Home /News /lifestyle /

மகளிருக்கான 'Her Circle' இந்தி மொழி மொபைல் ஆப்பை தொடங்கி வைத்த நிடா அம்பானி

மகளிருக்கான 'Her Circle' இந்தி மொழி மொபைல் ஆப்பை தொடங்கி வைத்த நிடா அம்பானி

ஹெர் சர்க்கிள் ஆப் முதல் ஆண்டிலேயே தனது பெரும்பாலான இலக்குகளை அடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மகளிர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஹெர் சர்க்கிள் ஆப் முதல் ஆண்டிலேயே தனது பெரும்பாலான இலக்குகளை அடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மகளிர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஹெர் சர்க்கிள் ஆப் முதல் ஆண்டிலேயே தனது பெரும்பாலான இலக்குகளை அடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மகளிர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான 'Her Circle' என்ற மொபைல் ஆப்பின் இந்தி வெர்ஷனை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் நிடா அம்பானி இன்று தொடங்கி வைத்தார்.

    ஆங்கிலித்தில் ஹெர் சர்க்கிள் மொபைல் ஆப் மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 42 லட்சம்பேரை தாண்டி இந்த மொபைல் ஆப் மகளிர் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்புதான் இந்த ஆப்பை அதாவது ஆங்கில வெர்ஷனை நிடா அம்பானி தொடங்கி வைத்தார். ஓராண்டுக்குள்ளாக மிகப்பெரும் வரவேற்பை ஹெர் சர்க்கிள் ஆப் பெற்றிருந்தது.

    இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்தி வெர்ஷன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிடா அம்பானி பேசுகையில், 'மதம், மொழிகளைக் கடந்து ஹெர் சர்க்கிள் ஆப் மகளிருக்கு ஏராளமான பயன்பாடுகளை அளிக்கிறது. இன்னும் பலரை இந்த ஆப் சென்றடைய வேண்டும். அதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அவரவர் மொழியில் தகவல்கள் இருக்கும்போது, இன்னும் அதிக பலன்கள் ஏற்படும்.

    இப்போது இந்தி மொழியில் ஆப்பை தொடங்கியுள்ளோம். மார்ச் மாதம் இந்த ஆப் முழு பயன்பாட்டிற்கு வரும். ஆங்கில ஆப் பெற்ற வரவேற்பை விட இந்த ஆப் கூடுதல் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ஹெர் சர்க்கிள் என்று சொல்வதை விட நம்முடைய சர்க்கிள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்பை பயன்படுத்தும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இந்த இயக்கத்தில் இணைந்துள்ள பெண்களை நான் வரவேற்கிறேன். ஹெர் சர்க்கிளுடன் இணைந்திருப்பதை மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறேன்.

    ஹெர் சர்க்கிளில் நாம் நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம், கல்வி கற்போம், தகவல்களை பெறுவோம், பலன் அடைவோம், இணைந்திருப்போம் என்று கூறிக் கொள்கிறேன்.' என்று தெரிவித்தார்.

    ஹெர் சர்க்கிள் ஆப் முதல் ஆண்டிலேயே தனது பெரும்பாலான இலக்குகளை அடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். தொழில் முறையில் மேக் அப் கலைஞர்கள், சமையல் நிபுணர்கள், ஃபிட்னஸ் வல்லுனர்கள், நாய் பயிற்சியாளர்கள் என பல்வேறு துறை நிபுணர்கள் இந்த ஆப்பில் இணைந்துள்ளார்கள்.

    30 ஆயிரம் தொழில் முனைவோர் இந்த ஆப்பில் இணைந்துள்ளார்கள். நெட்வொர்க் 18 குழுமத்தை சேர்ந்த எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையின் வல்லுனர்கள், 24 மணி நேரமும் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை ஹெர் சர்க்கிள் மூலம் வழங்கி வருகிறார்கள்.

    மனநல நிபுணர்கள், தோல் நிபுணர்கள் உள்பட பல்வேறு நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் ஆயிரக்கணக்கான மகளிருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஃபிட்னஸ் ட்ரேக்கர்கள், ஊட்டச்சத்து, மகளிருக்கான உடல் நல அனைத்து சேவைகள் உள்ளிட்டவற்றை 1.50 லட்சம் சந்தாதாரர்கள் இலவசமாக பெறுகின்றனர்.

    கீதா கோபிநாத், நைனா லால் கித்வாய், பத்ம ஸ்ரீ குலாபோ சபேரா, கீதா போகத் உள்ளிட்ட நிபுணர்களின் நேர்காணல்களும் ஹெர் சர்க்கிள் ஆப்பில் இடம் பெற்றுள்ளன. 'Her Circle' ஆப் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, ஹெர் சர்க்கிள் இதழுக்கு நிதா அம்பானி பிரத்யேக நேர்காணலை அளித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Nita Ambani

    அடுத்த செய்தி