இன்று பலரும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்த்து மூலிகை நிறைந்த இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதற்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக கன்னடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் அதிகமாக ஹெர்பல் பொருட்களைப் பயன்படுத்துவதும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
கன்னடாவில் ஒருவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட அதிமதுர வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட டீயைப் அதிகமாக பருகியுள்ளார். இதனால் அவருக்கு இரத்தக் கொதிப்பு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகப்படியான மூலிகைப் பொருட்கள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்” என ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த ஜீன் பைரி ஃபாலெட் கூறியுள்ளார். மேலும், அவை தலைவலி மற்றும் நெஞ்சு வலியைத்தான் அதிகமாக வெளிபடுத்துகின்றன என்று கூறுகிறார்.
குறிப்பாக இந்த அதிமதுரம் பயன்படுத்திய நபருக்கு பொட்டாசியம் அளவு கடுமையாக குறைந்துள்ளது. உடலின் நீர்ச்சத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு இரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 1 - 2 கிளாஸ் அதிமதுரம் டீ அருந்துவது அவருக்கு வழக்கமாக இருந்துள்ளது. அதன் காரணமாகவே இந்தப் பக்கவிளைவு நேர்ந்துள்ளது.
இந்த ஹெர்பல் டீயானது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில்தான் அதிகமாக குடிக்கப்படுகிறது. இந்தப் பழக்கம் எகிப்தியர்கள் காலகட்டத்தில்தான் பரவியுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் இறுதியில் ஹைப்பர் டென்ஷன் குறைபாடு கொண்டோர் தங்களை சாந்தப்படுத்திக் கொள்ள அதிமதுர வேரை டீயாக அருந்த பரிந்துரைத்தால் கவனமுடன் செயல்படுங்கள் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.