Home /News /lifestyle /

மன அழுத்தம் அதிகமாக உள்ளதா? இந்த வழிமுறைகளை மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க..

மன அழுத்தம் அதிகமாக உள்ளதா? இந்த வழிமுறைகளை மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க..

மன அழுத்தைதை குறைக்கும் வழிகள்

மன அழுத்தைதை குறைக்கும் வழிகள்

மன அழுத்தைதை இயற்கையான முறையில் குறைக்க இந்த செயல்களை தவறாமல் தினசரி வாழ்வில் பின்பற்றவும். நல்ல முன்னேற்றம் தெரியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயந்திரம் போன்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாலும் மன அழுத்தம் என்பது அனைவரின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. முறையான உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றை மறக்காமல் பின்பற்றினாலே மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

    இன்றைக்கு மக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது மன அழுத்தம். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என கூறுவதைக் கேட்டிருப்போம். மன அழுத்தம் ஒருவருக்கு எவ்வித வேலையையும் சரியாகச் செய்ய முடியாத அளவிற்கு ஒருவித அழுத்தத்தை நமக்கு ஏற்படுத்தும். இதனால் பல உடல் நலக்குறைபாடுகளையும் நாம் சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடனும், முறையான பயிற்சிகளை மேற்கொண்டு எப்படி மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.


    நாள் முழுவதும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் வழிமுறைகள்:

    ஆழ்ந்த சுவாசம் (Deep breathing) :

    ஆழ்ந்த சுவாசம் இறுக்கமான தசைகளைத் தளர்த்த உதவுவதோடு உடலைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது. தினமும் நீங்கள் இவற்றை மேற்கொள்ளும் போது உங்களது உணர்வுகளை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.


     

    செல்போனில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்:

    செல்போன் பயன்பாட்டைக் குறைப்பது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஹைல்த்லைன் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் தேவைப்படும் நேரங்களில் மட்டும் செல்போன் பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இதனால் அதிக நேரம் விழித்து இருக்காமல் விரைவில் தூங்க நேரிடும். ஆழ்ந்த தூக்கம் உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும்.


    ஒருவேளை உங்களால் செல்போன் பயன்பாட்டை உடனடியாக குறைக்க முடியவில்லை என்றால், புத்தகம் வாசிப்பு, பாடல் கேட்பது, ஓவியம் போன்ற உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்தவும்.


    ஆரோக்கியமான உணவு:

    உடல் நலத்திற்கு ஏற்ற வகையில் புரதம், புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உங்களுக்கு உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது.


    உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்:

    உங்களது மன அழுத்தத்தைக்குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் பயனளிக்கும். ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களது வீட்டிற்கு அருகில் வாக்கிங் அல்லது சைக்கிளிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


    வேலையில் ஓய்வு தேவை:

    வேலையை மட்டும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருப்பவர்க்கு, வேலைக்கு மத்தியில் சிறிது நேரம் ஓய்வு தேவை. இது உங்களது உடல் மற்றும் மனதைப் புத்துணர்வோடு வைத்திருக்க உதவுகிறது. மேலும் சுய கட்டுப்பாட்டுடன் உங்களது உடல் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும்.


    இதோடு உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவழிக்கலாம். மன அழுத்தம் உள்ள நேரத்தில் நிச்சயம் அவர்களால் ஏதாவது ஒரு யோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். இதுபோன்று விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் மன அழுத்தத்திற்கு நல்ல தீர்வாக அமையும். இருந்தபோதும் உங்களால் மன அழுத்தத்திலிருந்து மீள முடியவில்லை என்றால் மன நல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
    Published by:Janvi
    First published:

    Tags: Health, Mental Health, Mental Stress, Stress

    அடுத்த செய்தி