பானாசோனிக் `பி100’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

news18
Updated: March 8, 2018, 3:57 PM IST
பானாசோனிக் `பி100’  ஸ்மார்ட்போன் அறிமுகம்
பானாசோனிக் பி100
news18
Updated: March 8, 2018, 3:57 PM IST
எலெக்ட்ரானிக் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ள பானாசோனிக் நிறுவனம் `பி100’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனோடு எலுகா ஐ9  மற்றும் ரே700  என்ற மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலுகா 500 என்ற ஸ்மார்ட்போனை பானாசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  பானாசோனிக் `பி100’ ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆன்ட்ராய்டு 7.0 நெளகத் ஆப்ரேட்டிங் சிஸ்டமும் 1.25 ஜிகா ஹெர்ட்ஸ் திறனுடைய குவாட் கோர் மீடியா டேக் எம்டி6737 பிராசசரும் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. 8 மெகா பிக்சல் பின்பக்க சென்சார் கேமரா, 5 மெகா பிக்சல் செல்பி கேமரா, 16 ஜிபி நினைவக திறன் உள்ளிட்ட வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் வைல் ரூ. 6,299.

அதேபோல் பி100 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக எலுகா ஐ9, எலுகா ரே700 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.  எலுகா ஐ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,799 ஆகவும் எலுகா ரே700 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499 ஆகவும் உள்ளது.
First published: March 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்