ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக நிமோனியா தினம்: நிமோனியாவை குணப்படுத்தும் ஆரோக்கிய உணவு முறைகள் இதோ!

உலக நிமோனியா தினம்: நிமோனியாவை குணப்படுத்தும் ஆரோக்கிய உணவு முறைகள் இதோ!

நிமோனியாவை குணப்படுத்தும் ஆரோக்கிய உணவு முறைகள்

நிமோனியாவை குணப்படுத்தும் ஆரோக்கிய உணவு முறைகள்

நிமோனியா நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைப்பதற்கும் அதிலிருந்து மீள்வதிலும் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

நிமோனியா, என்பது ஒரு கடுமையான சுவாச தொற்றுநோய். நுரையீரலை பாதிக்கும் இந்த நோயால் 2019 ஆம் ஆண்டில் மட்டும் , 672,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். 

குழந்தைகளை பாதிக்கும் நிமோனியாவிற்கு எதிரான உலகளாவிய கூட்டணி நவம்பர் 12, 2009 அன்று 'ஸ்டாப் நிமோனியா” என்ற முன்மொழிவின் கீழ் முதல் உலக நிமோனியா தினத்தை அனுசரித்து. அதன் பிறகு, WHO மற்றும் UNICEF ஆகியவை நிமோனியாவைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த உலகளாவிய செயல் திட்டத்தைத் தொடங்கின.

அறிகுறிகள்

நிமோனியா என்பது ஒரு தொற்று நோயாகும், இது லேசானது முதல் கடுமையானது வரையிலான அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ,நடுக்கம், பசியிழப்பு,சோம்பல்,சளியில் ரத்தம்,நெஞ்சு வலி, இருமல் ஆகியவை ஏற்படும். இருமல் வறண்டதாக இருக்கலாம் அல்லது அடர்த்தியான மஞ்சள், பச்சை, பழுப்பு அல்லது இரத்தக் கறை படிந்த சளியை உருவாக்கும் இருமலாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 5 ஜூஸ் வகைகள்

நிமோனியா நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைப்பதற்கும் அதிலிருந்து மீள்வதிலும் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சிறந்த உணவுகள் இவைதான்…

தேன்

தேன் மருத்துவத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பாரம்பரிய பொருள். நிமோனியா நோயாளிகள் தேனை உட்கொண்டால் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற அசௌகரியமான அறிகுறிகளைக் குறைக்கலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பது நல்லது.

மஞ்சள்

நிமோனியாவின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றான மார்பு வலி, மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் குறைக்கப்படுகிறது. மஞ்சள் ஒரு மியூகோலிடிக் ஆக செயல்படுவதன் மூலம், மூச்சுக்குழாய் குழாய்களில் இருந்து சளியை அகற்ற உதவுகிறது. இதனால் சுவாசிப்பது எளிதாகிறது.

தயிர்

தயிர் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் சளி பிடிக்கும், மீண்டும் இருமல் அதிகரிக்கும் என்று அஞ்ச வேண்டாம். தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளது. இதில் உள்ள புரோபயாடிக்குகள் நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளரவிடாமல் தடுக்கிறது. உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்

நிமோனியா உள்ளவர்களுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவு பரிந்துரைக்கப்படுகிறது. கொட்டைகள், பயிர்கள், வேர்க்கடலை, பீன்ஸ், இறைச்சி மற்றும்  மீன் ஆகியவை அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்ட புரதம் நிறைந்த உணவுகள். இந்த உணவுகள் திசுக்களை குணப்படுத்துவதற்கும் மீளுருவாக்கம் செய்வதற்கும் உடலின் திறனுக்கும் உதவுகிறது.

தானியங்கள்

நோயாளிக்கு சளி மற்றும் காய்ச்சலும் இருக்கும்போது, ​​ மார்பு வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் நோயின் பக்கவிளைவு நிமோனியா உள்ளவர்களை மேலும் பலவீனம் ஆக்குகிறது. சக்தி குறைவதால் அவர்களை சோர்வடையச் செய்கின்றன. இது போன்ற நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைய சாப்பிட வேண்டும். சிவப்பரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகள் சேர்ப்பது நம்பை தரும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் சுவாச நோய்த்தொற்றின் மீட்புக்கு உதவுகின்றன. உதாரணமாக, முட்டைக்கோஸ், கீரை ஆகியவை அடங்கும். அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கின்றன.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை மேம்படுத்த பெரிதும் உதவும். இது எலுமிச்சை, ஆரஞ்சுகளில் ஏராளமாக உள்ளது. கூடுதலாக, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. நிமோனியாவை குணப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் தொண்டை புண் இருந்தால், ஆரஞ்சு சாப்பிடாதீர்கள். ஆரஞ்சில் உள்ள அமிலம் தொண்டை புண்ணை மோசமாக்கிவிடும். வைட்டமின் சி க்கு பெர்ரி, கிவி போன்ற பிற சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடலாம்.

இவை அனைத்தும் உங்கள் உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நிமோனியாவை குணப்படுத்தும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Healthy Food