குழந்தை சீக்கிரமாக நடப்பதை பார்க்க ஆசைப்படுகிறீர்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

கோப்புப் படம்

சிறிய அளவிலான உந்துதலைக் கொடுக்கும்போது குழந்தைகள் சீக்கிரமான நடக்க பழகிக்கொள்வார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
குழந்தை முதல் அடி எடுத்து வைத்து நடப்பதை பார்ப்பதற்கு பெற்றோருக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். குழந்தை தன்னை அடுத்த நிலைக்கு தயார்படுத்திக்கொள்ளும் அற்புதமான நொடி என்பதால், அதனை புகைப்படமாக்க குடும்பத்தினர் ஆவலாக காத்திருப்பார்கள். ஊர்ந்து, தவழ்ந்து செல்லும் குழந்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடையையும் பழகிக்கொள்ளும். இருப்பினும், சிறிய அளவிலான உந்துதலைக் கொடுக்கும்போது குழந்தைகள் சீக்கிரமான நடக்க பழகிக்கொள்வார்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பயிற்சி

குழந்தை பிறந்து 7 மாதங்களைக் கடந்தால், நடை பயிற்சியை சொல்லிக்கொடுக்க தொடங்கலாம். முதலில் அவர்களை நிற்க வைக்க வேண்டும். பின்பு மெல்ல மெல்ல சிறிய அடிகளை எடுத்து வைத்து நடக்க பயிற்சி கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது குழந்தைக்கு எழுந்து நிற்க வேண்டும், நடக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். சிறிது காலத்தில் நடை பழகிக்கொள்வார்கள்.

வெறும் கால்கள்

நடை பழகுவதற்கு முன்பே காலணிகளான செருப்பு மற்றும் ஷூக்களை அணிவித்து பார்க்க வேண்டும் என நினைக்காதீர்கள். அது அவர்களின் நடை பழகும் முயற்சிக்கு தடை போடுவதாக அமைந்துவிடும். முடிந்தளவுக்கு வெறும் கால்களில் சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான குழந்தை நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் குழந்தைகளை வெறும் கால்களில் நடைபயிற்சி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். அப்போது, தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்வற்கான முயற்சிகளை எடுத்து, கற்றுக்கொள்வார்கள் என கூறுகின்றனர்.

உற்சாகப்படுத்துதல்

குழந்தையை நடப்பதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு பிடித்த பொம்மைகளை குறிப்பிட்ட தொலைவில் வைத்து நடந்து வருமாறு அழைக்கலாம். நடக்க முயற்சி செய்யும்போது உற்சாகப்படுத்தினால், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் வேகமாகவும் நடந்து பழகிக்கொள்வார்கள். குழந்தைகள் நடை பழக ஆரம்பிக்கும்போது தாளம் மிகுந்த இசைப் பாடல்களை கேட்குமாறு செய்தால், உற்சாகமாக நடப்பார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சொல்லிக்கொடுத்தல்

குழந்தைகளுக்கு எப்படி நடக்க வேண்டும்? என சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி கால்களை எடுத்துவைக்க வேண்டும்? எப்படி முன்னே நடந்து செல்ல வேண்டும்? என படிப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மெதுவாக செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், நடக்கும்போது பொருட்கள் இருப்பதை கவனித்து செல்வது குறித்தும் சொல்லிக் கொடுக்கும்போது, அவர்களுக்கு தெளிவு கிடைக்கும். அவர்களுடன் விளையாட்டாக நீங்களும் நடந்து காண்பித்தால், கூடுதல் மகிழ்ச்சியுடன் நடை பயில்வார்கள். உடன்பிறந்தவர்கள் அவர்களுடன் விளையாடினால் விரைவாக அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள்.

கையில் வைத்திருக்க வேண்டாம்

குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்ற பெயரில் அவர்களை கைகளிலேயே வைத்திருக்க வேண்டாம். குறிப்பிட்ட மாதங்கள் கடந்தால் குழந்தைகள் விளையாட விரும்புவார்கள். அவர்கள் விரும்பும்போக்கில் விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு துணையாக இருப்பது மட்டுமே உங்களுடைய பொறுப்பு. மாறாக, கட்டளையிட்டு அவர்களின் ஆர்வத்துக்கு தடைபோட வேண்டாம் அல்லது தூக்கி வைத்துக் கொள்ள வேண்டாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியது

குழந்தைகள் நடை பயில தொடங்கும்போது அவர்களின் கை, கால் தசைகள் உறுதியடையத் தொடங்கும். தொடக்கத்தில் அவர்கள் நடைபயிலும்போது கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். கிழே விழாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் நடக்கும்போதெல்லாம் அவர்களின் பின்புறத்தில் பிடித்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்று இருக்கும் மசாஜ்ஜை செய்யும்போது அவர்களின் தசை, கை, கால்கள் உறுதியடையும்.

Also read... இளம் வயதினரையும் அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய் - வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

செய்யக்கூடாதவை

மற்ற குழந்தைகள் நடைபயில தொடங்கிவிட்டார்கள் என்பதற்காக உங்கள் குழந்தையையும் நடைபயில்வதற்கு வலுக்கட்டாயபடுத்த வேண்டாம். குறைந்தபட்சம் ஏழு முதல் 19 மாதங்களுக்குள் உள்ளாக குழந்தைகள் இயல்பாக நடைபயில தொடங்கவிடுவார்கள். கை, கால்களுக்கு இருக்கும் உறுதியைப் பொறுத்து அவர்கள் நடப்பதற்கு முயற்சி எடுப்பார்கள். குழந்தைகள் நடக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காட்டும் அதீத ஆர்வம் அவர்களின் உடல்நலனை கூட பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. மெல்ல மெல்ல நடக்க பயிற்சி கொடுப்பது நல்லது. நடைபயிற்சிகாக இருக்கும் விளையாட்டு பொருட்களை கொடுத்து அவர்களை துன்புறுத்த வேண்டாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: