Home /News /lifestyle /

ஓணம் 2022 ஸ்பெஷல்: 10 நாள் ஓணம் கொண்டாட்டங்களில் என்னென்ன நடக்கும்?

ஓணம் 2022 ஸ்பெஷல்: 10 நாள் ஓணம் கொண்டாட்டங்களில் என்னென்ன நடக்கும்?

ஓணம்

ஓணம்

மகாபலி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பும் நாள் அத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தச்சமயம் எனும் பிரமாண்ட ஊர்வலங்கள் வாமனமூர்த்தி திருக்கர கோயில் மற்றும் கொச்சி முழுவதும் நடைபெறுகின்றன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
ஓணம் 2022: ஆண்டுதோறும் அறுவடைத் திருவிழாவான ஓணம், கேரள மாநிலத்தில் மிகுந்த கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்துகிறது.

சமய நம்பிக்கையின்படி, ஒரு காலத்தில் கேரளாவை ஆண்ட புராண மன்னனின் பொற்கால ஆட்சியைக் கொண்டாடுகிறது. இந்த 10 நாட்கள் கொண்டாட்டங்களின் கலவையாகும். அப்படி அந்த 10 நாட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

அத்தம் - ஆகஸ்ட் 30, 2022
மகாபலி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பும் நாள் அத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தச்சமயம் எனும் பிரமாண்ட ஊர்வலங்கள் வாமனமூர்த்தி திருக்கர கோயில் மற்றும் கொச்சி முழுவதும் நடைபெறுகின்றன. ஓணத்தின் சிறப்பு பூக்களத்தில் எனும் பூக்கோலம். அதில் அத்தாப்பூ எனப்படும் முதல் அடுக்கு மஞ்சள் இதழ்களால் ஆன பூக்களால் போடப்படுகிறது. மக்கள் ஓணத்தின் ஒவ்வொரு நாளும் கோலத்தின் அடுக்குகளைச் சேர்கின்றனர்.

சித்திரா  - ஆகஸ்ட் 31, 2022
திருவிழாவின் இரண்டாவது நாளில், பூக்களத்தில் மேலும் இரண்டு அடுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் சித்திரை அன்று கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

நாளை தொடங்கும் ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்.. புலி களியாட்டம் பற்றி தெரிந்துகொள்வோமா!

சோதி/சுவாதி - செப்டம்பர் 1, 2022
இந்த நாளில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குகிறார்கள். பெண்கள் கசாவி புடவை, ஆண்கள் முண்டு அணிகிறார்கள். அதே நேரத்தில் சிறுமிகள் பட்டு பாவாடை அணிகின்றனர். ஓணக்கொடி என்று அழைக்கப்படும் விழாவைக் குறிக்கும் வகையில் பூக்களத்தில் மேலும் ஒரு அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

விசாகம் - செப்டம்பர் 2, 2022
மலையாளிகள் தங்கள் வீடுகளில் பருவத்தின் புதிய அறுவடை சிறப்பு தினத்தைக் குறிக்க குடும்பங்கள் பலவகையான உணவுகளை சமைத்து உண்கின்றனர்.ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இந்த உணவினை ஓண சாத்யா என அழைப்பர். பின் புலிகளி நடனங்கள் அரங்கேறும்.அனிழம் - செப்டம்பர் 3, 2022
ஐந்தாம் நாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பா ஆற்றில் வல்லம்களி என்ற புகழ்பெற்ற படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

திரிக்கேட்டா - செப்டம்பர் 4, 2022
திரிக்கேட்டா என்பது குடும்பங்கள் தங்கள் மூதாதையரின் வீடுகள் மற்றும் கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறும் சிறப்பு சந்தர்ப்பமாகும். இதற்கிடையில், பூக்களத்தில் புதிய மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் ஹிராம் பிங்காம் வரை..உலகின் பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்களின் பட்டியல்.

மூலம் - செப்டம்பர் 5, 2022
கொச்சி முழுவதும் உள்ள கோயில்களில் இந்த தினம் முதல் ஓணசத்யா வழங்கத் தொடங்குகிறது. கேரளாவின் பல்வேறு இடங்களில் புலிகளி, கைகொட்டுக்களி உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன.

பூராடம் - செப்டம்பர் 6, 2022
எட்டாவது நாளில், ஒவ்வொரு நாளும் பூக்கள் சேர்ப்பதன் மூலம் பூக்களம் பெரிதாகிறது. பூராடம் பூக்களத்தின் நடுவில் மகாபலி மற்றும் வாமனரின் களிமண் சிலைகளை வைத்து பூராடம் தொடங்குகிறது. புராணத்தின் படி, அந்த செயல் மகாபலிக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதற்கான அழைப்பைக் குறிக்கிறது.உத்திராடம் - செப்டம்பர் 7, 2022
மேலும், முதல் ஓணம் என்று அழைக்கப்படும். கேரளாவில் உள்ள அனைத்து பக்தர்களும் மகாபலியின் வருகையைக் குறிக்க சிறப்பு தயாரிப்புகளை செய்கிறார்கள். புதிய அறுவடையின் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

திருவோணம்- செப்டம்பர் 8, 2022
திருவிழாவின் கடைசி நாளான திருவோணம் என்பது மன்னன் மகாபலியை வரவேற்கும் அடையாளமாக மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு கொழப்பமிடுகின்றனர்.. ஓணசத்யா (நிறைவான ஓணம் விருந்து) குடும்பங்களால் தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Onam

அடுத்த செய்தி