உலகம் இப்போது எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் புவி வெப்பமயமாதல். பல்வேறு காரணிகளால் நாம் வாழும் பூமியின் வெப்பம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அளவிற்கு அதிகமான புவி வெப்பத்தால் சுற்றுச் சூழல் மிக மோசமடைந்து பருவநிலைச் சங்கிலியே சீர்குழைந்துவருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
அதன் விளைவால் உலகின் பல நாடுகள், அதீத மழை, புயல், உடலை எரிக்கும் வெயில் என பல்வேறு இயற்கைச் சீரழிவுகளை சந்தித்து வருகின்றன. புவி வெப்பமடைவதற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்ற பசுமைக் குடில் வாயுக்கள்.
அதாவது நாம் பயன்படுத்தும் ஏ.சி, கார்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் உருவாகும் கரிய மில வாயுக்களால் புவியின் வெப்பம் அதிகரித்துவருகிறது. நாம் வசதியாக வாழ வேண்டும். அதே நேரம் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். இது பல நேரங்களில் சாத்தியமில்லாமல் போகிறது. இதை சாத்தியமாக்கும் பல்வேறு முயற்சிகள் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்களை இயற்கையை பாதிக்காமல் எப்படி பயன்படுத்துவது என சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதன் விளைவுதான் எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற தொழில் நுட்ப மாற்றங்கள். அப்படித் தான் இயற்கையாக மின்சாரமில்லாமல் நம் அறையை குளுமையாக்கும் ஒரு இயற்கை சாதனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அது தான் இந்த இயற்கை ஏசி அமைப்பு.
சுற்றுச்சூழல் மாசில்லாமல் நம் வாழும் அறையை எப்படி குளுமையாக்குவது என யோசித்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த டெக்கி என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் தற்போது முற்றிலும் இயற்கை சார்ந்த குளிரூட்டியை வடிவமைத்துள்ளது. இந்த குளிரூட்டிக்கு உத்வேகமே மண்பானை தான்.
மண்ணால் செய்யப்பட்டு அடுப்பில் சுடப்பட்ட பானை எப்படி தண்ணீரை குளுமையாக்குகிறதோ.. அதேபோல மண் பானையைக் கொண்டு நம் அறையின் வெப்பத்தை ஏன் குறைக்க முடியாது என யோசித்த அவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினார்கள். அப்படி வடிவமைக்கப்பட்டது தான் இந்த டெரகோட்டா குழாய்கள். ஒரு புறம் வாய் அகன்று மறுபுறம் அதைவிட குறுகலான வாயுடன் மண்ணால் குழாய்கள் செய்து, அதை நெருப்பில் சுட்டு, வரியைாக அடுக்கி வாய் அகன்ற பக்கத்தில் தண்ணீரை விழச்செய்தார்கள். குழாய் சிறிது நேரம் நனைந்த பிறகு அகன்ற வாய் வழியாக செல்லும் காற்று குறுகலான வாய் வழியாக வெளியேறும் போது குளிரூட்டப்பட்டு வருகிறது.
இப்படி பல குழாய்கள் வழியாக வெப்பம் தணிக்கப்பட்ட காற்று அறைக்குள் நிரம்பிய பிறகு அறையின் வெப்பம் தணிந்து மெல்ல மெல்ல குளுமையடைகிறது. சிறிது நேரத்தில் ஏசியில் இருப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. குழாய்கள் மேல் ஊற்றப்படும் தண்ணீர் ஒரு சிறிய தொட்டி மூலம் சேகரிக்கப்பட்டு மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது.
எல்லைப் பகுதியில் இனி யாரும் தப்ப முடியாது… பறந்து கண்காணிக்க ராணுவ வீரர்களுக்கு ஜெட்பேக்...
இது முற்றிலும் இயற்கையான, செலவில்லாத, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத குளிரூட்டி. அதனால் இந்த முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் வெயில் காலம் நெருங்கும் நிலையில் ஆஃபர் விலையில் ஏசி வாங்கும் எண்ணம் இருந்தால் அதை விட்டுவிட்டு இந்த இயற்கை குளிரூட்டியை செயல்படுத்திப் பாருங்கள். காசும் மிச்சம். இயற்கையையும் சுத்தமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air conditioner