உங்கள் குழந்தைகளின் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை!

மாதிரிப் படம்

சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தாழ்வு மனப்பாண்மை தற்போது பெரும்பாலானோருக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. அதற்கு உருவ கேலி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனையை ஒழிக்க பலர் போராடி வருகிறார்கள்.

எந்த ஒரு மாற்றத்தையும் சமூகத்தில் இருந்து எதிர்பார்க்காமல் வீட்டிலிருக்கும் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். அதே வேளையில், சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க வேண்டும். மனிதனின் உடல் குறித்த விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கையை பற்றி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்று கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளின் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க செய்ய வேண்டியவை :

ஆரம்பத்தில் தொடங்குங்கள்

பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க முதலில் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று ஆரம்பத்தில் தொடங்குவது. தங்கள் குழந்தைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆனால் சிறு குழந்தைகள், அவர்கள் தங்களை சுற்றியுள்ள விஷயங்களால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சரியான தருணத்திற்காக காத்திருப்பதற்குப் பதிலாக, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா உடல்களும் எவ்வாறு அழகாக இருக்கின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் முன்பாக ஆரோக்கியமே மிக முக்கியமானது என்பதையும் அவர்களுக்கு கற்பிக்கவும்.

உடலைப் பற்றி கற்றுக் கொடுங்கள்

பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க எங்கிருந்து தொடங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அவர்களின் உடலைப் பற்றி கற்பிப்பதன் மூலம் தொடங்கவும். கைகள், கால்கள், கால்விரல்கள், கண்கள், காதுகள் என அடையாளம் காண அவர்களுக்கு உதவுங்கள். அப்போது தான் அவர்களுக்கு தங்கள் உடல் மீதான நம்பிக்கை பிறக்கும். மேலும் ஒவ்வொரு உடல் பாகத்தின் செயல்பாடுகளையும், அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நீங்கள் அவர்களுக்கு சொல்லலாம்.

ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

உடல் குறித்த எதிர்மறை கருத்துக்கள் தோன்றும் போது, ​​ஒருவரின் எடையை விட அனைவருக்கும் ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும் என கற்று கொடுங்கள். தற்போது உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் சந்திக்கின்றனர். குழந்தைகளின் எடை குறித்து கேலி செய்யக்கூடாது, அதற்கு பதிலாக ஆரோக்கியமான உடலை பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும், இதில் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பது அடங்கும். குழந்தைகளின் எடையின் அடிப்படையில் நாம் கற்று கொடுக்கும் போது, அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதில் கவனம் செலுத்துவதை விட ஸ்லிம்மாக தோற்றமளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். எனவே எப்போதும் எடையை விட ஆரோக்கியம் குறித்து கற்று கொடுங்கள்.

எல்லா அளவுகளையும் மதிக்க கற்றுக் கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்பிக்கக்கூடிய மிக முக்கியமான பாடம் அனைத்து வடிவங்களையும், அளவுகளையும் மதிக்க வேண்டும் என்பதே. உடல் குறித்த நேர்மறையான கருத்துக்களை ஏற்படுத்துவது, சுய-அன்பு மற்றும் நம்பிக்கையை பற்றியது. இது வெவ்வேறு உடல்கள் மற்றும் தோற்றங்களை ஒப்புக்கொள்ள கற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அதனால் சிறு வயதிலிருந்தே, குழந்தைகள் ஒரு நட்பு சூழலுக்கு ஆளாக வேண்டும். எல்லோரும் தங்கள் அளவு மற்றும் வடிவங்களில் எவ்வாறு அற்புதமாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.

Also read... குழந்தை சீக்கிரமாக நடப்பதை பார்க்க ஆசைப்படுகிறீர்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

முன்மாதிரியாக இருங்கள்

ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை நம்புகிறீர்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதில் பாசிட்டிவாக இருந்தால், உங்கள் குழந்தைகள் அதை பாராட்டுவார்கள். எனவே, நம்பிக்கையுடன் இருங்கள், அதை உங்கள் செயல்களிலும், வார்த்தைகளிலும் உங்கள் குழந்தைகளுக்கு முன்னால் காண்பிக்கவும். நீங்கள் பாசிட்டிவாக இருந்தால் உங்கள் குழந்தைகளும் உங்களை பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: