• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 'சமூக இடைவெளி மட்டும் போதாது'.. கொரோனா வைரஸ் பற்றி புதிய ஆய்வு கூறுவது என்ன ?

'சமூக இடைவெளி மட்டும் போதாது'.. கொரோனா வைரஸ் பற்றி புதிய ஆய்வு கூறுவது என்ன ?

காட்சி படம்

காட்சி படம்

Corona Virus : கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி மட்டும் போதாது..

  • Share this:
ஒரு வைரஸ் தொற்று உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் என்று யாருமே கணித்திருக்க முடியாது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடியப் போகிறது. பல மாதங்கள் ஊரடங்கு, கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள், மற்றும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் கோவில் தோற்று அச்சுறுத்தக் கூடியதாகவே இருக்கிறது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்ற இரண்டு நடைமுறைகளுமே கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்திய ஆய்வுகள் சமூகவியல் மட்டும் சமூக விலகல் மட்டுமே கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில், கைகளை கழுவுவது மற்றும் வீடு நம் சுற்றுவட்டாரத்தை சுத்தமாக வைத்திருப்பது ஆகியவை மீதுதான் அதிக கவனம் இருந்தது. ஆனால், கொரோனா காற்றில் பரவும் நோய் என்பது தெளிவான பின் பாதிக்கப்பட்ட நபர் பேசும் போது, இரும்பும் போது அல்லது தும்பும் போது வெளியாகும் டிராப்லெட்கள் வழியே காற்றில் கலந்து மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதைக் கண்டறிந்தவுடனே, சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இங்கிலாந்தில் நடந்த ஒரு புதிய ஆய்வு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மட்டுமே இதன் பரவலை தடுக்காது என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பொறியாளர்கள் குழு ஒன்று காற்றில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பது பற்றிய ஆய்வில், ஃப்ளுயிட் மெக்கானிக்ஸ் அடிப்படையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் மாஸ்க் அணியவில்லை என்றால் அவர் இரண்டு மீட்டர் தொலைவில் இருந்தாலும் அவர் மூலம் பிறருக்கு தொற்று பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அடிப்படையில் இந்த நோய் எப்படி பரவுகிறது என்பதை பற்றிய ஆய்வை ஃபிசிக்ஸ் ஆஃப் ஃப்ளூயிட் என்ற ஜர்னலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஷ்ரே திரிவேதி வெளியிட்டுள்ளார். வைரஸ் பாதிப்பு உள்ளான ஒரு நபருக்கு அதன் தாக்கம் எந்த அளவுக்கு, அவர் உடலில் உள்ள வைரஸ் பார்ட்டிக்கிள்களின் எண்ணிக்கை என்ன, இருமும்போதும் தும்மும் போது, பேசும் போது எவ்வளவு வைரல் வெளிப்படுத்துகிறார்கள் என்பது வைரஸ் பரவும் விகதத்தை தீர்மானிக்கிறது.

also read : சத்தமின்றி இளம் வயதினரையும் தாக்கும் ஆர்த்ரைடிஸ்.. அறிகுறிகள் என்ன..?

ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் அடிப்படையில் ஒருவர் இருமல் அல்லது தும்மலின்போது பேசுவது மூலம் வெளியாகும் ஒவ்வொரு துளி எச்சிலும் காற்றில் என்ன ஆகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. ஒவ்வொரு முறை நான் இருமும்போதும் வெவ்வேறு அளவிலான டிராப்லெட்கலை வெளியிடுகிறோம். கொழும்புவில் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் இருமும் பொழுது அவர் எவ்வளவு வைரல் பார்ட்டிகளை வெளியிடுகிறார் என்பது மாறுபடும் எனவே இரண்டு அல்லது மூன்று மீட்டர் இடைவெளி என்பது பாதுகாப்பானதாக இருந்தாலும் அது 100% பாதுகாப்பானது அல்ல. எனவே சமூக இடைவெளி மட்டும் போதாது. தடுப்பூசி மற்றும் மாஸ்க்குகள் பயன்படுத்துவது, குளிர்காலத்தில் தொற்று அதிகரிக்காமல் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது

உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் தொற்று எப்போது முழுவதுமாக நீங்கும் என்று அனைவரும் தீர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எனவே, வெளிப்புறங்களில் மட்டுமல்லாமல், அலுவலகங்கள், பள்ளி வகுப்புகள் மற்றும் கடைகள் உட்பட உட்புறங்களிலும், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: