Home /News /lifestyle /

நீரிழிவு சம்பந்தப்பட்ட பார்வை இழப்பிற்கு எதிரான ஸ்கிரீனிங் என்பது என்ன? பாதுகாக்கும் செயல்முறையில் செயற்கை நுண்ணறிவு.!

நீரிழிவு சம்பந்தப்பட்ட பார்வை இழப்பிற்கு எதிரான ஸ்கிரீனிங் என்பது என்ன? பாதுகாக்கும் செயல்முறையில் செயற்கை நுண்ணறிவு.!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

Diabetic Retinopathy | நீரிழிவு நோயின் சுமை நீரிழிவு நோயால் மட்டும் ஏற்படவில்லை, அதனுடன் மேலும் பல சிக்கல்கள் கைகோர்த்துள்ளன. உலகில் குருட்டுத்தன்மைக்கு ஐந்தாவது முக்கிய காரணமாக நீரிழிவு நோய் மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலகின் நீரிழிவுத் தலைநகரம் என்ற சந்தேகத்திற்குரிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?. கணிப்புகளின்படி, நீரிழிவு நோய் இந்தியாவில் மிகவும் தீவிரமான பிரச்சனையாகி வருகிறது, மேலும் அது விரைவாகப் பரவுகிறது. இன்டர்நேஷனல் டையபட்டீஸ் ஃபெடரேஷன் அட்லஸ் 2019 ஆனது 2019ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள வயது வந்தோரில் சுமார் 77 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 101 மில்லியனாகவும், 2045ஆம் ஆண்டில் 134 மில்லியனாகவும் உயரும் என்றும் கணித்துள்ளது. 

    நீரிழிவு நோயின் சுமை நீரிழிவு நோயால் மட்டும் ஏற்படவில்லை, அதனுடன் மேலும் பல சிக்கல்கள் கைகோர்த்துள்ளன. உலகில் குருட்டுத்தன்மைக்கு ஐந்தாவது முக்கிய காரணமாக நீரிழிவு நோய் மாறியுள்ளது. உலகளவில் நீரிழிவு நோயாளிகளிடையே காணப்படும் பார்வைக் குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நீரிழிவு ரெட்டினோபதி நோய் உள்ளது. நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீரிழிவு நோய் வழியாக கண்களைத் தாக்கும் ஒரு சிக்கலாகும், இது விழித்திரையை பாதிக்கிறது. மேலும் இது ஆரம்ப கட்டத்தில் அறிகுறியற்றதாக இருந்தாலும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்

    நற்செய்தி என்னவெனில், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மருத்துவ வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைபிடிப்பதன் மூலம் DR காரணமாக ஏற்படும் பார்வை இழப்பை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். இருப்பினும், நோயறிதல் செயல்முறையை மேற்கொள்வது முதல் படிநிலையாகும். ஒரு கண் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் DR ஸ்கிரீனிங் மற்றும் கண் பரிசோதனை மூலம் DR இருப்பதைக் கண்டறியலாம்

    இருப்பினும், இந்தியாவில் நோயைக் கண்டறிவதே ஒரு சவாலாக இருக்கிறது. DR நோயைக் கண்டறிவது கடினமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன:


    இடம்: நீங்கள் ஒரு சிறிய நகரத்திலோ அல்லது கிராமப்புறத்திலோ இருந்தால் அங்கே கண் சிகிச்சை நிபுணர்கள் குறைவாக இருப்பார்கள் மற்றும் தொலைதூரத்தில் இருப்பார்கள். மருத்துவருக்கு பணிச்சுமை இருக்கும் காரணத்தினால் அவரைச் சந்திப்பதற்கு குறிப்பிட்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்

    நேரம்: பணிபுரியும் வயதில் உள்ள DR நோயாளிகள் சில நேரச் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் நேர அட்டவணை நெகிழ்வானதாக இருந்தால் அல்லது பகலில் மருத்துவர் சந்திப்புகளைத் திட்டமிட உங்கள் வேலை உங்களை அனுமதித்தால் அது சிறந்ததாக இருக்கும்! அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் மருத்துவர் சந்திப்பைத் தள்ளிப் போடுவீர்கள்... காரணம், ஒரு மருத்துவரைச் சந்திப்பதற்காக அரை நாளைக் கழிக்க யாருக்குத்தான் நேரம் இருக்கிறது? குறிப்பாக விடுப்பு எடுத்துவிட்டு மருத்துவரைச் சந்திக்க வந்த நேரத்தையும், அதனால் ஏற்படும் சம்பள இழப்பையும் உங்களால் தாங்கிக்க இயலாத பட்சத்தில்

    உங்களுக்கு நெகிழ்வான நேரங்கள் இருக்கிறது, பெருநகரப் பகுதியில் வசிக்கிறீர்கள், தரமான மருத்துவச் சேவையை உங்களால் பெற முடியும் என்றாலும்கூட, நீரிழிவு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கக்கூடிய பயிற்சி பெற்ற கண் மருத்துவர்களின் விகிதம் அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, DR என்பது ஒரு நாள்பட்ட நோய் என்பதால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும் வரை ஆபத்தை அதிகரிக்கும். எனவே வருடாந்திர பரிசோதனை அவசியம்

    இந்தியாவில் சுமார் 12,000 கண் மருத்துவர்கள் உள்ளனர் (தோராயமாக, 3500 பயிற்சி பெற்ற விழித்திரை நிபுணர்கள்). ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 8,333 நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு கண் மருத்துவர் என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது. இந்த நோயாளிகள் அனைவரும் தங்கள் கண் மருத்துவர் இருக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே வசித்தாலும், அவர்களின் வருடாந்திர DR பரிசோதனைக்காக மருத்துவர் அவர்களைப் பார்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது

    ரெடினா சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இணைச் செயலாளரான டாக்டர் மனிஷா அகர்வாலின் கூற்றுப்படி, மருத்துவத் துறை இந்த இடைவெளியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது. எனவே உண்மையில் ஒரு கண் சிகிச்சை நிபுணரின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் AI தீர்வுகளை நோக்கி அதன் கூட்டுப் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த நோக்கங்கள் பொருத்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால் DR ஸ்கிரீனிங்கிற்கு ஒரு தகுதிவாய்ந்த கண் மருத்துவர் தேவை என்றாலும், உண்மையான நோயறிதலும் சிகிச்சை உத்தியும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    DR இல்லாத வழக்குகளை வடிகட்ட ஒரு வழி இருக்கும் என்றால், எனவே கட்டாயமாக உதவி தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்தி கவனம் செலுத்த முடியும் என்றால் எப்படியிருக்கும்? அதற்குரிய பதில்தான் AI. 

    இந்தியாவில் உள்ள ஒரு மூன்றாம் நிலை நீரிழிவு நோய் மையத்தில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 301 நோயாளிகள் Remidioவின் "Fundus on phone" (FOP) எனப்படும் ஸ்மார்ட்போன் சார்ந்த சாதனத்தைப் பயன்படுத்தி தங்கள் விழித்திரையைப் புகைப்படம் எடுத்தனர். 296 நோயாளிகளின் விழித்திரைப் படங்கள் தரப்படுத்தப்பட்டன. 191 (64.5%) நோயாளிகளிடம் கண் மருத்துவர்கள் மூலமாகவும், 203 (68.6%) நோயாளிகளிடம் AI மென்பொருள் மூலமாகவும் DR இருப்பது கண்டறியப்பட்டது, அதே வேளையில் பார்வையை அச்சுறுத்தும் DR முறையே 112 (37.8%) மற்றும் 146 (49.3%) நோயாளிகளில் கண்டறியப்பட்டது.

    DR இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் கேஸ்களைக் கொடியிடும் வகையில் AI சாதனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நமது கண் மருத்துவர்களைக் காட்டிலும் AI சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏனென்றால், AI வெளிப்படையானகேஸ்களை மட்டுமே வடிகட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின், அத்தகைய கேஸ்களை AI கண் மருத்துவருக்கு அனுப்புகிறது

    Radical Healthயின் இணை நிறுவனரான ரிட்டோ மைத்ரா, "Radical Health உருவாக்குவதும் நாங்கள் பிரச்சாரம் செய்வதை நோக்கமாகக் கொண்டதும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி படத்தை க் கேப்சர் செய்யும் திறனைத்தான். இதனால் கேப்சர் செய்யப்படும் ஒவ்வொரு படமும் ஒரு விழித்திரை நிபுணரின் உதவி தேவைப்படாமல் உடனுக்குடனேயே முடிவுகளைக் காண்பிக்கும் திறன் கொண்டது" என்று கூறுகிறார். நீரிழிவு நோய் நிபுணர்கள், குடும்ப மருத்துவர்கள், முதன்மை சிகிச்சை மருத்துவமனைகள், அரசு அமைப்புகள், மாவட்ட மருத்துவமனைகள்... என இந்தச் செயல்முறையை எங்கிருந்தும் யாரிடமிருந்தும் செய்யலாம். Radical Health யின் ஆயத்த தயாரிப்பான AI சொல்யூஷன் ஏற்கனவே பல மருத்துவ மையங்களில் பயன்பாட்டில் உள்ளது.

    AI தீர்வுகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இப்போது AI சாதனங்களால் உங்களுக்குச் சிறந்த முடிவுகளைக் காண்பிக்க முடியும் என்பதால் உங்கள் மருத்துவருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சை கட்டாயம் என்ற பட்சத்தில் மட்டுமே நீங்கள் மருத்துவரைச் சந்தித்தால் போதும். கூடுதலாக, சீரான இடைவெளிகளில் கண் மருத்துவரைச் சந்திக்க முடியாத அளவிற்குத் தொலைவில் உள்ள கிராமப்புற இடங்களில் இந்த சோதனை பயன்படுத்தப்படலாம். பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் பரிசோதனையை நடத்தலாம், அதன் முடிவுகளின் அடிப்படையில், மக்களை உள்ளூரில் உள்ள கண் மருத்துவரிடம் கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பலாம்

    முடிவுரை

    DR என்பது கண்பார்வையைத் தாக்கும் ஒரு மௌனக் கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, ஆனால் அது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் அதற்கு காரணம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் DR பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தால், இன்று நினைவில் இல்லாத பல நோய்களுக்கு எதிராக நாம் செய்தது போலவே இந்த நோயையும் வரலாற்றிலிருந்து அகற்றி விடலாம்

    இந்த உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டும், நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கான ஸ்கிரீனிங்கின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், Novartis உடன் இணைந்து Network18 ஆனது Netra Suraksha முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது இந்த முயற்சியின் இரண்டாவது சீசன் ஆகும். இது DR பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதையும், கட்டுக்கதைகளை அகற்றுவதையும் மற்றும் கண் நோய்க்கான தடுப்பு பரிசோதனைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது

    Netra Suraksha முன்முயற்சி இணையதளத்தைப் பார்வையிட்டு நீரிழிவு ரெட்டினோபதி நோயைப் பற்றியும், அதனால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுப்பது பற்றியும் மேலும் அறிந்து கொள்ளுங்கள்

    குறிப்பு:  

    • Pandey SK, Sharma V. World diabetes day 2018: Battling the Emerging Epidemic of Diabetic Retinopathy. Indian J Ophthalmol. 2018 Nov;66(11):1652-1653. Available at:  https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6213704/ [Accessed 4 Aug 2022] 

    • IDF Atlas, International Diabetes Federation, 9th edition, 2019. Available at: https://diabetesatlas.org/atlas/ninth-edition/ [Accessed 4 Aug 2022] 

    • Abràmoff MD, Reinhardt JM, Russell SR, Folk JC, Mahajan VB, Niemeijer M, Quellec G. Automated early detection of diabetic retinopathy. Ophthalmology. 2010 Jun;117(6):1147-54. Available at: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2881172/ [Accessed 4 Aug 2022]

    • Complications of Diabetes. Available at: https://www.diabetes.org.uk/guide-to-diabetes/complications [Accessed 25 Aug 2022]

    • Kumar S, Kumar G, Velu S, et al, Patient and provider perspectives on barriers to screening for diabetic retinopathy: an exploratory study from southern India. BMJ Open 2020;10:e037277. doi: 10.1136/bmjopen-2020-037277. Available at https://bmjopen.bmj.com/content/10/12/e037277 [Accessed on 6 Sep 2022]

    • Ramachandran Rajalakshmi, Umesh C Behera, Harsha Bhattacharjee, Taraprasad Das, Clare Gilbert, G V S Murthy, Hira B Pant, Rajan Shukla, SPEED Study group. Spectrum of eye disorders in diabetes (SPEED) in India. Report # 2. Diabetic retinopathy and risk factors for sight threatening diabetic retinopathy in people with type 2 diabetes in India. Indian J Ophthalmol. 2020 Feb;68(Suppl 1):S21-S26.. Available at https://pubmed.ncbi.nlm.nih.gov/31937724/ [Accessed on 25 Aug 2022]

    • Rajalakshmi R, Subashini R, Anjana RM, Mohan V. Automated diabetic retinopathy detection in smartphone-based fundus photography using artificial intelligence. Eye (Lond). 2018 Jun;32(6):1138-1144. Available at: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5997766/ [Accessed 4 Aug 2022]

    • Revelo AI Homepage. Available at https://revelo.care/ [Accessed 6 Sep 2022]

    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Eye care, Netra Suraksha

    அடுத்த செய்தி