லாம்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ் வகைகளின் வரிசையில், கொரோனாவின் மற்றொரு புதிய மாறுபாடு தற்போது மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாறுபாடு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மக்களிடையே வேகமாக பரவிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கொரோனா வேரியண்ட்-ஐ தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் குவாசுலு-நேடல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் வரிசைத் தளத்தின் விஞ்ஞானிகள் கூற்றுப்படி, C .1.2 மாறுபாட்டின் முதல் பாதிப்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானியால் தன முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய மாறுபாடு வருடத்திற்கு 41.8 என்ற விகிதத்தில் மாறுகிறது. இது மற்ற கொரோனா மாறுபாடுகளின் தற்போதைய உலகளாவிய மாற்றத்துடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாகும். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவின் தெரிவித்ததாவது, "WHO தென்னாப்பிரிக்க ஆராய்ச்சியாளர்களுடன் COVID-19 தொற்றுநோய் வகைகள் முழுவதையும் வரிசைப்படுத்துவது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறது.
C.1.2 மாறுபாட்டை முதலில் கண்டறிந்து கடந்த ஜூலை மாதம் அதனை WHO வைரஸ் பரிணாமக் குழுவுக்கு தெரிவித்த தென்னாப்பிரிக்கா ஆராய்ச்சியாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்போது வரை, உலகளவில் C.1.2 வகையால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. எனவே இந்த மாறுபாடு தற்போதைய சூழலில் அதிகரிப்பது போல தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த C.1.2 மாறுபாடு மற்ற வகைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிறழ்வு விகிதம் தற்போதைய மற்றும் பிற வகைகளிலிருந்து இரட்டிப்பாக உள்ளது. இந்த மாறுபாட்டின் பிறழ்வு விகிதம் வருடத்திற்கு 41.8% ஆகும். இதனை கணக்கிட்டு பார்த்தல், தற்போதைய உலகளாவிய கொரோனா பிறழ்வு விகிதத்தை விட இரட்டிப்பாகவும் வேகமாகவும் இருக்கும். எனவே, இந்த கொரோனா வேரியண்ட் C.1.2-ன் பாதிப்பு வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விஞ்ஞானியின் கூற்றுப்படி, இந்த மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகளின் பாதுகாப்பு பயனுள்ளதாக இல்லை. ஆய்வுகளின் படி, இந்த மாறுபாடு ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கலாம் என்று கூறப்படுகிறது.
Also read : இந்த 2 தடுப்பூசிகள் கொரோனா அபாயத்தை குறைக்க உதவும்.. ஆய்வில் தகவல்
இந்த புதிய மாறுபாடு நினைக்கும் அளவுக்கு அச்சுறுத்தல் வாய்ந்ததா?
இந்த புதிய வேரியண்ட் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தல் தற்போது இல்லை. ஏனெனில் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு இப்போதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய மாறுபாடு மொரீஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த புதிய வகை இந்திய மக்களையும் தாக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus