Home /News /lifestyle /

இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம்...

இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம்...

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : உங்களை பற்றி நீங்களே தெரிந்துக்கொள்ள வேண்டுமா அப்ப இந்த படத்தை நன்றாக பாருங்கள்.

நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது.

அதில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், உங்கள் ஆளுமைப் பண்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். கீழே வழங்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தின் மூலம் நீங்கள் இன்ட்ரோவர்ட்டா அல்லது எக்ஸ்ட்ரோவர்ட்டா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் எந்த படத்தை முதலில் பார்க்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த இல்யூஷனில் இரண்டு விதமான காட்சி தெரியும்.முதலாவது, கருப்பு நிற கூந்தல் உடைய பெண். இரண்டாவது, அகலமான வாய் / தாடை கொண்ட முகம்.



மேலே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் எந்த படங்களில் உங்களுக்கு எந்தப்படம் முதலில் தெரிந்தது?

also read : இந்த படத்தில் எவை உண்மையான கண்கள்?கண்டுபிடிங்க பார்க்கலாம்..

கருங்கூந்தல் உடைய பெண்ணின் முகம் முதலில் பார்த்தால், நீங்கள் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர் மற்றும் எந்த விவரமும் உங்கள் பார்வையில் இருந்து தவறாது. Observational skills என்று கூறப்படும் நன்றாகக் கவனிக்கும் திறமை உங்களிடம் உள்ளது. இதனால், சின்னஞ்சிறு விஷயத்தைக் கூட கோட்டை விடமாட்டீர்கள். அதே நேரத்தில், நீங்கள் தனியே இருப்பதை விரும்புவர், யாரிடமும் அதிகமாக பேச மாட்டீர்கள். இன்ட்ரோவர்ட் எனப்படும் குணம் கொண்டவர். அதாவது, பெரிய கூட்டம், சோஷியல் சர்க்கிள் ஆகிய இடங்களில் உங்களுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருக்கும், நீங்கலாக வலியச் சென்று பேசவோ நட்பு வளர்க்கவோ மாட்டீர்கள். குறுகிய வட்டத்துக்குள் மிகக் குறைந்த நண்பர்கள் இருப்பார்கள். மிகவும் அமைதியானவர் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்.

மேலும், உங்களைப் பற்றி மற்றவர்கள் அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது. தனிமையை ரசித்து அனுபவித்து வாழ்பவர்.

உங்கள் பார்வைக்கு முதலில் அகலமான தாடை கொண்ட முகம் தெரிந்தால், நீங்கள் வெளிப்படையானவர், ஜாலியாக எல்லாரிடமும் பழகும் தன்மை கொண்டவர். சின்ன சின்ன விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள், பெரிய விஷயங்கள் தான் உங்களின் கவனம் ஈர்க்கும். கூட்டத்தில் எளிதாக ஐக்கியமாகும் குணம் உள்ளது. மற்றவர்களுடன் எளிதாகப் பழகுவீர்கள். நட்புணர்வு நிறைந்தவர். தனியே இருப்பது பிடிக்காது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி