Home /News /lifestyle /

கூட்ட நெரிசல்களில் குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க புதிய யுக்தி...!

கூட்ட நெரிசல்களில் குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க புதிய யுக்தி...!

சைல்ட் லாக்

சைல்ட் லாக்

கூட்ட நெரிசலான இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருவிழாக்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு செல்லும் போது தங்கள் குழந்தைகள் எங்கும் தொலைந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும்.

காணும் பொங்கல் தினத்தன்று மெரினா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வரும் குழந்தைகளின் கைகளில் அவர்களின் பெற்றோர் பெயர் தொடர்பு எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன அல்லது டேக் ஒட்டப்பட்டன.

இந்த ஸ்டிக்கர் அல்லது டேக் கீழே விழுந்து விட்டால் குழந்தையை கண்டுபிடிப்பது கடினமாகி விடும்.
குழந்தைகள் பெற்றோர்களின் கண் பார்வையிலேயே இருக்கும் வண்ணம் அவர்களின் கைகளில் சைல்டு லாக் போடலாம்.

சைல்டு லாக்கின் ஒரு புறம் குழந்தையின் கையிலும் மறுபுறம் பெற்றோரின் கையிலும் இருக்கும். குழந்தை 3 அடி வரை செல்ல சைல்டு லாக் நீளும். குழந்தை தவறுதலாக கூட அந்த லாக்கை கழற்றி விட முடியாது. பெற்றோரின் கையில் இருக்கும் ஒரு சிறு சாவி வைத்து திறந்தால் மட்டும் குழந்தை கையில் இருக்கும் சைல்டு லாக் திறக்கும்.

இந்த சைல்டு லாக் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை காயப்படுத்தாது. குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விடாமல் கட்டி போடுவது போல் இது இருப்பதாக தோன்றினாலும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவசியமான ஒன்றாகவே உள்ளது.

குழந்தைகள் கடற்கரையில், பூங்காவில் என பொது இடங்களில் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிந்தால், இந்த சைல்டு லாக்கை பயன்படுத்தாமல் குழந்தைகளை அவர்கள் போக்கில் இருக்கவிட்டு, மிகவும் நெரிசலான நேரங்களில் மட்டுமே பெற்றோர்களை இதை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

குழந்தைகளை தேவையில்லாத கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாமல் அதே நேரம் அவர்களை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வது பெற்றோரின் கடமையாக உள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி