• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் குழந்தை சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்..

உங்கள் குழந்தை சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்..

காட்சி படம்

காட்சி படம்

எந்தவொரு சூழலையும் குழந்தைகள் தனியாக எதிர்கொள்ள பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

  • Share this:
    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ஆகச்சிறந்த கலை. சிறுவயதில் எந்தவொரு செயலுக்கும் பெற்றோர்களை குழந்தைகள் எதிர்பார்க்கும். அதனை நிறைவேற்றுவதே தலையாய கடமையாக நினைத்து, அவர்களின் ஆசையை பெற்றோர்களும் பூர்த்தி செய்துகொடுப்பார்கள். ஒருகட்டத்தில் குழந்தைகள் தங்களின் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருப்பார்கள். தவறு செய்யாமல் யாருக்கும் அனுபவம் கிடைக்காது என்பதால், எந்தவொரு சூழலையும் குழந்தைகள் தனியாக எதிர்கொள்ள பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

    வாழ்க்கை சூழலில் எதிர்வரும் தடைகளை தாங்களே சந்திக்கும் திறன் குழந்தைகளுக்குள் வளர்ந்திருக்கும். அத்தைகய சூழலை பெற்றோர்கள் உணர்ந்து, அவர்களுக்கான இடத்தை வழங்க வேண்டும். தங்களின் குழந்தைகள் வாழ்க்கை சூழலை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் சில அறிகுறிகளை அவர்களின் நடத்தை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

    1. முதலாவதாக, அவர்கள் தங்களுக்கான நண்பர் வட்டத்தை உருவாக்கி கொள்வார்கள். அவர்களுடன் அதிகப்படியான நேரத்தை செலவிடுவார்கள். பெற்றோருடன் முன்பிருந்த இணக்கம் தற்போது இருக்காது. குறிப்பாக, தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசி சிரிப்பார்கள். நீங்கள்( பெற்றோர்) எதிர்ப்பார்கிற சூழலில் உங்களோடு நேரத்தை செலவிடமாட்டார்கள். ஆனால், தன் குழந்தை தன்னை விட்டு விலகிச் செல்வதாக பெற்றோர் நினைக்காமல், இதுவும் குழந்தை வளர்ச்சி படிநிலையின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    2. இரண்டாவதாக வீட்டில் இருந்தாலும் தன்னுடைய அறையில் மட்டுமே இருப்பார்கள். உங்களோடு பேசுவது மிக மிக குறைவாக இருக்கும். தன் குழந்தை ஏன் இப்படி இருக்கிறார் என்பதை பெற்றோர் அறிய முற்பட்டாலும், அதற்கான உரிய விளக்கம் அங்கிருந்து கிடைக்காது. மனம்விட்டு எதுவும் பேசமாட்டார்கள். எதைக்கேட்டாலும் இல்லையென்ற ஒற்றை பதிலைத் தவிர உங்கள் குழந்தைகளிடம் வேறெதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குழந்தைகள் சில இடங்களில் தங்களுக்கான பிரைவசி (privacy) வேண்டும் என்று நினைப்பதையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்



     

    3. மூன்றாவதாக, பெற்றோர் வீட்டில் உணவருந்தும்போது, பெரும்பாலான நேரங்களில் உங்களின் குழந்தைகள் இருக்கமாட்டார்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, தாமதமாக வீடு திரும்பும் அவர்கள் தனியாக அமர்ந்து உணவருந்த தொடங்குவார்கள். வீட்டிலேயே இருந்தாலும் தொலைபேசியில் முழு நேரத்தை செலவிடுவார்களே தவிர உங்களுடன் அமர்ந்து உணவருந்தமாட்டார்கள். இன்றைய நிகழ்காலத்தில், கேம்களில் = தங்களையும் தொலைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    Also read : உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமா? இந்த 7 உணவு வகைகளை ட்ரை பண்ணுங்க..

    4. நான்காவதாக, உங்களிடம் வெளிப்படையாக எதுவும் பேசமாட்டார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே ஒரு கட்டத்தில் உங்களுக்கு தெரியாது. தங்களின் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, அவர்களின் நெருங்கிய தோழர்களிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ள முடியும். அப்போது, தங்களின் குழந்தை சிறிய தகவலைக் கூட மறைக்காமல் ஓடோடி வந்து பகிர்ந்து கொண்ட காலம் மறைந்துவிட்டதோ என பெற்றோர்கள் எண்ணுவார்கள். இனி எப்போது அந்தக் காலம் வரும் என்று எண்ணும் அந்தநொடி, தங்கள் குழந்தை தனித்துவத்துடன் வளர தொடங்கிவிட்டார் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளலாம்.


    5. ஐந்தாவது மற்றும் இறுதியாக, ஒரு பொது இடத்தில் நீங்களாகவே சென்று உங்கள் குழந்தையை கட்டி அணைத்தாலோ, கலைந்திருக்கும் அவர்களின் தலை முடியை கோதிவிட்டாலோ, உடனடியாக நிறுத்தச் சொல்வார்கள். ஒருவித கூச்ச உணர்வு உங்களின் குழந்தைக்கு உள்ளிருந்து வெளிப்படுவதை நீங்கள் உணர முடியும். சிறுவயதில் இருந்தபோது உங்கள் அரவணைப்புக்கு ஏங்கிய அந்த குழந்தை, தற்போது அதனை கூச்சமாக உணரும். ஒருவேளை கட்டியணைத்தால்கூட அது ஆரத்தழுவியதாக இருக்காது. தலைசீவி அழகுபார்த்த அந்த குழந்தை, நீங்கள் தலைகோதுவதை தற்போது வேண்டாம் என்று கூறும்.

    இந்த செயல்களெல்லாம் உங்கள் குழந்தை வெளி உலகில் தனித்துவமாக வாழ விரும்புவதை உணர்த்தும் அறிகுறிகள். அனுபவமே  வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடம் என்பதால், அந்த அனுபவத்தை பெற தங்களின் குழந்தைகளை சுதந்திரமாக வாழ பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: