ஹோம் /நியூஸ் /lifestyle /

நீங்கள் குழந்தையை நல்லபடியாக வளர்த்துள்ளீர்களா..? தெரிந்துகொள்ள டிப்ஸ்

நீங்கள் குழந்தையை நல்லபடியாக வளர்த்துள்ளீர்களா..? தெரிந்துகொள்ள டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வாய் நிறைய அன்போடும், மரியாதையோடு வரவேற்பது தான் குழந்தைகளுக்கு அழகு. குறிப்பாக, மழலை தமிழில் வணக்கம் சொல்லி அழைத்தார்கள் என்றால் இன்னும் சிறப்பு தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகளை நல்ல பண்பும், குணமும் உடையவர்களாக வளர்த்தெடுக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். அவர்கள் அவற்றை உள்வாங்கி நடந்து கொள்கிறார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சரி, நம் குழந்தை நல்ல பிள்ளையாகத் தான் வளர்ந்து வருகிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது?

மிக சுலபம். குழந்தைகளிடம் கீழ்காணும் குணங்கள் இருந்தால் அவர்கள் பண்புடன் வளர்ந்து வருகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வணக்கம்

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வாய் நிறைய அன்போடும், மரியாதையோடு வரவேற்பது தான் குழந்தைகளுக்கு அழகு. குறிப்பாக, மழலை தமிழில் வணக்கம் சொல்லி அழைத்தார்கள் என்றால் இன்னும் சிறப்பு தான். விருந்தினர்களுடன் குழந்தைகள் கலகலவென பேசினாலே அவர்களுக்கு நம் பிள்ளைகளை ரொம்பவே பிடித்துப் போகும்.

நன்றி, மன்னிக்க, தயவுசெய்து

குழந்தைகளிடம் பண்பும், பணிவும், தவறை உணரும் தன்மையும் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இவை. யாரிடம் எந்த உதவி கிடைத்தாலும் அல்லது பிறர் ஒன்றை நமக்காகச் செய்கின்ற போதும் மறக்காமல் நன்றி சொல்வது குழந்தைகளின் மதிப்பை அதிகரிக்கும். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்பதும், உதவி கோரும்போது தயவுசெய்து என்று கேட்பதும் நல்ல பண்புகளாகும்.

அனைவருக்கும் மரியாதை

வீட்டில் உள்ள அனைவருக்கும் பேதமின்றி குழந்தைகள் மதிப்பளித்தால் அது சிறப்பான விஷயம் ஆகும். உதாரணத்திற்கு, சில குழந்தைகள் தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் அளவுக்கு தாத்தா, பாட்டியை மதிப்பதில்லை. அப்படி இல்லாமல் மதித்து நடந்து கொண்டால் சிறப்பாக வளர்ந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

Also Read : மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் குழந்தைகளை திட்டாதீர்கள்... இத மட்டும் செய்யுங்கள்..!

அனுமதி கோருவது

தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்ற போது, அந்தப் பொருளுக்கு உரியவர்களிடம் அனுமதி கேட்பது நல்ல பழக்கம் ஆகும். குறிப்பாக, உடன் பிறந்தவர்களிடம் கூட அனுமதி பெறுவது நல்ல குணம்தான்.

அவசரம் கொள்ளாமல் இருப்பது

குழந்தைகளிடம் ஒழுங்கு இருக்க வேண்டும். குறிப்பாக, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு விஷயத்திற்கும் அவசரம் இன்றி நிதானமாக செயல்படுவது நல்ல குணமாகும்.

குழந்தைகளிடம் நட்பு பாராட்டுவது

குழந்தைகள் சக வயதினரிடம் நட்பு பாராட்ட வேண்டும். எதையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வது, அன்பு வைப்பது போன்றவை நற்பண்புகள் ஆகும். குழந்தைகளிடம் சிறு, சிறு சண்டைகள் உருவாகுவது இயல்பானது தான் என்றாலும், அது வன்மமாக வெளிப்படக் கூடாது.

பொறுப்புடமை

வீட்டு நிகழ்வுகளில் குழந்தைகள் பொறுப்பாக நடந்து கொள்வது, அவர்கள் நல்ல பண்போடு இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறி ஆகும். வீட்டில் உள்ள சின்ன, சின்ன வேலைகளை அவர்கள் பொறுப்போடு எடுத்து செய்தால் நாம் அதை பாராட்டலாம்.

Also Read : குழந்தைகளின் மனம் புண்படாமல் எவ்வாறு அவர்களின் விருப்பத்தை நிராகரிப்பது..?

அமைதி காப்பது

யாரிடமும் எடுத்தெறிந்து பேசாமல், கடிந்து கொள்ளாமல் குழந்தைகள் அமைதி பாராட்டுவது நல்ல குணமாகும். குறிப்பாக தாத்தா, பாட்டி உள்ளிட்ட பெரியவர்களிடத்தில் அவர்கள் பாசத்துடன் பழக வேண்டும். குழந்தைகள் ஒருவேளை கோபம் கொண்டால் நாம் அமைதியாக புரிய வைக்க வேண்டும்.

குடும்ப விதிகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சில விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகள் இருக்கும். அதை குழந்தைகள் சரிவர கடைப்பிடிக்கின்றனர் என்றால் மிகவும் நல்லது. உதாரணத்திற்கு வீட்டு வாசலில் யாரும் காலணிகளை விட வேண்டாம், ஓரமாக வைக்க வேண்டும் என்ற விதிமுறையை கூட குழந்தைகள் கடைப்பிடித்தால் நல்லது.

பகிர்தல்

இது என்னுடையது என்ற பிடிவாதம் குழந்தைகளிடம் இருக்கக் கூடாது. அது சாக்கலேட்டாக இருக்கலாம் அல்லது பொம்மைகளாக இருக்கலாம். உடன் பிறந்தவர்களுடன் அல்லது உறவுக்கார குழந்தைகளுடன் அவர்கள் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips