இளமையான தோற்றத்தைப் பெற வீட்டிலேயே செய்யலாம் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்!

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
முகத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை நீக்க ஓட்ஸ் சிறந்த மாஸ்காகும். இந்த மாஸ்குகளை முகத்தில் அப்ளை செய்வதால் சருமத்துளைகளை இறுகச் செய்யும். இரத்த ஓட்டம் சீராகும். கொலாஜின் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இளமை என்றும் பாதுகாக்கப்படும்.

பால் மற்றும் ஓட்மீல் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள் 

ஓட்ஸ் - 1 tsp
பால் - 2 tsp
ஏலக்காய் - 1/4 tsp

செய்முறை : மேலே குறிப்பிட்ட மூன்றையும் கலந்து கெட்டியாகும் வரைக் கலக்ககவும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய விடவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். மென்மைக்கு மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஓட்ஸ்

தேவையான பொருட்கள் 

தேங்காய் எண்ணெய் - 1 tsp
ஓட்ஸ் - 3 tsp
வெதுவெதுப்பான நீர்

செய்முறை : தேங்காய் எண்ணெயில் ஓட்ஸ் கலந்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து கொள்ளவும். பேஸ்டை அப்ளை செய்வதற்கு முன் , முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஓட்ஸ் பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவிடவும். பேஸ்ட் இறுகியதும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.தயிர் மற்றும் ஓட்ஸ்

தேவையான பொருட்கள் 

தயிர் - 2 tsp
ஓட்ஸ் - 1/3 கப்
தேன் - 2 tsp
சுடு நீர் - 1/2 கப்
முட்டை வெள்ளை பகுதி - 1

செய்முறை : ஓட்ஸை சுடு நீரில் நன்கு கலக்கிக் கொள்ளவும். அதில் தேன், தயிர், முட்டை வெள்ளை பகுதி சேர்த்து நன்றாக கலக்கவும். தற்போது அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்து சருமம் இறுகும் வரை காயவிடவும். பின் வெதுவெதுப்பாக நீரில் கழுவி மென்மையான துணியால் தொட்டு எடுக்கவும்.

ஆப்பிள் மற்றும் ஓட்ஸ்

தேவையான பொருட்கள் 

ஆப்பிள் - பாதி அளவு
ரோஸ் வாட்டர் - 2 tsp
ஓட்ஸ் - 2 tsp
தேன் - 1 tsp

செய்முறை : ஆப்பிளை நன்கு பேஸ்டாக மசித்துக் கொள்ளவும். அதில் ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர், தேன் கலந்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காயவிட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ஓட்ஸ்

தேவையான பொருட்கள் 

பாதாப் எண்ணெய் - 1 tsp
ஓட்ஸ் - 1 கப் (வேகவைத்தது)
வாழைப்பழம் - பாதி அளவு
தேன் - 1 வேகவைத்தது
முட்டை - வெள்ளை பகுதி 1

செய்முறை : வாழை பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் ஓட்ஸ் , தேன் முட்டை. பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அடித்துக் கொள்ளவும். தற்போது அந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். இறுதியாக வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.வினிகர் மற்றும் ஓட்ஸ்

தேவையான பொருட்கள் 

ஆப்பிள் சிடர் வினிகர் - 1 tsp
ஓட்ஸ் - 3 tsp
சுடு நீட் - 1/4 கப்
தேன் - 1 tsp

செய்முறை : மேலே குறிப்பிட்ட மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் முகத்தை கழுவி அழுக்குக்களை துடைத்த பின் அந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய விடவும். இறுதியாக வெதுவெதுப்பான நீரினால் கழுவவும்.
Published by:Sivaranjani E
First published: