ஊழியர்களின் விமர்சனங்களை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா?

மேலாளர் மீது ஊழியர்கள் வைக்கும் விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் கருதுகின்றனர்.

news18
Updated: June 14, 2019, 10:24 PM IST
ஊழியர்களின் விமர்சனங்களை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா?
அலுவலகம்
news18
Updated: June 14, 2019, 10:24 PM IST
விமர்சனங்களை (Negative feedback) ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அப்படி அலுவலகத்தில் எதிர்மறை கருத்துகளை பெரும்பாலான ஊழியர்கள் தவறாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் அந்தக் கருத்து யாரிடமிருந்து வருகிறது என்பதைப் பொறுத்தது என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வை ஜர்னரல் அகாடமி ஆஃப் மேனேஜ்மெண்ட் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர் அல்லது மேலாளரிடமிருந்து வரும் எதிர்மறைக் கருத்துகளால் துவண்டு போகின்றனர். தன்னுடைய உற்பத்தி மற்றும் திறனில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர்.ஆனால், அதுவே குழு உறுப்பினர்களிடமிருந்து எதிர்மறைக் கருத்துகள் வந்தால், அதை நேர்மறையாக ( Positive ) எடுத்துக்கொண்டு திருத்திக்கொள்கின்றனர். அதாவது தன் குழு உறுப்பினர்கள் முன் வைக்கும் விமர்சனங்களை மேலாளர்கள் நல்ல நோக்கத்தோடு உள்வாங்கிக்கொண்டு திருத்திக்கொள்கின்றனர் என்கிறது ஆய்வு.

இது எவ்வாறு சாத்தியம் என்பதை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது, மேலாளர்தான் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு ,செயல் திறன் மதிப்பீடு ஆகியவற்றில் முடிவெடுக்கக் கூடியவர். அவர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கும் எதிர்மறைக் கருத்துகள் அவர்களுக்கு மனஅழுத்தத்தையும், வேலை மீதான பயம், பதட்டத்தை உண்டாக்குகிறது. அதேசமயம் சக ஊழியர்கள் தரும் எதிர்மறைக் கருத்துகள் அவர் சரியாகச் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு குந்தகம் விளைவிப்பதுபோல் அரசியல் செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றும்.அதுவே மேலாளர் மீது ஊழியர்கள் வைக்கும் விமர்சனங்களை, தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும், தன் ஆளுமையில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டு உயர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும் அந்த விமர்சனங்களை ஏற்று திருத்திக்கொள்கின்றனர் என்று தெளிவாக விளக்குகிறது அந்த ஆய்வு.
Loading...
இந்த ஆய்வை நடத்திய இயூன் ஜூன் கிம் “ ஊழியர்கள் மேலாளருக்கு தவறைச் சுட்டிக்காட்டும்போது வார்த்தைகளைக் கவனமுடன் கையாளுங்கள்” என எச்சரிக்கிறார்.

மேலும் அவர் ”மேலாளர்களும் தங்களுக்குக் கீழ் வேலை செய்யும் ஊழியர்களை விமர்சிக்கும்போது, மிகவும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் அதைத் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொண்டு மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்” என்று கூறுகிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...