ஒரு ஆப்பிளில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள்...! சாப்பிடுவது நல்லதா... கெட்டதா..?

இந்த பாக்டீரியாக்கள் ஆப்பிளில் மட்டுமல்ல அனைத்துப் பழங்களிலும் இருக்கும்.

news18
Updated: July 25, 2019, 2:09 PM IST
ஒரு ஆப்பிளில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள்...! சாப்பிடுவது நல்லதா... கெட்டதா..?
ஆப்பிள்
news18
Updated: July 25, 2019, 2:09 PM IST
ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நோயே வராது என்பார்கள். ஆனால் அந்த ஒரே ஒரு ஆப்பிளில் தான் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு Frontiers in Microbiology ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்கானிக் முறையில் விளையும் ஆப்பிள் பழங்களில் நல்ல பாக்டீரியாக்கள், சீரான பாக்டீரியாக்கள் பல உருவாவதையும், அவற்றை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்றும் கண்டறிந்துள்ளனர். இது உடலுக்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

இந்த பாக்டீரியாக்கள் குடல் நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவு என்கிறார் பேராசிரியர் கேப்ரிலி பெர்க். இந்த பாக்டீரியாக்கள் ஜூஸ் ஆகவோ, சமைத்தோ சாப்பிட்டால் இறந்துவிடும். எனவே அவற்றை அப்படியே சாப்பிட்டால்தான் நல்லது என்றும் கூறுகின்றனர்.
இந்த பாக்டீரியாக்கள் எல்லா பழங்களிலும் இருக்கும். குறிப்பாக ஆப்பிளில்தான் 100 மில்லியன் பாக்டீரியாகக்கள் இருக்கிறது. அதுவும் ஆர்கானிக் முறையில் வளர்ந்த பழத்தில்தான் இந்த பாக்டீரியா முழுமையாக இருக்கும்.

ஆப்பிள் பழத்திலேயே விதையில்தாம் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்றும் சதையில் குறைவுதான் என்கின்றனர். நடுப்பகுதி, தோல் என முற்றிலும் நீக்கிவிட்டு சதையை மட்டும் சாப்பிட்டால் 10க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களை இழக்க நேரிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Loading...

இனி ஆப்பிளை பயமின்றி சாப்பிடலாம்.... ஆனால், அது ஆர்கானிக் ஆப்பிளாக இருக்க வேண்டும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...