சந்துரங்க வேட்டை படத்தில் ஒரு பொருளை வாங்குங்க என்பதை விட அவர்களின் ஆசையைத் தூண்ட வேண்டும் என்று ஒரு டயலாக் வரும். அதுதான் இந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களின் மார்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி.
நாம் பொருட்களை வாங்கவே கூடாது என்றாலும் பயன்படுத்தும் செல்ஃபோன், கணினி, லாப்டாப் என எதை திறந்தாலும் அதில் நிச்சயம் ஷாப்பிங் சைட்டுகளின் விளம்பரங்களை தவிர்க்க முடியாது.
அப்படி போகிற போக்கில் நீங்கள் பார்த்துவிட்டு வருவதால் ஒரு கட்டத்தில் அடிமையாகிவிடுவீர்கள். அப்படி பல நாட்கள் பார்ப்பதை வாங்கிதான் பார்ப்போமே என்று வாங்குவோம். அது அப்படியே தொடர்ந்து பழக்கமாக மாறிவிடும். இப்படி Cart-ல் பொருட்களை சேர்த்து வைத்துகொண்டு சம்பளம் வந்ததும் வாங்கியாக வேண்டும் என நினைப்பதை அடிமைத்தனம் என்று சொல்வதை விட மனநலக் கோளாறு என்று சொல்வதே சரி என்கிறது ஆய்வு.
ஹன்னோவர் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய ஆய்வில் இந்த பழக்கத்தை ‘buying-shopping disorder’ (BSD) eன்று கூறுகிறது. இப்படி அவர்கள் செய்த ஆய்வில் 122 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இப்படி வளர்ந்த நாடுகளில் ஐந்து சதவீதம் இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கட்டிருக்கின்றனர் என்கிறது.
இப்படி செய்வதற்கு காரணம் அவர்களின் மகிழ்ச்சியான மனநிலைக்காக மட்டுமே என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அது அவர்களுக்கு feeling good உணர்வை தொடர்ந்து அளிப்பதால் அதற்கு அடிமையாவதாக கூறுகிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online shopping