• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளுக்கு ரூல்ஸ் வேண்டாம்.. ப்ரீயா விடுங்க..

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளுக்கு ரூல்ஸ் வேண்டாம்.. ப்ரீயா விடுங்க..

பேரண்டிங் டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்

சில ரூல்ஸ்களை எப்போதும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்ந்திருப்பார்கள். அவர்களுகான புரிதல் மேம்பட்டிருக்கும்.

  • Share this:
பெற்றோராகிய நீங்கள், உங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்தாக பார்த்துக் கொள்வீர்கள். ஏனென்றால், அவர்கள் மீதான கவனம் சிறிது திரும்பினாலும், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் முன்னெச்சரிக்கையான சில விஷயங்களையும் பின்பற்றுவீர்கள். இவையனைத்தும் குழந்தைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் கண்டிப்பாக இருக்கும்.

ஆனால், சில ரூல்ஸ்களை எப்போதும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்ந்திருப்பார்கள். அவர்களுகான புரிதல் மேம்பட்டிருக்கும். அந்தநேரத்தில் பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது பின்பற்றிய சில ரூல்ஸ்களை கைவிட்டுவிடுவது நல்லது.

1. சாப்பிடுதல்

பச்சிளம் குழந்தைகள் தானாக சாப்பிட தொடங்கும்போது, அவர்களுக்கு மெல்லுவதற்கு ஏற்ப பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்போம். ஏனென்றால், முழு பழங்களை அல்லது காய்கறிகளை அவர்கள் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம். அதனை அவர்கள் அவதானிப்பதற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக பெற்றோர்களாகிய நீங்கள் முன்னெச்சரிக்கயாக இருப்பீர்கள்.

முழுப் பழங்களையும் கொடுத்து சாப்பிட வைக்கும்போது, அவர்களின் அருகில் நீங்கள் இருக்க வேண்டும். பெரிய பழத்தை கொடுத்திருப்பதால் மெதுவாக சாப்பிட வேண்டும், நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். சாப்பிடும்போது கவனச்சிதறல்கள் இல்லாமல், முழு கவனத்தையும் சாப்பிடுவதில் மட்டுமே இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம். பேசும்போது, விளையாடும் நேரங்களில் அளவுக்கதிகமான உணவுகளை அவர்களுக்கு கொடுக்கக்கூடாது.



2. குழந்தைகளின் தூக்கம்

பிறந்த குழந்தைகளை முதல் வருடத்தில் முதுகு புறத்தில் தூங்க வைக்க வேண்டும். திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி காரணமாக இந்த இறப்புகள் ஏற்படுகின்றன. இருப்பினும், அண்மைக்காலமாக இந்த இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 4 முதல் 6 மாத குழந்தைகள் தாங்களாகவே உருண்டு படுத்துக் கொள்கின்றன. குழந்தைகள் உருண்டு படுத்தும் தூங்கும்போது மூச்சுவிடமுடியாமல் தவித்து இறக்க நேரிகிறது. ஆரம்ப நாட்களில் இரவு நேரங்களில் கவனமாக பார்த்துக் கொள்ளும் நீங்கள், 7 மாதங்களுக்குப் பிறகும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

மொபைல்… குழந்தைகள்… பெற்றோர்களுக்கு மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை!- Explainer

3. குறைவான பற்பசை

சிறுவயதில் அதிகமான ப்ளூரைடுகளை உட்கொள்வது பற்களில் நிரந்த வெள்ளைப் புள்ளிகளான ஃப்ளோரோசிஸை ஏற்படுத்திவிடும். இது வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப்பிரச்சனைகளுக்கும் காரணமாக அமையும். இதனால், பற்கள் துலக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு மிக மிக குறைவான பற்பசைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்.



4. மின்சார ஃபோர்டுகளுக்கு கவர்

சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில், மின்சார போர்டுகள் மற்றும் குழந்தைகள் எளிதில் அணுகும் வகையில் இருக்கும் இடங்களை கவர்போட்டு மூடி வைப்பார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கையான விஷயம். ஆனால், 6,7 வயதுக்குப் பிறகு அத்தகைய முன்னெச்சரிக்கைகள் தேவையில்லை. ஏனென்றால் அந்த வயதில் ஆபத்தான விஷயங்கள் எது என்பதை தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள்.

5. குழந்தைகளின் குளியல்

குளியலின்போது இறக்கும் குழந்தைகள் அதிகம் என்பதால், அவர்கள் குளிக்கும்போது பெற்றோர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். 3 வயதுக்குப் பிறகு ஆபத்து இல்லாத இடங்களில் தனியாக குளிக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில், அவர்களுடன் வாய்மொழியாக உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும். குளிக்கும்போது பாடுமாறு அல்லது கூச்சலிடுமாறு அறிவுறுத்துங்கள். தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதிக நேரம் அவர்களை தனியாக இருக்குமாறு அனுமதிக்க வேண்டாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: