற்கு முக்கிய காரணி. சராசரியாக, நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு 5 முதல் 8 டயப்பர்கள் தேவைப்படலாம். ஒவ்வொரு டயப்பரிலும் பாலிமர் உள்ளிட்ட ரசாயனங்கள் நிரப்பப்படுகின்றன. அவை அதிக அளவு நீர் உள்ளடக்கத்தை உறிஞ்சும். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிப்பில்லாதது. ஆனால் குழந்தைகள் அதனை நீண்ட நேரம் அணிவதால், நிரப்பப்பட்ட படிகங்கள் உடைந்து குழந்தையின் மென்மையான தோலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நாள் முழுவதும் குழந்தையின் தோலுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், சரியான நேரத்தில் டயப்பர்களை மாற்றுவதில் பெற்றோர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.2. தொற்று மற்றும் தோல் சொறி ஏற்படலாம்:

பொதுவாக ஒரு குழந்தையின் தோல், குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். மேலும் டயப்பரைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு சொறி ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு காட்டன் துணிகளை அணிவிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். டயப்பர்களை அணிந்திருக்கும் போது, அது காற்று நுழைவை தடுக்கிறது. இதனால், குழந்தையின் மென்மையான பகுதி எந்நேரமும் ஈரப்பதமாக இருக்கும். இதுவே அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

3. அதிக செலவு:

ஒரு குழந்தைக்கு சராசரியாக 6000-க்கும் மேற்பட்ட டயப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டயப்பருக்கும் ரூ.10 முதல் ரூ.15 வரை செலவாகும். இது நீண்ட காலத்திற்கு விலை உயர்ந்ததாக இருக்கும். உண்மையில், துணி டயப்பர்களை விட ரெடிமேட் டயப்பர்கள் விலை உயர்ந்தவை. 

4. குழந்தையின் சாதாரணமான பயிற்சி தாமதமாகலாம்:

டயப்பர்களை அணியும் குழந்தை சிறுநீர் கழித்தல், மற்றும் மலம்கழித்தல் உள்ளிட்ட சாதாரணமான பயிற்சிகளைப் பெறுவதில் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. டயப்பரை அணிந்த ஒரு குழந்தை சாதாரணமாக 3 வயதிற்குள் பயிற்சி பெற்றதாக இருக்கிறது. துணி டையப்பர்களை பயன்படுத்திய குழந்தைகள் ரெடிமேட் டயப்பர்களை பயன்படுத்தியவர்களைக் காட்டிலும் முன்னரே பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் டயப்பரைப் பயன்படுத்தாத ஒரு குழந்தை 6 மாத வயதிலேயே சாதாரணமான பயிற்சி பெற்றதாக திகழ்கிறது.

 

5. சுகாதார சீர்கேடு:

கிட்டத்தட்ட அனைத்து டயப்பர் நிறுவனங்களும் டயப்பரை அப்புறப்படுத்துவதற்கு முன்பு குழந்தைகளின் மல உள்ளடக்கத்தை சுத்தப்படுத்த அறிவுறுத்துகின்றன. இருப்பினும், இதைப் பயன்படுத்தும் 99 சதவீத மக்கள் அதை வசதியாக மூடி, குப்பைகளில் அப்புறப்படுத்துகிறார்கள். இது இறுதியில் கழிவுநீரில் சேராமல் நிலப்பகுதிகளில் சேர்கிறது. இது சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாகிறது.

 
Published by:Sivaranjani E
First published: