செல்லப்பிராணிகள் தினம் - கொரோனா அச்சுறுத்தல் தருணத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்கும் வழிகள் என்ன..?

”கொரோனா வைரஸ் நாய் , பூணை மூலம் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.”

செல்லப்பிராணிகள் தினம் - கொரோனா அச்சுறுத்தல் தருணத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்கும் வழிகள் என்ன..?
நாய்
  • Share this:
கொரோனா வைரஸ் நாய் , பூணை மூலம் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அவற்றை பாதுகாப்பான முறையில் பராமரிப்பது அவசியம். எனவே இந்த நேரத்தில் செல்லப்பிராணி வளர்ப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம்.

செய்ய வேண்டிய விஷயங்கள் :

செல்லப் பிராணியை தொட்டாலோ அல்லது உணவு அளித்தாலோ உடனே கைகளை கழுவ வேண்டும். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் செல்லப்பிராணிகளை தொடவோ, கொஞ்சவோ செய்யாதீர்.


செல்லப் பிராணி உடல் நிலை சரியில்லை எனில் உடனே கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசுங்கள். தெருநாய்களை பராமரிப்பதிலும், உணவளிப்பதிலும் அச்சம் வேண்டாம் என அந்த தெருவில் வசிப்போரிடம் கூறுங்கள்.

வெயில் காலம் என்பதால் செல்லப்பிராணிகள் மட்டுமல்லாது தெருநாய்களுக்கும் தண்ணீர் கொடுங்கள்.

செய்யக் கூடாத விஷயங்கள் :

செல்லப்பிராணிக்கு முத்தம் கொடுப்பதை தவிர்க்கவும். செல்லப் பிராணிகளுக்கும் மாஸ் அணிவிக்காதீர்கள். அதனால் அவை மூச்சுவிட சிரமப்படும்.

மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாகவே தடுப்பு ஊசிகளை போடாதீர்கள்.

தெருநாய் அல்லது செல்லப்பிராணிகளுக்கு ஏதாவது உடல்நலக் குறைபாடு அறிகுறி தென்பட்டால் அருகில் செல்வதை தவிர்க்கவும். அதேபோல் அருகில் நின்று உணவளிப்பதையும் தவிர்க்கவும். உடனே கால்நடை மருத்துவரை தொடர்புகொள்ளவும்.

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading