Home /News /lifestyle /

நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்? இந்த படத்தை வைத்தே சொல்லிவிடலாம்..

நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்? இந்த படத்தை வைத்தே சொல்லிவிடலாம்..

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion : நீங்கள் முடிவுகளை எப்படி எடுக்கக்கூடியவர் என்பதை கண்டுபிடிக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம்.

நமது சிந்தனைத் திறனுக்கு சவால் அளிக்கும் வகையிலும், கண் பார்வைத் திறனை சோதிக்கும் வகையிலும் அமைவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள். இவை கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது கைகளால் வண்ணம் தீட்டப்பட்டதாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் மறைந்திருக்கும். பார்த்தவுடன் எளிமையாக கண்டுபிடித்துவிட முடியாதபடிக்கு அந்தப் படங்கள் நேர்த்தியாக வடிவமைப்பு செய்யப்படுகின்றன. படத்தில் உள்ள உருவங்களை நாம் எப்படி அடையாளம் காணுகிறோம் என்பதைப் பொறுத்து நமது திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

அந்த வகையில், குதிரைகள் மட்டும் நிரம்பிய ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ஒரு விநாடி அல்லது இரண்டு விநாடிகளில் உங்கள் கண்களுக்கு எத்தனை குதிரைகள் தென்படுகின்றன என்பதைப் பொறுத்து உங்கள் குணாதிசயம் வரையறை செய்யப்படுகிறது.

ஒற்றை குதிரை:

எந்தப் படம் என்றாலும் பார்ப்பதற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நீங்கள். எந்தவொரு முடிவையும் அவசர, அவசரமாக நீங்கள் எடுக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தை முன்னெடுக்கும் போது, அதில் கிடைக்க இருக்கும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகே நீங்கள் முடிவு செய்வீர்கள். உங்களுக்குள் நல்ல குணங்கள் ஏராளம் உண்டு. அதே சமயம், உங்கள் திறமைகள் மற்றும் திறன்கள் குறித்து உங்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கும். சில சமயம், இந்த அதீத நம்பிக்கை என்பது ஏமாற்றத்தையும், தோல்வியையும் கொடுக்கும்.



also read : இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

5 முதல் 10 குதிரைகள்: 

எந்த ஒரு விஷயமும் கனக்கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எதையுமே சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்காது. உங்கள் முடிவுகள் எப்போதும் சீரற்ற சிந்தனையின் அடிப்படையில் இருக்கும். அதாவது ஏனோ, தானோ என்று சிந்தித்து முடிவு செய்வீர்கள். உங்கள் பணித்திறனை பார்த்து சுற்றியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், உங்கள் இலக்கை அடைவதற்கு அது தடையாக இருக்காது.

11 அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகள்: 

படத்தைப் பார்த்த ஒற்றை நொடி அல்லது இரண்டு நொடிகளுக்குள் உங்கள் கண்களில் 11 குதிரைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகள் தென்படுகின்றன என்றால், நீங்கள் மிகவும் தெளிவான சிந்தனை கொண்ட நபர் என்று அர்த்தம். ஒரு விஷயம் எந்த அளவுக்கு சின்னது என்றாலும் அதை நீங்கள் தவறவிட மாட்டீர்கள்.

உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை பிறர் விரும்புவார்கள். அதே சமயம், நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அவர்களால் தர முடியாது என்கிறபோது, அது உங்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமையும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion

அடுத்த செய்தி