Home /News /lifestyle /

உலகம் முழுவதிலும் தீவிர உடல்நலப் பிரச்சனையாக மாறி வரும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்!

உலகம் முழுவதிலும் தீவிர உடல்நலப் பிரச்சனையாக மாறி வரும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்!

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்

உலகம் முழுவதும் உள்ள முக்கிய உடல் நலக் கோளாறுகளில் தீவிரமான நோயாக தற்போது மாறியுள்ளது கீல்வாதம்.

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (osteoarthritis) எனப்படும் கீல்வாதம், வலிமிகுந்த வீக்கம் மற்றும் மூட்டுகளில் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆர்த்ரைடிஸின் பொதுவான வகை ஆகும். துரதிருஷ்டவசமாக உலகம் முழுவதும் உள்ள முக்கிய உடல் நலக் கோளாறுகளில் தீவிரமான நோயாக தற்போது மாறியுள்ளது கீல்வாதம். இது ஒரு சீர்குலைக்கும் மூட்டு நோய் (DJD - degenerative joint disease) என்றும் அழைக்கப்படுகிறது.

கீல்வாதம் என்பது ஒரு நாள்பட்ட மூட்டு நோயாகும். இது வலி, இயலாமை மற்றும் செயல் இழப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. அதிர்ச்சியூட்டும் வகையில் பொதுவாக வயதானவர்களிடம் அதிகம் காணப்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் என்பதும் கீல்வாத நோய் தற்போது 20 மற்றும் 30 வயதுடைய இளம் வயதினரிடமும் கண்டறியப்படுகிறது.

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ருமாட்டாலஜியின் (American College of Rheumatology) அதிகாரப்பூர்வ இதழான ‘ஆர்த்ரிடிஸ் & ருமாட்டாலஜி-யில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, கடந்த 1990-ல் 247.51 மில்லியனாக இருந்த கீல்வாத பாதிப்புகள் சுமார் 113.25 சதவீதம் அதிகரித்து கடந்த 2019-ல் உலகம் முழுவதும் 527.81 மில்லியனாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் என்றால் என்ன..?

ஆஸ்டியோஆர்த்ரைடிஸால் பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு இந்த பாதிப்பு முழங்கால் மூட்டில் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு, இடுப்பு, தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கீல்வாதத்தை பொறுத்த வரை மூட்டின் இரு பக்கமுள்ள எலும்புகளின் எலாஸ்டிக் போன்ற குருத்தெலும்பு உறை சேதமடைகிறது. இதனால் எலும்புகள் நேருக்கு நேராக உராய்ந்து, வலி, மூட்டு இறுக்கம் ஏற்பட்டு, நாள்பட, மூட்டு அசைவுகள் குறையத் தொடங்கி, மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் மிகவும் பலவீனமாகிறது. இந்த நிலை எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம், ஆனால் உடலின் மிகவும் பொதுவாக பாதிக்கப்படும் பகுதிகள் விரல், கைகள், தோள்பட்டை, முதுகெலும்பு, கழுத்து, கீழ் முதுகு, முழங்கால்கள் மற்றும் இடுப்பு ஆகியவை அடங்கும். கீல்வாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் மெதுவாக உருவாகி காலப்போக்கில் மோசமடைகின்றன.


கீல்வாதம் ஏற்பட காரணங்கள் மற்றும்அறிகுறிகள்..

இந்த நிலைக்கு முதுமை முக்கிய காரணம் என்றாலும் மோசமான நிலையில் நீண்ட அமர்ந்திருப்பது, கடந்தகால காயம், உடல் பருமன், மூட்டு காயங்கள் போன்ற வேறு சில காரணங்களால் கூட இந்த நாள்பட்ட மூட்டு நோய் ஏற்படலாம். வேறு சில காரணிகள் கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன. குடும்பத்தில் இந்த பாதிப்பு யாருக்காவது இருந்தால், குறிப்பாக பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுக்கு இருந்தால் இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

மாதவிடாய் முழுவதும் நிற்கும் வேளையான மெனோபாஸ் காலத்தில் பெண்களை இந்த நோய் பாதிக்கலாம். தவிர நீரிழிவு போன்ற மூட்டைப் பாதிக்கும் எந்த உடல்நலக் குறைபாடும் காரணமாக இருக்கலாம்

கீல்வாதத்தின் அறிகுறிகள்:

கீல்வாதத்தின் அறிகுறிகள் நோயாளிக்கு நோயாளிக்கு பெரிதும் மாறுபடும். ஆனால் கீல்வாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறி மூட்டுகளில் லேசான வலி முதல் கடுமையான வலி.

* இயக்கத்தின் போது அல்லது அதன் பின் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி

* மூட்டுகளைச் சுற்றி வீக்கம்

* மூட்டுகளில் விறைப்பை உணர நேரிடலாம்

* பாதிக்கப்பட்ட மூட்டை சுற்றி கடினமான கட்டிகள் உருவாகலாம்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Osteoarthritis

அடுத்த செய்தி