• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒர்க் பிரம் ஹோமில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்க முடியவில்லையா? இந்த பொசிஷனை ட்ரை பண்ணி பாருங்க!

ஒர்க் பிரம் ஹோமில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்க முடியவில்லையா? இந்த பொசிஷனை ட்ரை பண்ணி பாருங்க!

வேலை சுமை

வேலை சுமை

அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பதை காட்டிலும், ஒர்க் பிரம் ஹோமில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  • Share this:
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் பிடியில் சிக்கி உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து வருகின்றன. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே வேலை என்ற கலாச்சாரம் எல்லோருக்கும் பழகிவிட்டது. மேலும், ஒர்க் பிரம் ஹோம் என்ற புதிய நடைமுறையால் வீட்டில் வசதியாக வேலை பார்ப்பதற்கு ஏற்ப டேபிள் சேர், வைஃபை கனெக்க்ஷன் ஆகியவற்றை அமைத்து வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் என்னதான் அலுவலகம் போன்ற தோற்றத்தை வீட்டில் அமைத்தாலும், அலுவலகத்தில் பணிபுரிவது போல வீட்டில் இருந்து பணிபுரிதல் இருக்காது.

அதிலும் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பதை காட்டிலும், ஒர்க் பிரம் ஹோமில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது சிறிது நேரம் இடைவேளை கிடைக்கும். ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போதோ அவை சத்தியமாக இருக்காது. மேலும் நீண்ட நேரத்திற்கு அமர்ந்து வேலை பார்ப்பதும் சற்று அசதியாக இருக்கும்.

அதேபோல உடல்வலியை உங்களுக்கு ஏற்படுத்தலாம். மடிக்கணினி அல்லது டிவியின் முன்னால் நீண்ட நேரத்திற்கு அமர்வது உடலுக்கு இன்னும் ஆபத்தானது. இதிலிருந்து மீள உங்கள் வேலை பார்க்கும் பொசிஷனை மாற்றி அமைக்கலாம். அதாவது சிறிது நேரத்திற்கு நீங்கள் நின்று கொண்டே வேலை பார்க்கலாம். தற்போது நின்று கொண்டே வேலை செய்யக்கூடிய வகையில் ஸ்டாண்டிங் மேசைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முதுகுவலி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள்:

இதுகுறித்து மார்க்கெட்டிங் தொழில்முறை வல்லுநர் கவுஸ்தூப் பூரி கூறியதாவது, “நான் கடந்த சில மாதங்களாக நீண்ட நேரம் வேலைகளைச் செய்து வருகிறேன். நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்து அறிக்கைகளைப் பார்ப்பது அல்லது மீட்டிங்கில் கலந்துகொள்வது என வேலைகளை செய்து வந்தேன். இது இப்போது எங்கள் பணி கட்டமைப்பின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறியது. ஆனால் நான் ஒவ்வொரு முறையும் சாப்பிட அல்லது விரைவான இடைவெளி எடுக்க எழுந்தவுடன் இடுப்பு பகுதிக்கு கீழ் அதிக விறைப்பு உணர்வை எனக்கு தந்தது.

அந்த சமயங்களில் நான் சிறிது நேரம் நின்று வேலை பார்ப்பதை பற்றி யோசிப்பேன்" என்று கூறினார். முன்னதாக சுமார் 50% நோயாளிகள் முதுகுவலி இருப்பதாக புகாரளித்திருந்த நிலையில், தற்போது அது 80% ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் முதுகுவலி மற்றும் விறைப்பு தன்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய சிறிது நேரத்திற்கு நின்று கொண்டு வேலை பார்ப்பது சௌகரியமாக இருக்கும். இந்த மாற்றத்தை செய்ய விரும்புகிறவர்கள், கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பின்வருமாறு காணலாம். இந்த பிரச்னை தொடர்பாக பேசிய முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஓம் பாட்டீல் , “தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு வரை, மக்கள் அலுவலக மேசைகளைப் பயன்படுத்தினர்.

ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பெரும்பாலான மக்களில் பலருக்கு பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள் மற்றும் மேசைகள் இல்லை. இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் நீண்ட நேரம் படுத்துக்கொண்டு வேலை பார்க்கும் போது, மெல்லிய சோம்பலான பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் போது இது நிகழ்கிறது. ” என்று அவர் விவரித்தார். அவர் மேலும் கூறுகையில், “முன்னதாக, எனது நோயாளிகளில் 50 சதவீதத்தினரை முதுகுவலியால் அவதியுற்றதை பார்த்தேன்.ஆனால் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்து வரும் 80 சதவீதம் பேர் (அதில் பெரும்பாலானோர் வங்கியாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள்) தினமும் 15 மணி நேரம் வேலை பார்ப்பதால் இந்த பிரச்சினையுடன் வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேலை நேர வரம்புகளை நீட்டிக்கிறார்கள்.

அதுவும் வழக்கத்திற்கு மாறான நிலைகளில் அமர்ந்தபடி வேலை பார்க்கிறார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு கணினியில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக வேலை செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு பணிச்சூழலியல் அமர்வு தேவையில்லை என்று நான் பரிந்துரைக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவராக இருந்தால், அவர்கள் கண்டிப்பாக தங்கள் அமர்ந்த வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அந்த வகையில் நின்று படி வேலை பார்ப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, முதுகில் விறைப்பு மற்றும் பிடிப்பைக் குறைக்கிறது. ஆனாலும் நீண்ட நேரத்திற்கு நின்று கொண்டே வேலை பார்க்க நான் பரிந்துரைக்க மாட்டேன்.

நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய்..உடல் எடையை குறைக்க எந்த எண்ணெய் பெஸ்ட்..?

எனது அறிவுரை என்னவென்றால், வேலை நேரத்தில் சிறிது நேரம் உட்கார்ந்த நிலையிலும், சிறிது நேரம் நின்ற நிலையிலும் வேலை பார்ப்பதை கடைபிடிக்கலாம். மேலும், அடிக்கடி மைக்ரோ இடைவெளிகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். அந்த சமயங்களில் நீங்கள் உங்கள் கைகளையும் முதுகு புறத்தையும் நீட்டியபடி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனை தொடர்ந்து எலும்பியல் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பல்லவ் பாட்டியா கூறியதாவது, தொற்றுநோய் காரணிகளின் கலவையானது கழுத்து மற்றும் முதுகுவலி அதிகரிப்பதற்கு பங்களித்தது. வேலை புரியும் போது தவறான தோரணையில் அமர்வது, முதுகெலும்புத் தசைநார்கள் வரம்பைத் தாண்டி, முதுகெலும்பு நெடுவரிசையில் ஒரு திரிபு வைக்கக்கூடும்.

இது வேதனையாக இருக்கும். இதுதவிர மக்கள் வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதில்லை. எனவே நாம் காணும் மற்றொரு விஷயம், வைட்டமின் டி குறைபாடுள்ள நிறைய நோயாளிகள். இந்த குறைபாடு எலும்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது. அதேபோல ஜிம்கள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால், உடற்பயிற்சியும் குறைந்துவிட்டது. இது மக்களில் எடை அதிகரிப்பைத் தூண்டுகிறது. இது முதுகெலும்பிலும் அழுத்தம் கொடுக்கிறது. ” என்று கூறினார். இதனை எவ்வாறு சமாளிப்பது? டாக்டர் பாட்டியா நம்மோடு சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.1. நிற்கும்போது உங்கள் உயரத்தை அறிந்திருங்கள். மடிக்கணினி திரை கண் மட்டத்தில் இருக்க வேண்டும். ஸ்டாண்டிங் டெஸ்க் வாங்கினால் நீங்கள் எட்டு மணி நேரம் நிற்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நம் கன்று தசைகள் அத்தகைய சுமையை தாங்காது. இடையில் ஓய்வெடுங்கள், அமர்ந்து வேலை பார்ப்பது சிறிது நேரம் நடப்பது. மொத்தமாக வெறும் 20 சதவீத நேரத்திற்கு மட்டும் நின்று வேலை பார்க்கவும்.

2. வைட்டமின் டி குறைபாட்டிற்கு, உங்கள் மருத்துவரிடம் சோதனை செய்தபின் ஒரு சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வது சிறந்தது.

நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சனைகள்:

நீண்ட நேரம் அமர்வதால் உங்கள் கால்கள் பலவீனமாகலாம். அது விறைப்புத்தன்மையை சேர்க்கலாம். மோசமான தோரணையை கொடுக்கலாம். வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியான கண்காணிப்பு உடலுக்கு மோசமானது.

இதற்கான தீர்வு:

சரியான தோரணையுடன் உட்கார வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறையும் அமர்வு நிலையை மாற்ற வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிது நேரம் கை கால்களை அசைப்பது மிக அவசியம்.உங்கள் டெஸ்க் வகையைத் தேர்வு செய்ய வேண்டும்:

வெவ்வேறு வகையான ஸ்டாண்டிங் மேசைகள் உள்ளன. சில சரிசெய்யக்கூடியவையாக இருக்காது. சில டேபிள்கள் மாற்றியமைக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு லேப்டாப் ஸ்டாண்டைப் பயன்படுத்தி அதை உங்கள் கண் மட்டத்திற்கு நேராக இருக்குமாறு உயர்த்திக் கொள்ளுங்கள். டேபிள் அட்ஜஸ்ட் செய்க்கூடியதாக இல்லையென்றால், மேஜையில் ஒரு சில புத்தகங்களைக் குவித்து, உங்கள் மடிக்கணினியை சிறிது உயரத்தில் வைக்கவும் அல்லது உங்கள் நாற்காலியைத் தள்ளிவிட்டு, எழுந்து நின்று படிக்கவும் அல்லது நீங்கள் நிற்கும் போது உங்களுக்கு வரும் அழைப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: