பற்சிதைவு அல்லது பல் சொத்தை என்பதுதான் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மத்தியில் பொதுவான பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் தான் இந்தப் பிரச்சினையை அதிகம் எதிர்கொள்கின்றனர்.
பற்சிதைவு ஏற்படுவதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் அதிக வலி ஏற்பட்டு குழந்தைகள் உணவு உண்ண முடியாத சூழல் அல்லது எதையுமே விழுங்க முடியாத நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
சரியான தருணத்தில் கவனிக்காமல் விட்டால், அதன் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக, பற்களின் அடி வேர் பகுதி வரை சொத்தை அரித்துச் சென்று, இறுதியில் பல்லை இழக்கும் நிலை ஏற்படும். ஆகவே, பல் சொத்தை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
தினசரி பல் துலக்குவது
குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்படக் கூடாது என்றால் தினசரி காலை, இரவு என இரண்டு வேளைகளில் பல் துலக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பற்களில் அழுக்கு மற்றும் பாக்டீரியா படிவதை இது தடுக்க உதவுகிறது.
பல் இடுக்குகளை சுத்தம் செய்வது
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் டூத் பிரஷ் என்பது பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யாது. குறிப்பாக, பற்களுக்கு இடையே உள்ள சின்னஞ்சிறு இடைவெளியில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்ளும். இதை நீக்குவதற்கு பெரும்பாலும் பல்குச்சி வைத்து குடைவது பலர் கடைப்பிடிக்கும் பழக்கம் ஆகும். ஆனால், குச்சி ஈறுகளில் குத்தி ரத்தம் வரச் செய்யும் அபாயம் உடையது. ஆகவே, மெல்லிய நூல் எடுத்து பல் இடுக்குகளில் மேலும், கீழுமாக நகர்த்தி சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைகள் இரகசியம் காப்பதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது... ஏன் தெரியுமா..?
அதிக சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது
சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் பற்சிதைவுக்கு முக்கிய காரணம் ஆகும். குழந்தைகள் சாக்லேட் அல்லது மிட்டாய் மற்றும் இதர இனிப்புகளை அதிக அளவில் அல்லது அடிக்கடி சாப்பிடுவதைக் குறைத்தால் பற்சிதைவை தடுக்க முடியும். அப்படியே இனிப்புகளை சாப்பிட்டாலும் உடனடியாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
புளோரைடு சிகிச்சை
நம் பற்கள் வலுவாக இருக்க அதில் உள்ள புளோரைடு தான் காரணம். அதன் இழப்பு காரணமாகவும் பற்சிதைவு ஏற்படும். ஆகவே, புளோரைடு கலந்த பேஸ்ட் வைத்து பல் துலக்கலாம் அல்லது புளோரைடு மவுத்வாஷ் கொண்டு சுத்தம் செய்யலாம்.
அவ்வபோது மருத்துவ பரிசோதனை
3 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பற்சிதைவு மற்றும் இதர வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cavity, Kids Care, Tooth care