எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மாருதி ஸ்விப்ட் புதிய மாடல் அறிமுகம்

news18
Updated: February 8, 2018, 9:08 PM IST
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மாருதி ஸ்விப்ட் புதிய மாடல் அறிமுகம்
news18
Updated: February 8, 2018, 9:08 PM IST
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விப்ட் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட ஸ்விப்ட் டிசையர் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு, சந்தையில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மாருதி நிறுவனத்தின் மற்றொரு மாடலான ஸ்விப்ட்  எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எஃஸ்போ வாகன கண்காட்சியில் மாருதி ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்விப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் தோராயமாக இதன் விலை ரூ.4.78 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்விப்ட் மாடல் ஹூண்டாய் கிராண்ட் ஐ டென், நிஸ்ஸான் மைக்ராவுக்கு நேரடி போட்டியாக களம் இறங்குகிறது.

புதிய மாருதி ஸ்விப்ட் காரில் 7 அங்குல தொடுதிரை கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை ஆதரிக்கும்.

சற்று மாற்றம் செய்யப்பட்ட உள் இருக்கை அமைப்பு, வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட முகப்பு விளக்குகள், இரட்டை ஏர்பேக் வசதி, ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
First published: February 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...