இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மற்றும் தைரியம் (Self-esteem and confidence) மனிதனுக்கு மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அவர்களை உற்ச்சாகப்படுத்த கூடுமானவற்றை செய்யுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் (Self-esteem and confidence) தானாகவே வந்து விடும். சாதாரணமாக எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்கு தேவையான அறிவு காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிக அறிவுடையவர்களாக இருகிறார்கள். ஏனென்றால் நமக்கு தெரியாத எத்தனை விஷயங்கள் பிள்ளைகளுக்கு தெரிகிறது.
ஆனால் பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து கொள்ள பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை மற்றும் தைரியம் (Self-esteem and confidence) இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ள முடியும், அதற்கு பின்வரும் உள்ளடக்கத்தை படியுங்கள்.
* ஊக்கமளிக்கும் சொற்களை அடிக்கடி சொல்லி குழந்தைகளை உற்சாகப்படுத்தவும். உங்களால் முடியும் போதெல்லாம் உங்கள் பிள்ளையை புகழுங்கள். அவர்களின் பள்ளியில் ஒரு பந்தயத்தை வெல்வது போன்ற ஒரு சிறிய சாதனை என எதுவாக இருந்தாலும், அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்களின் மனநிலையை மேம்படுத்துங்கள், நீங்கள் அவர்களின் மிகப்பெரிய ரசிகர் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.
* சில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள என்னால் முடியாது, என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது. அப்போது அவர்களுக்கு உதவுங்கள்.
* உங்கள் குழந்தைகள் தவறுகளைச் செய்தால், அவர்களை அதிகமாக திட்ட வேண்டாம். வீட்டுப்பாடமோ வீட்டு வேலைகளோ, அவர்களோ செய்யட்டும், அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்தால், அவற்றை அவர்களே சொந்தமாக சரிசெய்யட்டும். இது அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக நேசிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிகமாக பெற்றோர்கள் டிவி சீரியல் பார்த்து கொண்டும் தங்களுடைய வேலைகளை கவனித்து கொண்டும் இருப்பதால் தங்கள் குழந்தைகளை நேசிக்க தவறி விடுகின்றனர்.
* உங்கள் குழந்தைகள் பள்ளி கூடத்திற்கு சென்று வந்ததும் அவர்களிடம் பேசுங்கள். அப்படி நீங்கள் பேசும் போது உங்களுடைய பாசத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் பிள்ளை எதாவது தவறு செய்தால் அவர்களை மன்னியுங்கள். தவறை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பை அளியுங்கள்.
உங்கள் குழந்தையை சுய ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டுமா..? இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!
* உங்கள் குழந்தைகளை புதுப்புது விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்கவும். தோல்விகளைத் தாண்டி கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வது வரை விளையாட்டு அவர்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது.
* அவர்கள் இளம் வயதிலேயே போட்டித்தன்மையைக் கையாளட்டும். உங்கள் குழந்தைகள் நிறைய போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது ஆரம்ப கட்டத்தில் போட்டித்தன்மையைக் கையாள அவர்களுக்கு கற்பிக்கும், ஏனெனில் அவர்கள் தோல்வியுற்றதாக உணராமல் வலுவாக இருப்பது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
* தன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் அவர்களை தைரியபடுத்த (confidence) வேண்டும்.
நம்பிக்கை (Self-esteem) தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம் என்பதை அடிக்கடி அவர்களுக்கு உணர்த்துங்கள். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்து சேரும். ஒரு நல்ல முன்மாதிரியாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு இருங்கள் மற்றும் உங்கள் குழந்தைக்கு இலக்குகளை நிர்ணயுங்கள். சரியான அளவு முயற்சி செய்தால் இலக்குகளை அடைய முடியும் என்பதை அவர்களுக்கு நீங்களே உங்களின் செயல்கள் மூலம் காட்டலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.